
(தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் பழங்கால இந்து ஆலயம்)
‘Langkasuka’ மலாய் மொழியில் இப்படி அழைக்கிறார்கள். தற்பொழுது இந்த இடம் இருந்த தளத்தை ‘பத்தானி’ என அழைக்கிறார்கள். ‘பத்தானி’, தாய்லாந்து மட்டும் மலேசிய இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஊர். ‘Langkasuka’ 2-14-நூற்றாண்டு வரையில் மலாயா மண்ணில் புகழ் பெற்ற அரசாங்கமாகும்.
முக்கியமாக இது ஒரு இந்து ஆரசாங்கம் என்பது யாராலும் மறுக்கப்படாத ஒன்றாகும். இதை ‘இலங்கா அசோக்கா’ என குறிப்பிட்டுள்ளார்கள். ‘Langkasuka’ மலாயா மண்ணில் ஆரம்ப காலங்களில் தோன்றிய முழுமை பெற்ற அரசாங்கமாகவே கருதுகிறார்கள். ‘Gangga Negara’-வை அடுத்து உதித்த இந்த அரசாங்கம், அதன் ஆட்சி தளதை அடிக்கடி மாற்றாமள் ஒரே இடமாக அமைத்திருக்கிறது. அனால் இந்த அரசாங்கத்தைப் பற்றிய அராய்ச்சிகள் ‘Lembah Bujang’-கை போல் இன்றளவும் நடக்கின்றதா என்பதை பற்றிய தகவல்களை திரட்டுவது சிரமமாகவெ உள்ளது. இதற்கான தகவல்கள் அதிகபடியாக தாய்லாந்து மொழியில் வெளியாவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ‘Langkasuka’ தற்பொழுது ‘Pattani’-யில் பழமை வாய்ந்த பௌத்த கோவில்கள் உள்ளதாக என்னுடன் பல்கலைகளகத்தில் படித்த தாய்லாந்து நண்பரொருவர் கூறினார்.
ஆரம்ப காலங்களில் ‘Langkasuka’ இந்தோனேசியாவின் சிரிவிஜயா அரசாங்கத்தின் முக்கிய வியாபார மையமாகவும் விளங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். 1963-ஆம் ஆண்டு Stewart Wavell என்பவர் இவ்விடத்தைதில் செய்த ஆராய்ச்சியை தனது ‘the naga kings daughter’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலங்களில் இராஜேந்திரச் சோழனின் ஆட்ச்சியின் போது ‘Langkasuka’ கடாரத்தின் ஆட்சியின் கீழ் இருந்ததாக கூறப்படுகிரது. பிற்காலங்களில் அது மலாயவை விட்டு பிறிந்து விட்டலும் கோவில், வயற்காடு என இந்தியர்களின் பாரம்பரியத்தை இன்றளவும் கான முடிகிறது.

(‘Langkasuka’ சாம்ராஜியத்தின் வரைபடம்)
நன்றி
-விக்னேஷ்-

நல்ல ஆராய்ச்சி. இந்த இடத்துக்கெல்லாம் போயிருக்கிறீர்களா? போகும் எண்ணம் உள்ளதா?
போனதில்லை ஹரி சார். lembah bujang சென்றிருக்கிறேன். வரலாற்று மிக்க இடங்கள் அனைத்திற்கும் செல்ல அசை இருக்கிறது.