
(பொருட்காட்சி சாலையில் இருக்கும் பொருட்கள்)
‘Lembah Bujang’கில் இருக்கும் கட்டிட சுவடுகளின் வயது 1500க்கும் மேல் இருக்கலாம் என தற்போதய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த இடம் அக்காலத்தில் மேன்பாடடைய முக்கிய காரணம், நான் முன்பு குறிப்பிட்ட 3 நதிகளும், கடல் வழி வியாபரத்திற்கு ஏதுவாக இருக்கும் அமைப்பும் தான். இங்கு 50க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளன. இதுவரையில் விரல் விட்டு என்னக் கூடிய அளவிளான சிலைகளே கிடைத்திருக்கின்றன. இந்தக் கோவில்களில் சில, இந்த இடம் கடாரம் என பெயர் பெருவதற்கு முன்பாகவே, குறிப்பாகச் சொல்லப் போனால் நாகரிகம் அடைந்து வந்த கால கட்டத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
‘Lembah Bujang’-கில் நாம் அணைவரையும் அதிகமாக கவரக் கூடிய இடமாக அமைவது ‘Pengkalan Bayang Merbok’. இந்த இடத்தில்தான் ‘Lembah Bujang’ தொள் பொருட்காட்சி சாலை அமைந்துள்ளது. நாம் இங்கு இருக்கும் சமயம் ஒரு வித்தியாசமான உணர்வை அறிய முடியும். மனம் சாந்தம் பெற்ரு, ஒரு அமைதியான சூழ்நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு வேலை ஆட்கள் இல்லாத சமயத்தில் நான் சென்றதனாலா என்று தெரியவில்லை.
ஆய்வுகள் ஹிந்து-பௌத்த ஆட்சிகள் 2-ஆம் நூற்றாண்டில் தொன்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளன. இதற்கான விளக்கத்தை ‘Gangga Negara’ எனும் பதிவில் நான் தந்துள்ளேன். சரி தொள் பொருட்காச்சி சாலையில் என்ன இருக்கிறது?
கற்களால் செய்யப்பட்ட பெட்டிகள், கற்களால் செய்யப்பட்ட மேஜைகள், இரும்பால் செய்யப்பட்ட பொருட்கள், இராஜேந்திரக் சோழரின் ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட இந்திய நாணயங்கள், படங்கள் மற்றும் குடங்கள் போன்ற கை வேலைப்பாட்டால் செய்யப்பட்ட பொருட்களும் அடங்கும். இருந்தாலும் அப்பொருட்கள் முழுமை இல்லாமல், ஒன்றும் பாதியுமாக இருப்பது மனதிற்கு முழு திருப்தியை தர மறுக்கிறது.
‘Lembah Bujang’கில் பெருவாரியான இடங்கள் இன்னமும் கண்டுபிடிக்கப் படாமல் மறைந்துக் கிடக்கின்றன. அதற்கு எற்றவாரு மக்கள் அணைத்து இடங்களுக்கும் செல்ல முடியாதபடி இங்குள்ள சட்டத்திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் ‘Lembah Bujang’ மற்றும் கெடா மாநிலத்தின் உண்மையான வரலாற்றை தெரிந்துக் கொள்வதிலிருந்து தடுப்பதற்காகத்தான் என்பது என் கருத்து. சில தகவல்கள் இங்கு உள்ள கட்டிடத் தளங்கள் அணைத்தும் இஸ்லாமிய மதம் வருவதற்கு முன் இங்குள்ள ஊர் மக்களால் கட்டப் பட்டது என்வும் குறிப்பிட்டுருக்கின்றன.
இராஜேந்திரச் சோழரின் ஆட்ச்சியின் போது விலைமதிகத்தக்க பொருட்கள் எதோ ஒரு இடத்தில் மிக பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் உள்ளன. பெரும் காடாக இருக்கும் இந்த இடத்திற்கு சென்ற சிலர் திரும்பாமலும் இருந்திருக்கிறார்கள் எனவும் தகவல்கள் கூறுகிறன. எந்த அளவிற்கு உண்மை என்பது யாரிக்குத் தெரியும்.
அதுமட்டுமின்றி மாபெரும் கோவில், பாதைகள், குகை வாசல் என பல முக்கிய தளங்களை மனிதனுக்கும் அற்பாற்பட்ட சக்திகளால் காக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

(கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிலையுருவங்கள்)

(பொருட்காட்சி சாலையினுள்)
-நன்றி-
–விக்னேஷ்–
பயணம் தொடரும்…………………..

விக்னேஷ்,
பதிவுக்கு மிக்க நன்றி. அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
உங்கள் பயணம் மேலும் தொடர என் வாழ்த்துகள்…….
நன்றி வெற்றி சார், தொடர்ந்து படித்துவாருங்கள்……
நன்றி ரேணு……
இராஜேந்திரச் சோழரின் ஆட்சியின் காலங்களைகள் குறித்த உங்கள் பதிவு பாராட்டுக்குறியது.
//இந்த இடம் கடாரம் என பெயர் பெருவதற்கு முன்பாகவே//
கடாரம் எனும் பெயரும், அது வழங்கப்பட்ட விதம் குறித்த பதில்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
நன்றி
நன்றி அருண்