Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2007

45745.jpg

1999-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ‘Moscow’-வில் தன் தந்தையை கொன்ற குற்றத்திற்காக 16 வயது மாணவன் கைது செய்யப் பட்டிருக்கிரான். இவன் தன் தந்தையை கொன்று, அவரது உடலை சிறு துண்டுகளாக கூறு போட்டிருக்கிரான். பின் தினமும் அந்த இறைய்ச்சித் துண்டுகளை தான் செல்லமாக வளர்த்த பூனைகளுக்கு உணவளித்திருக்கிரான்.

Moscow போலிசார் கூறுகையில், தன் தந்தையின் அளவிற்கு அதிகமான குடி போதயால் மன நேய்க்குள்ளான அச்சிறுவன், போதையில் இருந்த தந்தையின் மண்டையை கோடாரியால் உடைத்திருக்கிரான். போலிசார் காண்கயில் சமயலறையில் பத்திற்கும் மேற்பட்ட பூனைகள் வேக வைத்த மனித உடலை தின்று கொண்டிருந்தனவாம். அது மட்டுமின்றி குளிர்சாதன பெட்டியின் முழுவதும் மனித இறைய்ச்சி துண்டுகள் சிறியதாக வெட்டி வைக்கப் பட்டிருந்ததாம்.

‘Moscow’ போலிஸ் கூட தமிழ் பட பேலிஸ் மதிரி கடைசியாதான் வராங்க பாருங்களேன்!

எமது அடுத்த பதிவு சோழர் கண்ட ‘Gangga Negara’

-நன்றி-

–விக்னேஷ்–

Advertisements

Read Full Post »

tut42b.jpg

(‘Tut’ அரசரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் அவரது மனைவி மற்றும் உறவினர்கள்- ‘Mysteries of Egypt’ திரைப்படத்தின் காட்சி)

“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக”- ‘Tutankhamun’ அரசர்.

இதற்கு முந்தய பதிவுகளுக்கு சிறப்பான வரவேற்பை தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இப்பதிவினை படிக்கும் அன்பர்கள் அவர்களது கருத்துக்களையோ, கேள்விகளையோ பின்னூட்டம் இட்டால் நாம் இன்னும் அதிகமான தகவல்களை திரட்டவும், பகிர்ந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.

மேல் காணப்படும் வாசகம், ‘Tut’ அரசரின் நுழைவாயில் பொறிக்கப் பட்டிருக்கும் பழங்கால எழுத்துக்களின் பொருளாக இதுவரைக் கருதப் படுகிறது. இதற்கு பின் ஆராய்ச்சியின் மேம்பாட்டால் செதுக்கப் பட்டிருக்கும் அந்த சொற்களுக்கு அர்த்தம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

‘Howard Carnorvon’னின் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ‘Tut’ அரசரின் கல்லறையை கண்டு பிடித்த பிறகு இந்த வாசகத்தை படிக்காமலா நூழைந்திருப்பார்கள்? இதைப் படித்த பிறகே அவர்கள் சென்றிருக்கிறார்கள். ஏன் சென்றார்கள்? இதற்கான பதிளை நண்பர் ராகவன் இதற்கு முந்தய பதிவின் பின்னூட்டரதில் எழுதியிருக்கிறார்.

பொதுவாகவே நமக்குக் கிடைத்த பரிசை நாம்தானே முதலில் திறக்க நினைப்போம். ஆனால் ‘Tutankhamun’ அரசரின் கல்லறையை பல வருடங்களாக தேடிய இந்த ஆராய்ச்சிக் குழுவினர் சற்று வித்தியாசமானவர்கள். அங்கு கால் இடரி விழுந்த ஒரு எகிப்திய சிறுவனை உள்ளே நூழைந்து பார்த்து வரும்படி கூறியிருக்கிறார்கள். (இதை படிக்கும் பொழுது சற்று வேதனையாகதான் இருந்தது. மருத்துவர் குரங்கிற்கு முதலில் மருந்தை கொடுத்து சோதிப்பதை போல இருக்கிரதல்லவா?) அந்தச் சிறுவன் எவ்வித பாதிப்பும் இன்றி வெளியில் வந்தவுடன் அவர்கள் நிம்மதி பெருமுச்சு விட்டிருக்கிறார்கள்.

பின்பு ‘Howard Carnorvon’ குழுவினர் இந்த வாசகத்திற்கு பல மதிரியான ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். தன் உயிராயிற்ரே! எதனால் ஆய்வு? பழங்காலத்து எழுத்துக்கள் பல விதமான அர்த்தங்களை தந்துவிடும். உதாரணத்திற்கு ‘Da Vinci Code’ படத்தை போல, கின்னத்திற்கும், பெண்களுக்கும் ஒரே குறி எழுத்து ‘V’. அதனால் நுழைவாயில் இருக்கும் அந்த எழுத்துக்களுக்கு மறைமுக அர்த்தங்கள் இருக்கின்றதா, என்பதைக் காண்டு பிடிக்க இந்த ஆய்வு நடத்தப் பட்டது.

‘Tut’ அரசரின் நூழைவாயில் உள்ள எழுத்துக்களின் ஆய்வின் குறிப்புகள் எதுவும் கிடைக்க வில்லை. படித்தவர்கள் இருப்பின் பகிர்ந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். 

இறுதியாக ஆராய்ச்சிக் குழுவினர், இதை மக்களின் கவனத்தை திருப்ப நினைக்கும் வாசகமாக கருதினர். இவர்கள் கணிப்பின் படி உள்ளே விலை மதிக்க தக்க புதையல் இருக்கலாம் எனவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் இதில் முக்கிய தடயங்கள் இருக்கலாம் எனவும் கருதினர்.

இவர்களது கணிப்பு 100% சரியே! உண்மையாகவே உள்ளே சென்றவர்கள் யாரும் முதலை, சிங்கம் மற்றும் குதிரைக்கு உணவாகவில்லை. ‘Tutankhamun’ அரசரின் கல்லறை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்ததாகவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் முழுமையடைந்ததாகவும் குறிப்பிட பட்டுள்ளது. முக்கியமாக விலைமதிக்க தக்க புதையலும் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்படியானால் ‘Tut’ அரசரின் சாபம் எனக் கருதப் படும் அந்த வாசகங்கள் எவ்வாரு அவர்களை துரத்தியது?

நண்பர் ராகவன், 3300 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் படி செய்துவிட்டு சென்றிருப்பது முறையா என கேட்டிருந்தார்.

என்னை பெருத்த வரையில் இது தவறாக இருந்தாலும், இதில் ஒரு நன்மையும் இருக்கவே செய்கிறது. மனிதனின் சுயநலத்தால் உலகத்தில் இருக்க வேண்டிய பல முக்கியமான விசயங்களை நாம் இழந்துவிட்டோம்.

உதாரணத்திற்கு துர்க்கி நாட்டில் இருந்த ‘TEMPLE OF ARTEMIS’. உலக அதிசயத்தில் ஒன்றான இந்தக் கோவில் இப்பொழுது இல்லை. இதன் உண்மை வடிவம் நமக்கு தெரியாது. வரைபடத்தில் மட்டுமே காண்கிறோம். இதற்கு காரணம் என்ன? மனிதனிடத்தில் உள்ள தீய குணங்கள்தானே.

‘Tut’ அரசரின் சாபத்தால் அந்த கல்லறைக்குள் சென்ற அனைவரும் இறந்துவிட இல்லை. உதாரணம் முதலில் நுழைந்த அந்தச் சிறுவன். இறந்தவர்கள் மனதில் எதோ ஒரு தவறான எண்ணம் இருந்துருக்களாம். தவறான எண்ணத்தால் பாதிப்படைந்திருக்கலாம் அல்லவா?

இதனால் அராய்ச்சியும் தவறு என்று நான் சொல்லவில்லை. அடுத்தவருக்கு பதிப்பை எற்படுத்தாத வரையில் அது சிறந்ததே.

வீன் அரட்டையால் போதுமான அளவிற்கு நான் தகவல்களை கொடுக்க தவறியிருந்தால் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அடுத்த பதிவில் மேலும் பல விசயங்களை பார்க்கலாம்.

tut44b.jpg

(‘Tut’ அரசர் கல்லறையினுள் எடுத்துச் செல்லப் படுகிறார்- ‘Mysteries of Egypt’ திரைப்பட காட்சி)

tut02b.jpg

(கல்லறையில் இருக்கும் விலைமதிபற்ற பொருட்கள்- உண்மைக் காட்சி- ஆரம்பத்தில் இவற்றை ‘England’துக்கு ஆராய்ச்சியின் பெயரில் எடுத்துச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள்- அவரும் இறந்து விட்டார்)

-நன்றி-

–விக்னேஷ்–

மீண்டும் அடுத்தப் பயணத்தில் நாம் இணைவோம் தோழர்களே!

‘Tutankhamun’ அரசரின் பயணம் தொடரும்………….

Read Full Post »

மாணவன் – கவிதை

logo_pelajar.gif

நீ ஓடும் நதி!

அதில் தெளிந்த நீர்!

உனக்குள் ஓடி

உன் இதயத்தை நாடி

காலத்தோடு கண் விழித்து

கூர்மையோடு நீ படித்து

தேர்வுகளில் நீ வென்று

உன் திறமையை காட்டு வெளி உலகிற்கு!

தாய் தந்தயரின் அரும் புதல்வனாய்!

ராமர் போல் வாழ்வுதனில் தவப் புதல்வனாய்!

தூரநோக்கு சிந்தனைகள் பல வளர்த்தவனாய்!

சமுதாயத்தில் நீ உதித்திட வேண்டும் முதல்வனாய்!

-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

tb31.jpg

(‘Tut’ அரசரின் உடல் கண்டுபிடிக்கப் பட்ட இடம், Valley of the Kings, Tebes மலைத் தொடர், West Bank.)

அந்த எகிப்தின் ‘Mummy’-யும் இமை திறக்கும்-நீ கொஞ்சம் சிரித்தால் அது உயிர் பிழைக்கும் _ கவிப்பேரரசு வைரமுத்து.

இந்தப் பதிவினை எழுதும் பொழுது அந்த முத்தான வரிகள்தான் என் நினைவிற்கு வந்தது. ‘Mummy’கள் உயிர் பிழைத்தால் உலகத்தில் மாற்றங்கள் எற்படுமா? இல்லை அதையும் மனிதன் ‘zoo’வில் அடைத்துவிடுவானா? ஆண்டவனுக்கே வெளிச்சம்…… 1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘Howard Carter’ என்ற தொல் பொருள் ஆராய்ச்சியாளரும் அவர் தம் குழுவினரும் ‘Tutankhamun’ அரசரின் கல்லறையைய் கண்டரிந்துள்ளனர். அதிக அளவிலான செலவை கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு ‘Lord Carnarvon’ என்ற செல்வந்தரால் நிதி உதவி செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளாது.

‘Tut’ அரசரின் கல்லறை எகிப்திய நாட்டின் பாலைவனத்தில் ‘Valley of the  Kings’, (இது ‘West Bank’கில் ‘Tebes’ மலைத் தொடரில் உள்ளது) என்ற இடத்தில்  காணப்பட்டதாக கூறப் படுகிறது. இவரின் கல்லறையை கண்டு பிடித்த ஆராய்ச்சி குழுவினர் வெற்றியின் விழும்பை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்கிக் கடலில் இருந்தனர். பின் நாளில் ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டியின்’ கதையாகியது இவர்களின் நிலை. ஏன்??

‘Tut’ அரசரின் கல்லறையின் கண்டிபிடிப்பை அடுத்து ஆராய்ச்சி குழுவினருக்கு பலவிதமான பாதிப்புகளும், கஷ்டங்களும் எற்பட்டிருக்கிறது……. என்ன நடந்தது?

முதல் குறி –> ஆராய்ச்சி குழுவினருக்கு நிதி உதவி செய்த ‘Lord Carnarvon’

•i)        இவர் 4th April 1923-ல் கொசு கடித்து இறந்ததாக நம்பப் படுகிறது. கண்னத்தில் கொசு கடித்த இடமும், ‘Tut’ அரசரின் கண்னத்தில் இருந்த சிகப்பு நிறத்திலான வடுவும் ஒரே மதிரியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

•ii)       இதையடுத்து இங்கிலாந்தில் ‘Lord Carnarvon’ வளர்த்த நாய் காரணமின்றி, சாகும் வரை குரைத்து உயிர் விட்டதாகக் கூறப் படுகிறது

•iii)       ஆராய்ச்சி குழுவின் தலைவரான ‘Howard Carter’ வளர்த்த கிளி நாகத்தால் விழுங்கப் பட்டிருக்கிறது. இச்சம்பவத்தை ‘Tut’ அரசரின் தலையில் இருக்கும் மகுடத்தின் நாகத்தோடு இணைத்துப் பேசுகிறார்கள்.

•iv)       ‘Tut’ அரசருக்கு சொந்தமான சொத்துகளின் ஆய்வாளராக இருந்த ‘Arthur Mace’ எனப்படும் ஆராய்ச்சியாளர் சுய நினைவற்று (கோமா) சிறிது காலத்தில் இறந்தார்.

இந்த list போய் கொண்டே இருகுங்க…… அடுத்த பதிவில் நான் சுருக்கி எழுத முயற்சிக்கிறேன்…..

vk5.jpg

(‘Tut’ அரசரின் கல்லறை இருந்த இடம்- நடுவில் இருக்கும் கட்டம், பக்கத்து நுலைவாய் ‘Ramses’ அரசரின் கல்லறை) 

tut2.jpg

(பாடம் செய்து வைக்கப் பட்டிருக்கும் ‘Tut’ அரசரின் உடல்)

‘Tut’ அரசரை பற்றிய மேலும் பல சுவையான தகவள்கள் உள்ளன. இவரை பற்றிய ஆராய்ச்சி 1923லில் முடிந்து விடவில்லை……..

-நன்றி-

–விக்னேஷ்–

 Tutankhamun அரசரின் பயணம் தொடரும்………

Read Full Post »

ஒரு பிடி மண்- குட்டிக் கதை

food.jpg

(ஜப்பானியர்களின் உணவு வகை)

ஒர் ஊரில், ஏழை இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டியவன், தானும் பணக்கரனாக வேண்டும், பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து, பல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான்.ஒரு நாள் அவன், பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப் படாமல் கிடந்ததை பார்த்தான். அவ்வூர் தலைவருக்கு சொந்தமான அந்த நிலம் விவசாயத்திற்கு சிறந்ததெனவும், மலிவான விற்பனைக்கு உள்ளதாகவும் ஊர் மக்கள் தகவல் கொடுத்தார்கள்.ஊர் தலைவரை காணச் சென்ற அவன், நிலத்தை வாங்குவதற்கான தன் விருப்பத்தைக் கூறினான். ஊர் தலைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.“நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு துரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை நீ எடுத்துக் கொள்”, எனக் கூறினார் ஊர்த் தலைவர்.இதைக் கேட்ட இளைஞன் மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலத்தில் தான் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் பல கற்பனைகளை பறக்க விட்டான்.

மறுநாள் காலையில், இளைஞன் தனது லட்ச்சியத்தை அடைய எடுக்கப் போகும் முயற்ச்சியைக் காண ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். ஊர் தலைவர் ‘ஜூட்’ சொல்லியவுடன் தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான். பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருந்தான்.

உச்சி வெயில் சுல்லென்று அடிப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடினான். (ஓடினான் ஓடினான், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்). சூரியன் மறைவதற்குல் ஓடியவன் வந்துவிடுவானா இல்லையா என்ற சந்தேகமே எற்பட்டு விட்டது ஊர் மக்களுக்கு. மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனை கண்ட ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினர்.

அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது. மூச்சு திணரியதால் அடுத்த அடி எடுத்து வைக்கச் சிரமப் பட்டவன், திடிரென கீழே விழுந்து உயிர் துறந்தான்.

இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தவனுக்கு, கடைசியில் மிஞ்சியது அவனை புதைபதற்கான ஒரு பிடி மண் மட்டுமே.

பேராசை பெரும் நஷ்டம். ஆகவே அளவோடு ஆசைப் பட்டு ஆனந்தமாய் வாழ்வோம்.

இதைத் தான் ஒரு (ஒன்னும் தெரியாத பாப்பா) நடிகர் ‘Bill Gates’ விட ஒரு ரூபா அதிகம் சம்பாரிக்க போரேனு படம் எடுத்தார். கடைசில இதைக் (1ரூபாய்) கூட உன்னால கொண்டு போக முடியாதுனு ‘MGR the BOSS’ அறிவுரை சொல்லிட்டாரு.

img_0049.jpg

(நான் அவனில்லை)

-நன்றி-

–விக்னேஷ்–

குட்டிக் கதைகள் தொடரும்……….

Read Full Post »

full_tut2.jpg

‘Tutankhamun’ அரசரின் சிலை

Tutankhamun’ வாயில் வருவதற்கு கொஞ்சம் சிரமமான வார்த்தையாதாங்க இருக்கு, ‘Tutankhamun’ என்றால் என்ன? அக்காலத்தில் இறந்த எகிப்திய மன்னர்களை பாடம் செய்து கல்லரையில் வைத்துவிடுவது வழக்கம். இவ்வாரு பாடம் செய்யப் பட்ட பிரேதத்தை நாம் ‘Mummy’ என்று அழைக்கிறோம். ஒரு சில வருடங்களுக்கு முன் 20000 வயதை கொண்ட ‘Mummy’-கள் இன்னமும் கண்டரிய படாமல் இருக்கலாம் என படித்த ஞாபகம் உண்டு. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ‘Mummy’- பற்றிய தகவல் தெரிந்தவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டால் சுவாரசியமாக இருக்கும்எகிப்திய தேசத்தில் தொள் பொருள் ஆராய்ற்சியாளர்களின் ஆராய்ற்சியில் ஆகக் கடைசியாக கிடைத்தாகக் கருதப்படுவதுதான் இந்த ‘Tutankhamun’ அரசரின் கல்லறை. hhhmmmm…… இம்புட்டுதான என நினைக்கிறீர்களா? சரி, தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை (அரசரை) தட்டி எழுப்பியதால் என்ன நடந்தனு பாக்கலாம் வாங்க….

இவரது கல்லறையானது முழுமை அடையப் பட்ட கல்லறையாகக் கருதப் படுவது மட்டுமின்றி கண்டரியப்படாத பல மர்மங்களையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எகிப்திய பழங்குடியினரால் அது ‘Tut’ அரசரால் எற்பட்ட சாபமெனவும் கூறப்படுகிறது. என்ன சாபம்???

அவர் அறையப்பட்டிருக்கும் கல்லரையையோ அல்லது உடலையோ யாராவது தொந்தரவு செய்தால், தொந்தரவு செய்தவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் சாகும் அளவிற்கு ‘Tut’ அரசர் சாபத்தை எற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எந்த அளவிற்கு உண்மை???

‘Tut’ அரசர் தம் 9-வது வயதில் எகிப்திய அரசராக அரியனை ஏரியதாக கூறப்படுகிறது. இளம் வயதில் ஆட்சி பீடத்தை பிடித்த இவர் தனது 19-வது வயதில் காலமானார். (இதுவும் சின்ன வயதுதான்). இவர் இறப்பிற்கான காரணம் மர்மமானதாகவும், இன்றளவும் ஆராய்ச்சியாளர்களால் கண்டரியப் படவில்லை என்பதும் ஆச்சர்யமே!

‘Tut’ அரசர் காலமாகி ஏறக் குறைய 3000 ஆண்டுகளுக்கு பிறகு, ஆராய்சியாளர்களால் தொந்தரவு செய்யப் பட்டதால், பதிலுக்கு அவரும் தொந்தரவு செய்திருக்கிரார். எப்படி?? அடுத்த பதிவில் சொல்கிறேன்….

tut1.jpg

(2005-ஆம் ஆண்டு மேற்கொண்டு தகவல்களை திரட்டச் சென்ற Zawi Hawass எனும் ஆராய்ச்சியாளர்)

tut.jpg

(ஆராய்ச்சிக் கூடத்தில்)

source: national geographic website

DON’T MISS IT ONLY ON ‘வாழ்க்கைப் பயணம்’.

-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

தெரிந்துக் கொள்வோம் சிலவற்றை!! (4)

rey.jpg

(பகலில் நிலவை பார்த்திருப்போம்! இரவில் சூரியனைப் பாருங்கள்!)

1. ‘ Iceland’-ல் அமைந்துள்ள ‘Reykjavik’ எனும் நகரத்தில் குளிர் காலத்தில் நட்சத்திரங்களை 18 மணி நேரமும். வெயில் காலத்தில் சூரியனை 24 மணி நேரமும் காண முடியுமாம்.

funnypart-com-ants_are_strong.jpg

(ஏறும்புகளினால் அதன் எடையைவிட 10 மடங்கு அதிக எடையிலான பொருட்களைத் தூக்க முடியும்)

2.எறும்புகளால் உணவை மென்று சாப்பிட இயலாது.

3.‘Galapagos Island’ எனப் படும் தீவில் உள்ள ஆமைகளின் கழுத்துப் பகுதி கனத்த தசைகளால் காணப் படுமாம். இந்த அமைப்பு அவை சுலபமாக உணவை கௌவிக் கொள்ள உதவுமாம்.

amai.jpg

(வாங்க கீரை சாப்பிடலாம்)

4.பூனையால் 1000 விதமான ஓசைகளை எழுப்ப முடியும்மெனவும், நாய்களால் 10 விதமான ஓசைகளை எழுப்ப முடியுமெனவும் ஆய்வுகள் கூறுகிறது.-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

Older Posts »