சர சர வென சத்தம்-
சலங்கையும் தோற்றதடா!
பட பட வென விழுதே-
என் வீட்டுத் தகரம் மெத்தளமோ!
தள தள வென வளர்ந்தது-
தோட்டத்துப் பயிர்களுமே!
சிலு சிலு வென என் தேகம்-
நான் நனைகயிலே!
அனுதினமும் நான் எதிர்பார்க்கிறேன்-
அந்தக் கிராமத்து மழையை!
நித்தம் பார்க்கையில் வெறுக்கிறேன்-
இந்த நகரத்து மழையை!
-நன்றி-
–விக்னேஷ்–

malayil nanaitheno theriya villai eemaku-unn
kavithaiyil nanaikindren padithathil indru….
malayil man vaasanai arinthathillai nedru-unn
varigalil varukiratho man vasanai indru….
kaviyarasum thorpaano anuthinam-unn
kavithaiku nadanam aaduvall urvasi enuthinam…
நித்தம் பார்க்கையில் வெறுக்கிறேன்-
இந்த நகரத்து மழையை!
நானும்
உண்மை தான் தோழரே…… நகரத்து மழையை ரசிபவர் யார்?
விக்னேஷ், நீங்க என் மெயிலில் தொடர்பு கொள்ளுங்க. உங்க ப்ளாக் டெக்னிகல் ப்ராப்ளம்ஸை சால்வ் பண்ணலாம்.
நகரத்து மழையிலும்
நன்மையுண்டு நண்பரே
நகரப்பேருந்து காணும்
நல்லதொரு குளியல்!
நகராச் சாக்கடைகள்
நகர்ந்தோடும் அறிக!
//நகரத்து மழையிலும்
நன்மையுண்டு நண்பரே
நகரப்பேருந்து காணும்
நல்லதொரு குளியல்!
நகராச் சாக்கடைகள்
நகர்ந்தோடும் அறிக!//
எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிங்க ஐயா…. நீங்கள் என் வலைபதிவு பக்கம் வந்தது பெருமையாக உள்ளது. தொடர்ந்து வருவீர்கள் என் பெரிதும் நம்புகிரேன்.
சிலுசிலுவெனக் கிராமத்து (கவிதை) மழையிலே
சுகமாக நனைந்து கொண்டிருந்த வேளையிலே
தடதடவென நகரத்து மழையை ஞாபகப் படுத்துதல்
நியாயமா சொல்லுங்கள் நண்பரே!
கிராம வாழ்க்கை ஒரு வரம் தோழரே