உன்னை பார்த்து
கொண்டிருப்பதால் தானோ
இதயம் தினமும்
துடித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்திற்கு
உயிர் மட்டும் இல்லை
விழிகளும் இருக்கிறது உன்
இதயத்தை பார்த்துக்
கொண்டே இருக்க
கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன
எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன
நினைத்த கவிதைகள்
மறந்து போனாலும்
கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட
கண்களை மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை




//கவிதை கொண்ட கண்களை // still searching for that…..
//கவிதைகள் எழுதிடத்தான் கைகள் துடிக்கின்றன//
welcome to our kaviyear (poet ) ………..
தேடுங்க தேடுங்க…
இதயத்திற்கு இதம் அளிக்கும் கவிதை…
//3 ராமநாதன்
இதயத்திற்கு இதம் அளிக்கும் கவிதை…//
நன்றி ராமநாதன். மீண்டும் வாங்க…
அழகான, ஆத்மார்த்தமான, இனிமையான கவிதை…
உன் இதயத்தைப்
பார்ப்பதற்காகத்தான்
என் இதயத்திற்கு – விழிகள்
இருப்பதாக நினைத்திருந்தேன்
பின்னர்தான் அறிந்துக்கொண்டேன்
விழிகள் அழுவதற்காக என்று!
*********
கனவில் தோன்றிய கண்களை
மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது
கனவு கலைந்தப் பிறகு – அதனை
நீண்டநாள் நினைக்கவும் முடியாது!