
(தந்தயின் பாசம்)
தமிழ் பள்ளி ஒன்றில், அசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி விவாதித்த சமயத்தில், வகுபிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை எழுப்பினான்.
மாணவன்: ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாலம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாரு அவர்களின் பாசம் நீடிக்கும் படி செய்வது?
ஆசிரியர்: உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா? சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்வாய்.
மாணவன்: சொல்லுங்கள் ஐயா செய்கிறேன்.
ஆசிரியர்: நம் பள்ளி திடலுக்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ் நோக்கி பார்த்தவாரே நட. அதில் மிக அழகாக காட்சியலிக்கும் ஒரு புல்லை தேர்வு செய்து கொண்டுவா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்.
மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அம்மாணவனின் கையில் எந்த ஒரு புல்லும் காணவில்லை.
ஆசிரியர்: நான் கொண்டு வரச் சொன்ன புல் எங்கே?
மாணவன்: நான் புற்களை பார்த்தவரு நடந்துக் கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான புற்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான புல். ஆகயால் நான் தொடர்ந்து நடந்தேன். பின் இருந்த புற்கள் சில அழகாக இருந்தது ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது. இறுதியில் என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமற் போனது.
ஆசிரியர்: அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நன் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது. அவர்களின் பாசத்தை மாரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேருபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுக துற்கங்களை பகிர்துக் கொண்டு நம் மீது பாசம் காட்டுபவரிக்கு, நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.
நன்றி
-விக்னேஷ்-

ayya ninggal en kangalai tiranthu vithirgal….nandri ayya…nandri ayya
//ayya ninggal en kangalai tiranthu vithirgal….nandri ayya…nandri ayya//
மிக்க நன்றி அரசு…..
விக்னேஷ் கதை நன்றாக உள்ளது.
****************
நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நன் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது.
****************
Super
//விக்னேஷ் கதை நன்றாக உள்ளது.//
பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே….
அப்துல் கலாமின் கனவுலகத்திற்கு செல்ல வில்லையா? ஹிஹிஹி சும்மா காமடி கொபம் கொள்ள வேண்டாம்.
நல்ல அருமையான கருத்து.
வாழ்த்துக்கள்.
//நல்ல அருமையான கருத்து. வாழ்த்துக்கள்.//
நன்றி ஜோசப் தொடர்ந்து படித்து வாருங்கள்
kathai arumai… thodarungal
நல்ல வாழ்க்கைக்கு தேவையான கருத்து… இந்த கருத்தை முன்பே எங்கோ கேட்ட ஞாபகம் இருக்கு.
நல்ல கருத்து
கார்த்திக், ஹரி மற்றும் சேதுக்கரசி அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து படித்து வாருங்கள்.