
(விளையாட்டு தளம்)
மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்த்து? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தினில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.
அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு 2000 ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சி காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்ட பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.
900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு காரணம் மாயா நகர பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்று கிடந்தது தான். இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்த்தாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கிய காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலை திறன் மிகவும் நுட்பமானது, சிற்ப கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan, Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மைகள்.
Bonampak என்ற இடத்தில் அமைந்த மாயாக்களின் சிற்ப கலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாக தங்களது ஆய்விற்கு பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் நாகரிக வளர்ச்சியை சிறப்பாக எடுத்து காட்டுகின்றன. மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில், இச்சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது ஒரு இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் மாயாக்களின் காலத்தில் பேற்றதக்கவர்களாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. சிற்பகலை வருங்கால சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் தெரிந்திருக்கிறார்கள்.
மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன. பிரமிடு, வழிப்பாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள் இந்நாகரிக வளர்ச்சிக்கு பெரிதும் துனை புரிந்துள்ளன. இவையே ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து கொள்ள துருப்பு சீட்டாய் அமைந்தது.
மாயாக்கள் பிரமீடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். மாயக்களின் நம்பிக்கைபடி, உயரமான இடத்தில் அமைந்துள்ள பிரமீடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவழிபாட்டிற்கு சொர்க வாசலை அவர்கள் நெருங்க முடிகிறது என கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதான்ங்கள் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்த்து. 1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்த்து. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதி பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாழும் வான் ஆராய்ச்சிக்கு பாயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துள்ளியமாக கணிக்கப்பட்டுள்ளன.

(மாயாக்களின் எண் முறைகள்)

அறிய செய்தி அளித்தமைக்கு நன்றி.
மிக்க நன்றி புரட்சி தமிழன் அவர்களே…. தொடர்ந்து படிங்க…
நிறைய நல்ல தகவல்களை தேடிப்பிடித்து பதித்திருக்கிறீர்கள்.
நன்றி!
மேலும் இது போன்ற பல நல்ல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி தல…
நிறைய தகவல்கள். அவ்வளவையும் மனசுல ஏத்த முடியல. இரண்டு தடவை படிச்ச சரியா பதியும்.
நல்ல தகவல்கள்.
எழுத்துப்பிழைகள் நிறம்ப உள்ளன,அதை சற்று கவனித்துக்கொள்ளுங்கள் நண்பரே !!
[...] கால மாயா நாகரீகம் பற்றிய பல தகவல்கள் தாங்கிய பதிவு. [...]
thanks CVR and Nagai Siva
எங்கிருந்து இந்த மாதிரி செய்திகளை அறிந்து கொள்கிறீர்கள் நண்பரே.
எங்களுக்கும் அறியத்தந்தமைக்கு நன்றி.
மேலும் படங்கள் இருந்தால் பதிவிடவும்.
//எங்கிருந்து இந்த மாதிரி செய்திகளை அறிந்து கொள்கிறீர்கள் நண்பரே.
எங்களுக்கும் அறியத்தந்தமைக்கு நன்றி.
மேலும் படங்கள் இருந்தால் பதிவிடவும்//
எல்லாம் செய்தி தாள்களில் படிப்பதுதான்.. பின் நூலகம் போகும் போது மேலும் சில சேகரிச்சு எழுதுவேன்…
அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே…
//மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன//
நமது அரசு குடியிருப்புக்களை கட்டும் பொறியாளர்களை அனுப்பி பார்த்து வரச்செய்யலாம் போலிருக்கின்றதே…
முப்பது வருசத்துக்குள்ள கட்டடம் இடிந்து விழும் துர்பாக்கிய நிலை இருக்காதல்லவா?!…
அனைத்து உலகளாவிய தமிழர்களுக்கும் பொங்கல் / 2039 ஆம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அருமையான பதிவு. நானும் மாயா நாகரீகம் பற்றி பல தகவல்களை வைத்திருக்கிறேன். விரைவில் அது பற்றிய கட்டுரை ஒன்றினை ஒருதகவல்.கொம் இல் வெளியிடவும் தீர்மானித்துள்ளேன். உங்களின் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.
வணக்கம் விக்னேஷ். தங்களுடைய கைப்பேசியின் எண்களை எடுத்துக் கொண்டேன். மன்னிக்கவும், மூன்று நாட்களுக்கு முன்பு ஈப்போவிற்கு வந்தேன், ஆனால் சந்தர்ப்ப வசத்தினால் உங்களை சந்திக்க முடியவில்லை. என் சின்னம்மா போகி பண்டிகை அன்று காலமாகி விட்டார். எனவே இந்த வருடம் பொங்கல் நான் கொண்டாடவில்லை. கண்டிப்பாக தாங்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடியிருப்பீர்கள். மிக்க மகிழ்ச்சி, வாய்ப்பு கிடைத்தால் வெகு விரைவில் ஈப்போவில் சந்திப்போம்.. நன்றி
அசத்தல்ங்க.. நிறைய விஷயம் சொல்லியிருக்கீங்க. நன்றி
//அசத்தல்ங்க.. நிறைய விஷயம் சொல்லியிருக்கீங்க. நன்றி //
உங்களை விடவா அசத்தலாக சொல்லிவிட்டோம்.. வருகைக்கு நன்றி.