கமுண்டிங் தடுப்புகாவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்துராப் தலைவர் பி.உதயகுமாரின் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
300க்கும் மேற்பட்ட இந்துராப் அதரவாளர்கள் அமைதி மறியலில் கலந்து கொண்டார்கள். மறியல் தடுப்பு காவல் முகாமிற்கு முன் நடைபெற்றது.
நீரிழிவு நேயினால் அவதிப் பட்டு வந்த உதயகுமார் கடந்த 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சக்கரை அளவு 18.9 ஆக இருந்தது. சோதனையில் கண் பார்வை பாதிப்புக்குள்ளானதாகவும் மருத்துவர் கூறியுள்ளார். அப்படியிருக்க ஏன் மருத்துவமனையிலிருந்து குறுகிய நாளில் அவர் மீண்டும் முகாமிற்கு அனுப்பபட்டார் என்று கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
முறையாக நீரிழிவு நோய் மருந்து வழங்கப்படுவதில்லை. உணவு மற்றும் தேநீர் போன்ற பானங்களில் கட்டுப் பாடற்ற உப்பு, சீனி போடப்பட்டுள்ளது. இவைகள் நோயாளிகளூக்கு ஏற்ற உணவல்ல என்று அவர் குற்றம்சாட்டினார்.
தேர்ச்சி பெற்ற மருத்துவர் அவரை சோதிப்பதில்லை. அவரை கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தாம் சந்தேகப் படுவதாக அவர் கூறினார்.
நன்றி,
மலேசிய நண்பன்

கவலையான ஒரு செய்தி.
எவ்வளவுதான் போராடியும் இவர்கள் 5 பேரையும் மீட்க முடியவில்லையே!
திரு.உதயகுமார் அவர்களை திட்டமிட்டு கொலை செய்வதற்கு தயாராகிவிட்டனர். அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மருந்து அம்னோவிற்கு விருந்தாக அமைந்துவிட்டது. அந்த மகாத்மா விடுதலை அடைய வேண்டும் என பிரார்த்திப்போம். தொடர்ந்து ஹிண்ட்ராப் போராட்டங்களை உங்கள் வலைத்தளத்தில் பதிவிடுங்கள்.