
(‘Tut’ அரசரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் அவரது மனைவி மற்றும் உறவினர்கள்- ‘Mysteries of Egypt’ திரைப்படத்தின் காட்சி)
“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக”- ‘Tutankhamun’ அரசர்.
இதற்கு முந்தய பதிவுகளுக்கு சிறப்பான வரவேற்பை தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இப்பதிவினை படிக்கும் அன்பர்கள் அவர்களது கருத்துக்களையோ, கேள்விகளையோ பின்னூட்டம் இட்டால் நாம் இன்னும் அதிகமான தகவல்களை திரட்டவும், பகிர்ந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.
மேல் காணப்படும் வாசகம், ‘Tut’ அரசரின் நுழைவாயில் பொறிக்கப் பட்டிருக்கும் பழங்கால எழுத்துக்களின் பொருளாக இதுவரைக் கருதப் படுகிறது. இதற்கு பின் ஆராய்ச்சியின் மேம்பாட்டால் செதுக்கப் பட்டிருக்கும் அந்த சொற்களுக்கு அர்த்தம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
‘Howard Carnorvon’னின் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ‘Tut’ அரசரின் கல்லறையை கண்டு பிடித்த பிறகு இந்த வாசகத்தை படிக்காமலா நூழைந்திருப்பார்கள்? இதைப் படித்த பிறகே அவர்கள் சென்றிருக்கிறார்கள். ஏன் சென்றார்கள்? இதற்கான பதிளை நண்பர் ராகவன் இதற்கு முந்தய பதிவின் பின்னூட்டரதில் எழுதியிருக்கிறார்.
பொதுவாகவே நமக்குக் கிடைத்த பரிசை நாம்தானே முதலில் திறக்க நினைப்போம். ஆனால் ‘Tutankhamun’ அரசரின் கல்லறையை பல வருடங்களாக தேடிய இந்த ஆராய்ச்சிக் குழுவினர் சற்று வித்தியாசமானவர்கள். அங்கு கால் இடரி விழுந்த ஒரு எகிப்திய சிறுவனை உள்ளே நூழைந்து பார்த்து வரும்படி கூறியிருக்கிறார்கள். (இதை படிக்கும் பொழுது சற்று வேதனையாகதான் இருந்தது. மருத்துவர் குரங்கிற்கு முதலில் மருந்தை கொடுத்து சோதிப்பதை போல இருக்கிரதல்லவா?) அந்தச் சிறுவன் எவ்வித பாதிப்பும் இன்றி வெளியில் வந்தவுடன் அவர்கள் நிம்மதி பெருமுச்சு விட்டிருக்கிறார்கள்.
பின்பு ‘Howard Carnorvon’ குழுவினர் இந்த வாசகத்திற்கு பல மதிரியான ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். தன் உயிராயிற்ரே! எதனால் ஆய்வு? பழங்காலத்து எழுத்துக்கள் பல விதமான அர்த்தங்களை தந்துவிடும். உதாரணத்திற்கு ‘Da Vinci Code’ படத்தை போல, கின்னத்திற்கும், பெண்களுக்கும் ஒரே குறி எழுத்து ‘V’. அதனால் நுழைவாயில் இருக்கும் அந்த எழுத்துக்களுக்கு மறைமுக அர்த்தங்கள் இருக்கின்றதா, என்பதைக் காண்டு பிடிக்க இந்த ஆய்வு நடத்தப் பட்டது.
‘Tut’ அரசரின் நூழைவாயில் உள்ள எழுத்துக்களின் ஆய்வின் குறிப்புகள் எதுவும் கிடைக்க வில்லை. படித்தவர்கள் இருப்பின் பகிர்ந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
இறுதியாக ஆராய்ச்சிக் குழுவினர், இதை மக்களின் கவனத்தை திருப்ப நினைக்கும் வாசகமாக கருதினர். இவர்கள் கணிப்பின் படி உள்ளே விலை மதிக்க தக்க புதையல் இருக்கலாம் எனவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் இதில் முக்கிய தடயங்கள் இருக்கலாம் எனவும் கருதினர்.
இவர்களது கணிப்பு 100% சரியே! உண்மையாகவே உள்ளே சென்றவர்கள் யாரும் முதலை, சிங்கம் மற்றும் குதிரைக்கு உணவாகவில்லை. ‘Tutankhamun’ அரசரின் கல்லறை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்ததாகவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் முழுமையடைந்ததாகவும் குறிப்பிட பட்டுள்ளது. முக்கியமாக விலைமதிக்க தக்க புதையலும் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்படியானால் ‘Tut’ அரசரின் சாபம் எனக் கருதப் படும் அந்த வாசகங்கள் எவ்வாரு அவர்களை துரத்தியது?
நண்பர் ராகவன், 3300 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் படி செய்துவிட்டு சென்றிருப்பது முறையா என கேட்டிருந்தார்.
என்னை பெருத்த வரையில் இது தவறாக இருந்தாலும், இதில் ஒரு நன்மையும் இருக்கவே செய்கிறது. மனிதனின் சுயநலத்தால் உலகத்தில் இருக்க வேண்டிய பல முக்கியமான விசயங்களை நாம் இழந்துவிட்டோம்.
உதாரணத்திற்கு துர்க்கி நாட்டில் இருந்த ‘TEMPLE OF ARTEMIS’. உலக அதிசயத்தில் ஒன்றான இந்தக் கோவில் இப்பொழுது இல்லை. இதன் உண்மை வடிவம் நமக்கு தெரியாது. வரைபடத்தில் மட்டுமே காண்கிறோம். இதற்கு காரணம் என்ன? மனிதனிடத்தில் உள்ள தீய குணங்கள்தானே.
‘Tut’ அரசரின் சாபத்தால் அந்த கல்லறைக்குள் சென்ற அனைவரும் இறந்துவிட இல்லை. உதாரணம் முதலில் நுழைந்த அந்தச் சிறுவன். இறந்தவர்கள் மனதில் எதோ ஒரு தவறான எண்ணம் இருந்துருக்களாம். தவறான எண்ணத்தால் பாதிப்படைந்திருக்கலாம் அல்லவா?
இதனால் அராய்ச்சியும் தவறு என்று நான் சொல்லவில்லை. அடுத்தவருக்கு பதிப்பை எற்படுத்தாத வரையில் அது சிறந்ததே.
வீன் அரட்டையால் போதுமான அளவிற்கு நான் தகவல்களை கொடுக்க தவறியிருந்தால் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அடுத்த பதிவில் மேலும் பல விசயங்களை பார்க்கலாம்.

(‘Tut’ அரசர் கல்லறையினுள் எடுத்துச் செல்லப் படுகிறார்- ‘Mysteries of Egypt’ திரைப்பட காட்சி)

(கல்லறையில் இருக்கும் விலைமதிபற்ற பொருட்கள்- உண்மைக் காட்சி- ஆரம்பத்தில் இவற்றை ‘England’துக்கு ஆராய்ச்சியின் பெயரில் எடுத்துச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள்- அவரும் இறந்து விட்டார்)
-நன்றி-
–விக்னேஷ்–
மீண்டும் அடுத்தப் பயணத்தில் நாம் இணைவோம் தோழர்களே!
‘Tutankhamun’ அரசரின் பயணம் தொடரும்………….

/////////////////////////////////////
மனிதனின் சுயநலத்தால் உலகத்தில் இருக்க வேண்டிய பல முக்கியமான விசயங்களை நாம் இழந்துவிட்டோம்.
/////////////////////////////////////
இது முற்றிலும் உண்மை.
நீங்கள் என்ன சரித்திர ஆராய்ச்சியாளரா. . . . . ?
//நீங்கள் என்ன சரித்திர ஆராய்ச்சியாளரா. . . . . ?//
இல்லை தோழரே. நான் படித்த்வற்றைத்தான் கூற்கிரேன்.
தொடர்ந்து எழுதுங்கள், இண்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது….
//தொடர்ந்து எழுதுங்கள், இண்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது….//
நன்றி தோழரே நிங்களும் தொடர்ந்து படித்து வாருங்கள்.