விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது,
மன்னர், “என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்”, எனக் கேட்டதற்கு,
“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.
ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். “மன்னா! அப்படி என்ன சொக்கு பொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே”.
“எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத்தனுப்பினேன், அவன் நமக்கு நண்பனாகி விட்டான்”, எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கெட்டு விட்டான்.
அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது.

அடிச்சு கொல்லுய்யா அந்த மந்திரிய. இப்பிடி அநியாயமா போட்டுக் குடுத்துட்டானே.
//அடிச்சு கொல்லுய்யா அந்த மந்திரிய. இப்பிடி அநியாயமா போட்டுக் குடுத்துட்டானே//
நாடே போச்சு….
//பக்கத்து நாட்டு அரசன் கெட்டு விட்டான்.//
கேட்டு விட்டானா? , கெட்டு விட்டானா?
கெட்டு போனதுக்கு யார் பொறுப்பு
//மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது//
எம்புட்டு நேரமா கிடப்பிலிருக்கிறது. கவனி நண்பா
“தொடை” குறித்து விஜய்கோபல்சாமி பரபரப்பு பதிவு. படித்துவிட்டீர்களா?
படிக்க இத்தனை சொடுக்கவும்:
http://vijaygopalswami.wordpress.com/2008/05/20/thoda/
Mr. Bhaarth techniquenng na
//“தொடை” குறித்து விஜய்கோபல்சாமி பரபரப்பு பதிவு. படித்துவிட்டீர்களா?//
படிக்காதீங்க. என்னோட அன்பு warning
சங்கர் நண்பரே… நான் இப்பொழுதுதான் வெளிநாட்டிலிருந்து திரும்பினேன்… உங்களின் பின்னூட்டங்கள் ‘அவுட்டோமெட்டிக்காக’ தெரிவு செய்யாமல் இருந்தது. மன்னிக்கவும்.
leptin says : I absolutely agree with this !
அடுத்த பதிவு எங்க. ஏன் இவ்வளவு தாமதம்
Dear sir,
Please contact me via email novinthen@puteramic.net
It is about a blogging award we are doing.
Urgent matter.
Thank you
விரைவில்
சும்மாவா சொன்னார் வள்ளுவர், “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”ன்னு
///
சும்மாவா சொன்னார் வள்ளுவர், “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”ன்னு
///
இதைச் சொன்னவர் வள்ளுவர் அல்ல. இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் மூன்று கதைக் கூறுகளில் ஒன்று இது. அந்த மூன்றாவன: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பதாகும்.
அகரம் அமுதாவா இப்படிச் சொன்னது என்று மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன்.