இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது முது மொழி. இதுதான் இன்றய பெரும்பாளோரின் நிலை. வெளிநாட்டு மோகம் எதனால் ஒரு மனிதனினை பாதிக்கின்றது? ஒரே சொல் பணம். இங்கு இருப்பதை விட நான் அங்குச் சென்றால் பல மடங்கு அதிகமாக சாம்பாரிக்க முடியும். என் குடும்பம் இங்கு சந்தோஷமாக வாழும் என நினைக்கின்றான்.இது எந்த அளவிற்கு உண்மை? அங்கு உள்ள வாழ்கை முறை, மக்கள், உணவு என எவ்வளவோ விசயங்கள் தனக்கு தோதாகுமா என அவன் யோசிக்க தவறுகிறான். நோய் வாய்ப்பட்டால் கவனிக்க தாயோ, மனைவியோ இருக்க மாட்டார்கள். சொன்ற இடத்தில் நிரந்திர வேலை கிடைக்கிறதா? எவ்வளவு சன்மானம் என தெரிந்துக் கொண்டுதான் செல்கிறானா? இப்படி வெளிநாட்டிற்கு வெலைக்குச் செல்பவர்களில் குறைந்த அளவிலானவர்களே அனைத்து தகவல்களையும் அறிந்துக் கொண்டு செல்கிறார்கள். வெளி நாடுகளுக்குச் சென்று சிரமத்திற்கு ஆளாகுபவர்களில் பெரும்பாலோனோர் படிப்பறிவு குறைந்தவர்களே. அவர்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் தருனத்தில் உதவி செய்ய காத்திருக்கும் தனது தாய் நாட்டின் தூதரகத்தையே தெரியாமல் சிலர் இருக்கிறார்கள். இவர்களது கண்களில் சுலபமாக மண்னைத் தூவும் எஜண்டுகள். சரிவர ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாலி என கினற்று தவளையாக செல்பவர்கள் எப்படியெல்லாம் மிதிபடுகிறார்கள். நிறைய தமிழ் நாட்டு அன்பர்கள் மலேசியாவில் வேலை செய்கிறார்கள். வாழ்வில் முன்னேற நினைத்து கடல் கடந்து வந்திருக்கும் இவர்களை காண்கயில் மகிழ்ச்சியே. கடந்த எப்ரல் மாதத்தில் வெளிவந்த பத்திரிக்கை செய்தி ஒன்று என் மனதை பாதிக்கவே செய்தது. தன் தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு தமிழக ஊழியரை கொடுமை படுத்தி சாகடித்திருக்கிறார் அத்தொழிற்சாலை முதலாலி. மலேசிய தமிழர்கள் உண்மையில் வெக்கப் பட வேண்டிய விசயமிது. தமிழனே தமிழனை சாப்பிடும் நிலை என்றுதான் இந்த பூமியில் மாறுமோ? கடந்த ஞாயிற்று கிழமை மலேசிய நண்பன் பத்திரிக்கையில் இந்த கவிதையை கண்டேன். மனம் வெந்து பாதிக்கப் பட்டவரின் வரிகளை நீங்களும் சற்று படித்துப் பாருங்கள்.
(நன்றி: மலேசிய நண்பன் பத்திரிக்கை)
அன்புடன்,
-விக்னேஷ்-

“தமிழனே தமிழனை சாப்பிடும் நிலை ” இது அனைத்து இனங்களிலும் உள்ள ஒரு விடையம்…..சீனனும் சீனனை சாப்பிடுகிறான்…….
“மலேசியத் தமிழன் மலாய் மொழியி பேசுகிறான்…வித்திட்டவன் யார்…?” ஆங்கில மோகத்தில் மெதக்கும் தமிழக இந்தியர்கள்………..!
மனம் வெந்து பாதிக்கப் பட்டவரின் வரி
sembanai maram kuda
engalidam senthamil pesuthada…..
un kasdanggal innum paalmarangalil uraithu kidakindrathai
poi paaradaa……
நான் அறிந்த விசயங்கள்
indiane elunthu nil….
un mannil enna illai - ni
uur pilaika inge vara….
sorgamada un thai uur - ni
purinthu kondaal vethri unakul…
முரளி மற்றும் அரசு. கருத்துக்கு நன்றி தொடர்ந்து பாடித்து வாருங்ள்
//மலேசியத் தமிழன் மலாய் மொழியி பேசுகிறான்…வித்திட்டவன் யார்…?” ஆங்கில மோகத்தில் மெதக்கும் தமிழக இந்தியர்கள்………..!//
தாய் மொழியை விடுவித்து மற்ற மொழியை நம்மினத்தவருடன் பேசிக் கொள்வது, ‘தமிழ் மெல்லச் சாகும்’ என்பதை உறுதிபடுத்துகிறதல்லவா?? தமிழ் பேசுவதும், எழுதுவதும் சிலருக்கு அவ்வளவு கேவலமாக போய்விட்டது.
கவிதை மிகவும் அருமை
தன் நிலை உயரும் போது மற்றவர்களை தாழ்த்திப் பார்க்கும் மனிதன் தான் இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறான்
//தன் நிலை உயரும் போது மற்றவர்களை தாழ்த்திப் பார்க்கும் மனிதன் தான் இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறான்//
சூப்பராக சொல்லி இருக்கிங்க வெங்கட்ராமன். இந்த நிலை மாறினால்தான் விடியல்.
I had same experience with some of Colombo based Tamils too. when we worked together in Gulf i had such experience. many times they conversate themselves with singalese for nothing with our presence. Even few Karnataka tamils also did the same.
The basic thing is just to show that I know something more than you.
//The basic thing is just to show that I know something more than you.//
வருகைக்கு நன்றி ஜோசப். நிங்கள் சொல்வதும் சரிதான். அடுத்தவரின் அறியாமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நயவஞ்சகர்கள்.