தினமும் சரித்திரக் கதைக்ளை எழுதி உங்களை போர் அடித்ததற்கு மன்னிக்க வேண்டும். இப்படியே தினமும் வரலாற்றுத் தகவல்களை எழுதிக் கொண்டிருந்தால் ‘ஐயோ வந்துட்டாயா ப்லேடுனு’ என் பெயரைக் கண்டவுடன் நகர்ந்துவிடுவீர்கள் என்பது நன்றாகத் தெரியும். சரி நாம் அவ்வப்போது வேறு தகவல்களையும் சற்று காண்போம்.
ஐயோ! எப்பப் பாரு டென்ஷன்! டென்ஷன்! டென்ஷன்!
தற்போதைய நிலைமைக்கு மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. கலையில் கண்விழிக்க டென்ஷன், வேலைக்கு கிளம்ப டென்ஷன், வேலையே டென்ஷன், வீட்டுக்கு வந்தாலும் டென்ஷன்.வாழ்க்கையா இது? சே என்று நினைத்து சாமியாராய் போனவர்களும் உண்டு, தற்கொலை செய்துக் கொண்டவர்களும் உண்டு. அண்மையில் நான் படித்த பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் மன அலுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துக் கொள்பவர்களில் ஜப்பானியர்கள் முதலிடத்தை வகிக்கிறார்களாம். எதனால் இந்த டென்ஷன்?? வழ்கைல பல பிரச்சனைங்க- 99% இந்த பதிலைதாங்க சொல்விங்க.
என் வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கிறது, அதனால்தான் மன அழுத்தம் சுலபமாக என்னை தாக்கிவிடுகிறது என்று உங்கள் இயலாமையை நிங்களே ஒத்துக் கொள்ளலாம். நீங்கள் நினைத்தது எவ்வளவு உண்மை. பிரச்சனைகள் இருப்பது மனிதனுக்கு ஒரு பிரச்சனை இல்லைங்க!
ஓகே! ஓகே! டென்ஷ்ன் ஆகம தொடர்ந்து படிங்க.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
நன்மையோ, தீமையோ நமக்கு எற்படும் பாதிப்புகள் அனைத்தும் நாமகவே எற்படுத்திக் கொள்வதுதான். பிரச்சனைகள் மனிதனின் வாழ்க்கை மேன்பாடடைய உதவும் கருவியாகும். நீங்கள் தற்பொழுது நின்று கொண்டிருக்கும் புள்ளிக்கும் உங்களது இலக்குக்கும் வேறுபாட்டை எடுத்துரைக்கும் நண்பண்கள் தான் இந்த பிரச்சனைகள்.
பிரச்சனைகள் எப்பொழுது உங்களை விரட்டத் தொடங்குகிறது? நீங்கள் விரும்பியது கிடைகாத பட்சத்தில், நினைத்தது நடக்காத நேரத்தில், நிங்கள் இருக்கத் தகாத இடத்தில் இருக்கும் சமயத்திலும், உங்கள் வாழ்வின் இலக்கு தவரும் சமயத்திலும் உங்களை சரிபடுத்த பிரச்சனைகள் உதவுகிறது.
ஒரு பிரச்சனையை தீர்தப்பின் இன்னோன்று ‘AC’ போட்டு வரிசையில் அமர்ந்துக் கொண்டிருக்கும். நீங்கள் பகைவன் என நினைத்தால் ‘TV’ சீரியலை விட மோசமனது பிரச்சனைகள். சரி பிரச்சனைகளை என்படி தீர்பது? மனிதன் வாழும் வரை பிரச்சனைகள் தீராத ஒன்ரே! பிரச்சனைகளை உங்கள் நண்பணாக எற்று அழைத்துச் செல்லுங்கள் உங்கள் சுமை சிறுகச் சிறுக குறையும். சங்குச் சுட்டாலும் வென்மைத் தரும் என்பது போல வாழ்க்கை அடிபட அடிபட செழிப்பாகும்.
பிறந்த குழந்தை, இறந்த மனிதன் இவர்களைத் தவிர பிரச்சனைகள் இல்லாதவர்கள் யார்? யாரும் இல்லை- இதுதானே உங்கள் பதில். நாட்டுத் தலைவர், ஆண், பெண், கிழவன், இளைஞன் என யாரையும் விட்டுவைப்பதில்லை பிரச்சனைகள். இவர்களுக்கிடையே உள்ள பிரச்சனைகள் வித்தியாசப் படுகிறதே தவிர, அவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு என்பதே உண்மை.
பிரச்சனைகளின் உதவியோடு சிறந்த வாழ்க்கையை தேடிச் செல்வோம், தெடிய பொருள் கிடைக்கும் என நம்பிக்கைக் கொள்வோம்.
பலப் பிரச்சனைகளின் பாதிப்பின் காரணமாக சில சமயங்களில் இந்த பூமியும் பைத்தியக்காரனைப் போல் சுழல்வதை நாம் காண்கிரோம். என்ன செய்வது? பிரச்சனைகள் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை சுவையற்று போய்விடுமே!
நிண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர் ஒருவர் முகத்தில் சோர்வுடன் காணப்பட்டார். காரணம் கேட்டதில் பிரச்சானை என்றார். அதை அசைப் போட்டதில் இதை எழுதத் தோன்றியது. இதை வலைப்பதிவு நண்பர்களாகிய உங்களுடனும் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
தட்டச்சு செய்ததில் எனக்கு டென்ஷனாகி விட்டது. நான் சென்று வருகிறேன்.

(மன அழுத்தத்தை உணரும் சமயங்களில்- மேல் காணும் படத்தில் உள்ளதைப் போல் முதுகுப் பகுதியை நேர் செய்து கழுத்திற்கு பயிற்சிக் கொடுங்கள். மன இருக்கம் குறைவதை உணர முடியும்)
-நன்றி-
–விக்னேஷ்–

A lifetime of happiness! No man alive could bear it: it would be hell on earth.
– George Bernard Shaw
இது இன்று கூகிளில் பார்த்தது. உங்க இடுகைக்கு பொருத்தமானது…
*****
நீங்கள் பகைவன் என நினைத்தால் ‘TV’ சீரியலை விட மோசமனது பிரச்சனைகள்.
*****
சே ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.
// lifetime of happiness! No man alive could bear it: it would be hell on earth.
- George Bernard Shaw
இது இன்று கூகிளில் பார்த்தது. உங்க இடுகைக்கு பொருத்தமானது…//
ஐயா Bernard Shaw எங்கே, நான் எங்கே, அந்த வரிகலுக்கு முன் இந்த பதிவு சிறு புள்ளியாக கூட தெரியாது.
வெங்கட்ராமன் சார், இந்த சீரியல் இருக்கே. அப்பாட! என்னத்த சொல்ல…..