Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2007

abydos1.jpg 

(Abydos கோவிலில் இருக்கும் வரைபடம்)

வானவெளி உயிரினங்களை பற்றிய குறிப்புகள் கி.மு 15-ஆம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காண சான்றுகள் Thutmosis 3 எனப்படும் எகிப்திய அரசரின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. Thutmosis 3 எனும் அரசர் எகிப்திய நாட்டில் கி.மு 1504-1450களில் ஆட்சி புரிந்தவர்.

இவரது நாட்குறிப்பு பைப்ரஸ் இலைகளில் வரையப்பட்டிருக்கிறது. Alberto Siliotti-யால் கண்டெடுக்கப்பட்ட இந்த நாட்குறிப்பில் இவ்வாரு கூறப்படுகிறது:

” 22-ஆம் வருடம், மூன்றாம் மாதம், குளிர் காலத்தில், ஆறு மணிக்கு, எழுத்தாளர்கள் வான்வெளியில் ஒரு நெருப்புத் தட்டு பறந்து வருவதை கண்டார்கள். அதில் இருந்ததிற்கு தலை இல்லை, துர்நாற்றம் வீசும் சுவாசம் அதற்கு. 1ரோட்(5 மீட்டர்) உயரம், 1 ரோட் அகளம் கொண்டது. அது பேச இயலாதது. இதை கண்ட எழுத்தாலர்கள் அரசரிடம் முறையிட சென்றார்கள். அரசருக்கும் அது என்னவேன விளங்கவில்லை.

சில நாட்களுக்கு பிறகு, ஓர் இரவில் வான்வெளியில் அந்த நெருப்பு தட்டுகள் அதிகரித்தன. போர் வீரர்கள் தயாரக இருந்தார்கள். அதிக மேல் உழும்பிய அந்த தட்டுகளில் இருந்து மீன்களும், வாத்துகளும் உதிர்ந்தன. அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து நாட்டு மக்களின் நலனுக்காக சாம்பிரானியில் எரிக்கச் சொன்னார் அரசர்”. இதுவே அந்த குறிப்பாகும்.

Thutmose 3 ‘Abydos’ என்ற கோவிலையும் கட்டினார். இந்த கோவிலில் சில வரைபடங்கள் பறக்கும் தட்டின் சாயலில் இருப்பதுவும் குறிப்பிட தக்கது.

நன்றி,

அன்புடன்,

விக்னேஷ்

Advertisements

Read Full Post »

100 வருட சாபம்- குட்டிக் கதை

putritidur3.gif 

முன் காலத்தில், திறமை வாய்ந்த அரசனொருவன் தன் நாட்டை நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்ததே அந்த குறையாகும். அரசனும், அரசியும் கடவுளிடம் வேண்டாத நாளில்லை. சில காலங்களுகு பிறகு கடவுளின் கிருபையால் அரசியாரும் கருவுற்றார். 9 மாதங்களுக்கு பிறகு ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றார் அரசி. மனம் குளிர்ந்த அரசர் நாட்டில் மாபேரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். யாகங்கள் செய்வதற்கு 6 முனிவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

யாகம் முடிந்து முனிவர்கள் குழந்தையை ஆசிர்வதித்தனர். முதல் முனிவர், “நீ நல் உள்ளம் கொண்டவளாய் இருப்பாயாக”. இரண்டாம் முனிவர், ” நீ நேர்வழியிலும், தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பாயாக”. மூன்றாம் முனிவர், ” நீ சிறந்த நாட்டிய அரசியாக இருப்பாய்”. நான்காம் முனிவர், ” நீ திறமையாக பாடுவாய்”. ஐந்தாம் முனிவர், “நீ அழகியாக விளங்குவாய்”. ஆறாம் முனிவர் ஆசிர்வதிக்கும் சமயம் அரண்மனை கதவு வேகமாக திறகக்ப்பட்டது.

“ஏன் என்னை இந்த விருந்திற்கு அழைக்கவில்லை? என்னை அழைக்காததால் நான் உன் மகளுக்கு சாபமிடுகிறேன். உன் மகள் ஊசியால் காயம் ஏற்பட்டு இறப்பாள்”, என சாபமிட்டான் அந்த மந்திரவாதி. அவன் அங்கிருந்து கிளம்பினான். விருந்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆறாம் முனிவர் கூறினார், “யாரும் கவலை கொள்ள வேண்டாம், நான் இவளது சாபம் குறையும் படியாக செய்கிறேன். இளவரசி இறக்க மாட்டார். இவரது உடலில் ஊசியால் பாதிப்பு ஏற்பட்டால் 100 வருடங்கள் உறக்கத்தில் மட்டுமே இருப்பார். அரச குலத்தைச் சேர்த ஒருவர் இவரை நேருக்கும் பொழுது உயிர் பேற்று எழுவார்”. இச்சம்பவத்திற்கு பிறகு அரசன் ஒரு கட்டளையை பிறப்பித்தான். நாட்டில் உள்ள அனைத்து ஊசிகளையும் ஒன்று சேர்த்து புதைத்து விட்டார்கள்.  

16 வருடங்களுக்கு பிறகு இளவரசி அழகு பதுமையாக வளர்ந்திருந்தாள். ஒரு பொழுது அரசனும் அரசியும் வெளியூர் பயணம் மேற்கொண்டனர். இளவரசி அரண்மனையில் இருந்தாள். அரண்மனையைவிட்டு வெளியே வந்த இளவரசி நடை பாதை அருகில் ஒரு குகையை கண்டாள். குகையின் உற்பகுதியில் அவள் அதுவரை காணாத அழகிய அறை இருந்தது. அறைக் கதவை திறந்தாள். அங்கே ஒரு கிழவி நூல் நைந்துக் கொண்டிருந்தாள். கிழவியின் அருகே சென்று பேசிக் கொண்டிருந்தாள் இளவரசி. கிழவியிடம் இருந்த ஊசியை வாங்கி நூல் நைந்து பழகலானாள். திடீரேனெ ஊசி அவளது கையை தைத்த்து.

வலியால் துடித்த இளவரசி தரையில் சாய்ந்தாள். ஹி…….. ஹி… ஹி….. முடிந்தது உன் கதை என சிரித்தான் கிழவி உறுவில் இருந்த மந்திரவாதி. சில நாட்களுக்கு பிறகு இளவரசியை கண்டு பிடித்தார்கள். அரண்மனைக்கு வந்த முனிவர் கூறினார். “இளவரசியுடன் நான் உங்களை வாழச் செய்கிறேன். நீங்கள் அனைவரும் உறக்கத்தில் இருங்கள் 100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் உங்களை காப்பாற்றுவார்”. எனக் கூறி அனைவரையும் ஊறக்கத்தில் ஆழ்த்தினார். அரண்மனையின் உள்ளே யாரும் போகமல் இருக்க முற்புதரால் மறைத்தார்.

100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் அவ்வழியில் வந்தான். ஊர் மக்கள் முற்புதராய் இருந்த அரண்மனை பகுதியில் நாகம் இருப்பதாக கூறினார்கள். அந்நாகத்தை அழித்து அனைவரையும் காப்பாற்றுவதாக இளவரசன் கூறினான். தனது வாளை எடுத்து முற்புதரை வெட்டினான். ஆனால் புதல் வளர்ந்து ஆரம்ப நிலைக்கு வந்தது. அங்கு தோன்ரிய முனிவர் புதிய வாளை கொடுத்து புதரை வெட்ட சொன்னார்.

அரண்மனைக்குள் வந்தான் இளவரசன். இவை அனைத்தையும் தனது கிரிஸ்டல் பந்தின் வழி கவனித்துக் கொண்டிருந்த மந்திரவாதி அவ்விடத்தில் தோன்றினான். “உன்னையும் என் சாபம் பாதிக்கும், நீ  தொடர்ந்து நூலைவதென்றால் என்னுடன் போர் செய்”, என்றான் மந்திரவாதி. நொடிப் பொழுதில் தன்னை பெரிய நாகமாக உருமாற்றிக் கொண்டான். இளவரசனை நோக்கி வாயிலிருந்து நெருப்பை கக்கினான்.

இளவரசன் தன் வாளால் நெருப்பை தடுக்கினான். வாளில் பட்ட நெருப்பு நாகத்தின் கண்களில் பட்டது. இளவரசன் ஒரே வெட்டாக நாகத்தை வெட்டிக் கொன்றான். மந்திரவாதி இறந்தவுடன் அரண்மனை ஆரம்ப நிலைக்கு திரும்பி அழகாக காட்சியளித்தது. அங்கே உறக்கிக் கொண்டிருந்த இளவரசியை நெருங்கினான். இளவரசி உயிர் பெற்று எழுந்தாள்.

“என்ன நடந்தது? யார் நீ?” என வினாவினாள் இளவரசி. மறுபடியும் அங்கு தோன்றிய முனிவர் அனைத்து விபரங்களையும் கூறினார். இளவரசனுக்கு நன்றி கூறினாள் இளவரசி. அரண்மனையில் உள்ள மற்றவர்களும் தூக்கம் கலைந்து எழுந்தார்கள். இளவரசன் இளவரசியை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

தீமையை நினைப்பவர்களுக்கு, தீமையே நடக்கும்.

 putritidur2.gif      putritidur4.gif

நன்றி,

அன்புடன்,

விக்னேஷ்

Read Full Post »

சூரியவர்மன் கண்ட ‘Angkor Wat’

mjk072.jpg

(காண்பவரை கவர்ந்து நிற்கும் ‘Angkor Wat’) 

‘அங்கோர் வாட்’ சூரியவர்மன் அரசனால் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதன் கட்டுமான பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்றிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அங்கோர் வட்டாரத்தில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு அருகே மேலும் பல அழகிய கோவில்கள் காணப்படுகின்றன.

சரி எந்த நாட்டில் உள்ளது இந்த அங்கோர் வாட்?

ஆம், இந்த ரம்மியமான தளம் கம்போடியாவில் அமைந்துள்ளது. அதன் அருகில் பல கோவில்கள் அமைந்து இருந்தாலும் அங்கோர் வாட் கோவிலே இந்நாள் வரையில் பிரசித்தியோடு இருக்கிறது. சூரியவர்ம அரசர் இந்த கோவிலை இந்து மத அடிப்படையில் கட்டியுள்ளார். ஒரு காலத்தில் அங்கோர் வாட் உயரமான கோவிலேனவும் கருதப்பட்டது. இதன் மையப்பகுதி மிக உயரமாக இருக்கும். இந்த மைய பகுதியையும் மேரு மலையையும் வைத்து பல கதைகள் கூறப் படுகிறது.

எதனால் இந்த கோவில் உறுவாகியது?

சூரியவர்மனின் ஆட்சி, சோழ அரசர்களிடம் நல்லுறவுடன் இருந்ததால். மலாயாவின் முன்னேற்றம் அதி விரைவாக வளர்ந்தது. வியாபாரம், அரசியல், மதம் என அனைத்தும் மேலோங்க ஆரம்பித்தது. அக்காலத்தில் பெரிய கோவில்களை கட்டும் அரசனே தன் நாட்டில் சொல்வச் செருக்குடன், விளக்குகிறான் என்று நம்பிக்கை இருந்தது. சோழ அரசின் கீழ் இருந்த சூரிய வர்மனையும் இந்த நம்பிக்கை விட்டு வைக்கவில்லை. இதுதான் இந்த கோவில் உறுவாகுவதற்கு முக்கிய காரணம்.

இந்த கோவிலைச் சுற்றி நதிகளும் தடுப்பு சுவர்களும் காணப் படுகிறன. இது பூமியை சூழ்த்துள்ள கடலையும், மலைகளையும் குறிப்பிடுவதாகும். இந்த கோவிலை அடையும் நுலைவாய் சுமார் 1/2KM தூரம் உள்ளது. வழி நெடிகிலும் ‘Barays’ எனப்படும் மனிதனினால் உறுவாக்கப் பட்ட குட்டை கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

இக்கோவிலின் நுலைவாய், வானவில் பாலம் எனும் மனிதனையும், இறைவனையும் இணைக்கும் பகுதியாக கருதப்படுகிறது. பௌத்த மத சாம்ராஜியத்தின் பொழுது இக்கோவில் பௌத்த வழிப்பாட்டு தளமாகவும் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. 1430-ஆம் ஆண்டுகளில், இந்த பகுதி ‘சியாம்’ தாய்லாந்து அரசாங்கத்தின் ஆட்சியில் இருந்ததாக சான்றுகள் இருக்கின்றன.

என் மனதின் குழப்பம்: இந்தக் கோவில் சோழரின் படையெடுப்பிற்கு முன் கட்டப்பட்டதாகும். இது இன்றளவில் சிறந்த முறையில் பாராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்க, இதற்கு பின்னால் சோழ அரசரால் உறுவாக்கப்பட்ட கடாரத்தின் கோவில்கள் அழிந்து போக காரணம் என்ன? வருத்தம் தான்.

mjk075.jpg

(கட்டிடத்தின் பழமை)

angkor_wat_rear.jpg

(கண்களுக்கு இதமான நீல நிற குட்டைப் பகுதியை காணலாம். முழு படம்)

ganesha.jpg

(கணபதியாரின் அற்புத சிலை- வயது சுமார் 1500 வருடங்கள்)

நன்றி

அன்புடன்,

விக்னேஷ்

Read Full Post »

திருடியது யார்? – சிறுகதை

 “என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார். குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார் நிறுவணத்தில் பணி புறிந்து வருகிறான். மகேனின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த அதே கவலை, ” என்னடா கப்பல் கவுந்த மாதிரி இனமும் சோகமா இருக்க, அதன் எல்லாம் சரியாயிடுச்சே, பின்ன என்ன கவலை”, என்று மகேனை பார்த்தான் குமார். “இல்லடா குமார் நீ கொடுத்த கார்டுல பணம் எடுக்க முடியலடா, பாக்கி பணம் ரொம்ப குறைவா இருக்கு”, என்றான் மகேன். தன் நண்பனின் பதில் குமாரின் காதுகளில் இடி போல் விழுந்தது.  

      சமீபத்தில் மகேனுக்கு சிறு பண பிரச்சனை எற்பட்டது. கடந்த வருடம் தான் சேமித்து வைத்திருந்த தொகையை முன் பணமாக செலுத்தி அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டை வாங்கி சந்தோஷமாக தன் குடும்பத்தாருடன் குடி புகுந்தான். வாடகை வீட்டுக்கு பணத்தைக் கொடுப்பதை விட, வங்கியில் சொந்த வீட்டுக்கு மாதத் தவனைச் செலுத்துவது அவனுக்கு ஒரு வித திருப்தியே அளித்தது. சிறு பிராயத்தில் தந்தையை இழந்த மகேனுக்கு இடைநிலை கல்வியை தொடரும் தம்பியும், மூட்டு வலியால் பாதிக்க பட்ட தாயாரும் உள்ளனர். இரு மாதங்களுக்கு முன்பு தனதுத் தாயாரின் உடல் நிலை பாதிக்க படவே, அவனுக்கு அதிகமான மருத்துவ செலவுகள் எற்பட்டது மட்டுமல்லாமல் வீட்டுத் தவனையும் சரிவர செலுத்த முடியாமல் கால தாமதம் ஆனது. வங்கியிலிருந்து மூன்றாம் நினைவுருத்தல் கடிதம் வந்ததும் தன் நண்பன் குமாரின் உதவியை நாடினான் மகேன்.

      குழப்பத்தில் இருந்த தன் நண்பனின் தோளில் கையை வைத்தான் மகேன், “டேய் என்னடா, என் மேல சந்தேகப்படுரியா? நான் பொய் சொல்லல, நிஜமா நான் பார்க்கும் போது பணமே இல்லைடா”, என சங்கடமாகக் கூறினான் மகேன். “சேய்! என்னடா இப்படி பேசற, உன் குணம் எனக்கு தெரியாதா, நான் அந்த பணத்தை எந்த காரியத்துக்கும் பயன்படுத்தல. அதான் ரொம்ப குழப்பமா இருக்கு, வா என்ன செய்யலாம்னு யோசிப்போம்”, என தன் வேலைகளை நிறுத்திவிட்டு வந்தான் குமார். தன் மடிக் கனிணியை திறந்து அவன் செய்த வரவு செலவுகளை சரி பார்த்தான், தான் அந்த வங்கியின் பணத்தை உபயோகிக்கவில்லையென தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

      இரு நண்பர்களும் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்த உணவகத்தில், இனம் புரியாத அழுத்தத்துடனும் குழப்பத்துடனும் அமர்ந்திருந்தார்கள். குமார் தனது ஊழியர்களை தொடர்பு கொண்டு, வியாபார வரவு செலவுகளை குறித்து வைத்து அந்த வங்கி கணக்குடன் ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தான். அவன் செலவு செய்யவில்லை என்பதையே ஊழியர்களும் குறிப்பிட்டார்கள். பலமுறை யோசித்து, மேழும் குழப்பம் அடைந்த அவன் தனது சட்டைப் பையில் இருந்த வெண்சுருட்டை பற்ற வைத்தான். “சரி இன்னும் ஒரு வழிதான் இருக்கு, வா ‘பேங்’ போய் என்ன பிரச்சனைனு கேட்டு தெரிஞ்சிக்கலாம்”, என்று தன் நண்பனை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றான் குமார்.

      வங்கிகளில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகள் உடனுக்குடன் கனிணி செயல்பாட்டால் பதிவு செய்யப் பட்டிருக்கும். கடந்த நாட்களில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகளை வேண்டிய சமயத்தில் பதிவு எடுத்து வைத்துக் கொள்ள வசதிகள் செய்துத் தரப் பட்டுள்ளன.  “போன வாரம்தான் சார் எல்லா பணத்தையும் வெளியாக்கிருக்கிங்க” என கூறி பற்றுவரவு கணக்கு வழக்குகளை குமாரின் முன் வைத்தார் வங்கியின் குமாஸ்தா. தனது சேமிப்புப் பணம் அனைத்துமே தொடர்ந்து ஆயிரம் ஆயிரம் ரிங்கிட்டாக வெளியாக்கி முடிக்கப் பட்டிருந்ததை பார்த்த குமார் மேழும் பேரதிர்ச்சியடைந்தான்.

      வங்கி மேலதிகாரியிடம் நடந்தவற்றை விளக்கிக் கூறினான், தன் பணம் மீண்டும் கிடைக்காது என்ற பட்சத்தில், வங்கியின் நிர்வாகம் சரியில்லாததால்தான் தான் பணத்தை இழக்க நேர்ந்தது என கோபத்தில் தகராறு செய்தான். வங்கி நிர்வாகத்தினர் பணம் காணமற் போனதற்கும் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதில் விடாப் பிடியாக இருந்தார்கள். கஷ்டப் பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதில் மனம்முடைந்தவன் தன் வங்கி கணக்கு வழக்குகளை ரத்து செய்து விட்டு கிளம்பினான். மாகேனுக்கோ தன்னால்தான் தன் நணபனுக்கு இவ்வளவு சிரமம் எற்பட்டது என் நினைத்து மன வருத்தம் ஏற்பட்டது.

      காவல் நிலையத்தில் முழு விவரமும் புகார் செய்யப் பட்டு இருவரும் வீடு திரும்பும் வழியில் பல சிந்தனைகள் குமாரின் மனத் திரையில் சிறகடித்தன. பாதுகாப்பாக வங்கியில் வைத்த பணம் எப்படி காணமற் போக முடியும். இந்த ஒரு கேள்விக்கே அவன் மனம் பதிலைத் தேடி அலைந்து திரிந்தது.  வேறு என்னதான் செய்ய முடியும், பாடு பட்ட பலன்கள் யாவும் பஞ்சாய் பறந்து போனால் யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும். வங்கி ஊழியர்கள் யாராகினும் பணத்தை எடுத்து விட்டிருப்பார்களா? இப்படியாக மனம் எதையெதையோ எண்ணியது.

      “சாரிடா மகேன், என் பிரச்சனையில உன்ன மறந்துட்டேன், இந்த ‘செக்க’ வச்சி உன் கடனை அடைச்சிடு, பயபடத இது வேர பேங்க் அக்காவுட், கண்டிப்பா பிரச்சனை இருக்காது”, என்று சட்டைப் பையில் இருந்த காசோலையை நீட்டினான் குமார். “என்னடா நீ! நீயே கஷ்டத்துல, இருக்க எனக்கு வெற தண்ட செலவு தேவயா? பரவாலடா, நான் வேறு இடத்துல பணத்தை புரட்டிக்கிறேன்”, என்று நண்பனின் காசோலையை வாங்க மறுத்தான் மகேன். அவனை சமதான படுத்தி காசோலையை கொடுத்து விட்டு விடைபெற்று வீடு திரும்பினான் குமார்.

      புதிய நாள் கண்திறந்து பத்து நாழிகை கழிந்திருந்தது, ஈப்போ நகரம் வேலைப் பலுவால் கனத்து காணப்பட்டது. இவையனைத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது ஒரு உறுவம். நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்த கையடக்கத் தொலைபேசி உறங்கி கொண்டிருந்தவரின் உறக்கத்தை சற்றும் கலைக்கவில்லை. ஏழாவது முறையாக ஒலியெழும்பிய போது அவரது கைகள் போர்வையிலிருந்து எட்டிப் பார்த்து ஓசை எழுப்பிய கருவியை அலசியது. தொலைபேசி அழைப்பிற்கு பதிலழித்து முடித்தவர் சட்டென கிளம்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் தனது காரில் காற்றோடு காற்றாக மறைந்தார்.

      “வாங்க மிஸ்டர் மாதவன், உங்க விடுமுறை முடியறதுக்கு முன்னதாவே உங்கள வேலைக்கு வர சொன்னதிற்கு மன்னிக்கனும், முக்கியமான கேஸ் ஒன்ன சீக்கரமா முடிக்க உத்தரவு போட்டுடாங்க, அதான் உங்கள அழைக்க வேண்டியதா போச்சி”, என்றார் காவல் அதிகாரியான அமீர். “பரவாயில்லை சார்  நீண்ட நாள் விடுமுறை எனக்கும் போரடிச்சி போச்சி, நேத்து ‘நைட்டுதான்’ ஊர்லெருந்து வந்தேன், தூங்க ‘லேட்டாச்சி’ அதான் நீங்க போன் பன்னுனது தெரியாம அசந்து தூங்கிட்டேன், நீங்கதான் என்ன மன்னிக்கனும்”, என்றார் மாதவன். மாதவன் சிறப்புப் போலிஸ் பிரிவினில் பணிபுரியும், திறமையும், தைரியமும் மிக்க காவல் அதிகாரி. பல சிக்கலான புகார்களை நூதனமான யுக்திகளை கையாண்டு கண்டுபிடித்தவர். இதனல் காவல் இலாக்கவனிரிடம் அவருக்கெனெ தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது.

      “சரி மாதவன், இந்த ‘பைல்ஸ்’ எல்லாம் கடந்த மூனு மாதம இந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு வந்த ‘கேஸஸ்’,” என்று மாதவன் முன் சில புகார் பதிவுகளை எடுத்து வைத்தார் அமீர்.

“இங்க இருக்கறது எல்லாமே இந்த ஈப்போ நகரத்த சுற்றியுள்ள ‘பேங்’ சம்மந்தப் பட்ட புகார்கள். ‘பேங்’ல உள்ளவங்களுக்கோ, ‘டேப்பாசிட்டர்கோ’ இந்த பணம் எப்படி காணமல் போனதுனு தெரியல. சிக்கலான கேஸ்ஸாக இருக்கறதால தடயங்கள் கிடைக்கவும் சிரமமா இருக்கு. என் சந்தேகமெல்லாம் இது பலரால் செய்யப் பட்டிருக்கலாம் என்பதுதான். கூடிய சீக்கரத்தில் இதை நாம் கண்டிபிடிச்சி தடுக்கனும், இதனால் பலர் பாதிக்க பட்டிருக்காங்க” என சினிமாவில் வரும் போலிஸ் அதிகாரி போல எடுத்துரைத்தார் அமீர்.

“சரி சார் இந்த ‘கேஸ’ நான் எடுத்துக்கிறேன்”, என்று கர்வமற்ற தன்னம்பிக்கையுடன் கூறினார் மாதவன். “ஓகே மாதவன் இந்த ‘கேஸ்’ சம்மந்தமா எந்த உதவியா இருந்தாழும் என்னை நாடலாம்”, என்று மேழும் ஊக்கம் கொடுத்து அனுப்பினார் அமீர்.

தலைமை காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டவர் அருகிலிருந்த உணவகத்தில் தனது மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். சுமாராக ஐந்து மணிவாக்கில், ஒரு நிறைவான தூக்கத்தை முடித்துவிடேன் என்பதற்கடையாலமாக நெட்டி முறித்து எழுந்த மாதவன், தன் எதிர் மேஜைமிதிருந்த புகார்களை பார்த்தார்.

அழுது முடித்திருந்த அந்திமழையின் சாரல் காற்று, தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்த மாதவனின் முகத்தை இதமாக வருடிச் சென்றதும் தனக்குள் ஒரு புத்துணர்வு எற்படுவதை உணர்ந்தார். அவரது சிந்தனைகள் தனக்கு கொடுக்கப் பட்டிருந்த பொருப்பை நோக்கி ஓடியது. அனைத்து புகார்களும் ஒரே மாதிரியாகவும், அருகருகே உள்ள ஊர்களில் நடந்திருந்தாலும் அனைத்தும் சம்மந்த பட்ட ஒரே நபராலோ அல்லது நபர்களாலோ மட்டுமே செய்திருக்கக் கூடும் என முடிவெடுப்பது தவறு. மொட்டைத் தலைக்கும், முழங்களுக்கும் முடிச்சி போட்ட கதையாகி விடுமோ என அஞ்சினார். அவை வெவ்வேரு ஆட்களாளும் செய்யப்பட்டிருக்கலாம் அல்லவா!

சில விஷயங்கள் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனியென மாதவனுக்கு புலப்பட்டது. சம்பவங்கள் பாதிக்கப் பட்ட நபர்களை அறியாமலே நடந்திருக்கிறது. வங்கியின் சேமிப்புப் பணம் பறிபோயிருக்கிறது என்றால் முக்கிய தகவல்களான உறுப்பினர் எண் மற்றும் ரகசிய ‘பின் கோர்டுகள்’, ஆகியன அடுத்தவருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த ரகசியங்கள் தொலைவது எவ்வகையில் சாத்தியமாகும். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வங்கி உழியர்கள் என யார் வேண்டுமானாழும் செய்திருக்கலாம். மேழும் தெளிவான தடயங்களை புரட்ட பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து விசாரிக்க முடிவு செய்தார்.

இறுதி நபராக குமார் விசாரனைக்கு அழைக்கப் பட்டான். “கடைசியாக இந்த ‘பேங்’ சம்மந்தப் பட்ட விபரங்களை என்ன விஷயமா பயன்படுத்துனிங்க சொல்ல முடியுமா?” என்றார் மாதவன். “கண்டிப்பா ஞாபகம் இருக்கு ‘சார்’, வியாபாரத்துக்காக ‘இன்டர்நெட்’ வழியா பொருட்கள் வாங்க பார்த்தேன், சரியான தகவல்களை கொடுத்தும் வாங்குவதற்கு  பிரச்சனையா இருந்ததால ரத்து செஞ்சிட்டேன்” என ரத்தின சுருக்கமாக தன் பதிலைக் கூறி விடைப் பெற்று சென்றான் குமார்.

“விசாரனையில் சில முக்கிய தடயங்கள் நமக்கு கிடைச்சிருக்கு, பாதிக்க பட்ட எல்லோரும் தன் பணம் காணமற் போனதை உணர்வதற்கு முன்பு, பணம் கட்டவோ, அல்லது பொருள் வாங்கவோ, இணையம் வழி வங்கிச் சேவையை பயன்படுத்திருக்காங்க. இதனால அசம்பாவிதம் நடந்திருக்கும் என நான் நினைக்கிறேன். கணினி தொழில் நுட்ப நிபுணர்களின் உதவி இருந்த என் வேலையை தொடர சுலபமாக இருக்கும்” என்று அமீரிடம் விசாரனனயின் ஆய்வை கூறினார் மாதவன். ” ‘ஓகே’ மாதவன் நாளைக்கே எற்பாடு பண்ணிடலாம்”, என்றார் அமீர். பத்திரிக்கைக்கு இந்த விசாரனை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டமெனவும், இதனால் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் சிரமங்கள் எற்படலாமெனவும் கூறினார் மாதவன்.

      “இணையத்தின் வழி இப்படிபட்ட பிரச்சனைகள் நடக்க வாய்ப்புகள் இருக்கு ‘சார்’ , ஆனால் வங்கியின் இணைய சேவையும் பலத்த பாதுகாப்புடன்தான் செயல்படுத்தப் படுகிறது, இப்போதய நிலைமைக்கு நாம் யாரையும் சந்தேகிக்க முடியாது, பாதிக்கப்பட்டவர்கள் இறுதியாக எப்பொழுது வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி இருக்காங்கனு  சற்று ஆராய்ந்தால் முக்கிய தகவல்களை திரட்ட வசதியாக இருக்கும்”, என்று மாதவனிடம் விளக்கிக் கூறினார் கணினி நிபுணர் அர்ஜூன்.

      அடுத்த அரைமணி நேரத்தில் பாதிக்கப் பட்ட நபர்கள் இறுதியாக இணையத்தின் வழி வங்கியுடன் தெடர்புக் கொண்டதை ஆராய்ந்து பார்த்தார் அர்ஜுன். பாதிக்கப் பட்டவர்கள்  வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி முடித்த பின்பு அவர்களது பெயர் மற்றும் ரகசியப் பின் கோடுகளைப் பயன்படுத்தி வேறொரு கணினியின் மூலம் அவர்களது வங்கி கணக்கு வழக்குகள் மறுபடியும் திறக்கப் பட்டிருந்தது. பாதிக்கப் பட்டவர்கள் கூறிய திகதி மற்றும் நேரத்திற்கு பிறகும் இணையம் வழி வங்கியின் கணக்கு வழக்குகள் பார்வையிட பட்டிருந்தது. இதை விட சுவாரசியமாக புகார் கொடுத்தவர்கள் அனைவரது கணக்கு வழக்குகளும் ஒரே இணைய சேவையின் மூலம் திறந்து பார்வையிடப் பட்டிருந்ததே. “இந்த ‘IP Address’ எந்தத் தொலைபேசி தொடர்பின் வழி இணையத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது என்பதை வைத்து நாம் அவர்களின் முகவரியை அறிந்து கொள்ள முடியும்”, என்ற திருப்தியான பதிலை மாதவனிடம் கூறினார் அர்ஜுன்.

      முகவரியை அறிந்து கொண்ட மாதவன் மேலும் சில காவல் அதிகாரிகளுடன் புறப்பட்டார். ஒரு அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில்  தன் வாகனத்தை நிறுத்தி வைத்தவர், தன் சக நண்பர்களுடன் தேடி வந்த வீட்டை நோக்கிச் சென்றார். கதவைத் தட்டியவுடன், இருபது வயது மதிக்கதக்க இளைஞன் வெளியே எட்டிப் பார்த்தான். மாதவன் தான் விசாரனைக்கு வந்துள்ளதாக சொல்வதற்கு முன்பே, தன் நண்பர்களிடம் ‘போலீஸ்’ என கூச்சலிட்டு தன்னுடன் இருந்த இரு நண்பர்களுடன் தப்பிக்க முயன்றான். போலிசாரின் தர்ம அடிகளுடன் மூவரும் கைது செய்யப் பட்டார்கள். அவர்களது குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப் பட்ட பொருட்கள் அனைத்தும் கைபற்றப் பட்டன.

      விசாரனையின் போது தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்ட அந்த மூவரும் படித்து முடித்த பின்பு வேலையில்லாததால் இந்த குற்றத்தை புரிய தூண்டுதளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வங்கியின் இணைய அகப்பக்கத்தை போன்ற போலி அகபக்கத்தை  உறுவாக்கி, தவறுதலாக அதில் நுழையும் பயனிட்டாளர்களின் முக்கிய தகவல்களை திரட்டியுள்ளார்கள். அந்த தகவல்களின் அடிபடையில், இணையம் வழி கணக்கு வழக்குகளை ஆராய்ந்து, சட்டவிரோத முறையில் போலி வங்கி அட்டைகளை செய்து பணத்தைத் திருடியிருக்கிறார்கள், என திரு.அமீரிடம் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு சமர்பித்தார் மாதவன்.

      தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, குற்ற செயல்களையும் அதிகரிக்கவே செய்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் குற்றச் செயல்களை தடுக்க முடியும், என பொறிக்கப் பட்டிருந்த பத்திரிக்கை செய்தியை பாடித்த மாதவன், பச்சை விளக்கு விழுந்தவுடன் பத்திரிக்கையை பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு தன் காரை செலுத்தினார். நிறைவாக வேலையை முடித்தத் திருப்தியுடன் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறார் மாதவன்.

முற்றும்.

எண்ணம், எழுத்து; 

-விக்னேஷ்வரன் அடைக்கலம்-

Read Full Post »

  mummy.jpg

(நோயினால் பாதிக்கப்பட்ட மம்மி)

‘Manama’ எனப்படும் பண்டய கால நகரம் ‘Bahrin’ நாட்டில் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட 4000 வயதைக் கொண்ட மம்மிக்கு ஏய்ட்ஸ் அறிகுறிகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

      பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கொடூர நோய் பரவி வந்தற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இவர்களால் ஏய்ட்ஸ் நோய் பல இடங்களில் பரவி இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த மம்மி எச்.ஐ.வீ கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

      பராமரிக்கபடாமல் புதைந்து போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் ஓரின உறவினை அமல் படுத்தியதால் கடவுளால் தண்டிக்க பட்டுவிட்டார்கள் என சரித்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு காரணம் கொடுர நோய் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

      ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான Prof.Claude Poncheral கூறுகயில் இது ஒரு ஆச்சர்ய பட வைக்கும் அதிசய கண்டுபிடிப்பு என்கிறார். இங்கு உள்ள மக்கள் போரினால் அழிந்து போகவில்லை, மாறாக இயற்கயிலேயே மறணமுற்று காலப் போக்கில் மக்கள் குடி போக பயந்து தானாகவே இந்நகரம் அழிந்துவிட்டது.

      1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘மனமா’ நாகரம் இருந்த தளத்தின் சவக் குழிகளை தோண்டியிருக்கிறார்கள் ஆராய்ச்சிக் குழுவினர். அங்கு பழுதுபடாத ஒரு மண்டபம் இருப்பதை கண்டுபிடித்தார்கள். மண்டபத்தின் நடுவில் சுண்ணாம்பு கற்களால் செய்யப் பட்ட சில சவப் பெட்டிகளை இருந்தது. அதில் ஐந்து அடி உயரம் கொண்ட மூன்று ஆண் மம்மிக்களை கண்டெடுத்துள்ளார்கள். இந்த மம்மிக்கள் இறக்கும் சமயத்தில் இருபது வயதிற்குள் இருந்திருக்க வேண்டுமென ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள். தகவல்கள் அடிப்படையில் அந்த மூவரும் வினோத நோயினால் உடல் பாதிக்கப் பட்டுள்ளார்கள். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அது ஏய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மம்மிக்கள் என்பதை அறிந்தவர்கள் ஆதிர்ச்சிக்குள்ளாகினர்.

      Bahrin-னில் இருக்கும் மற்ற பண்டய குடியிருப்பு பகுதிகளிழும் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டிருக்கிறது. அங்கு உள்ள தகவல்களை திரட்டி அக்காலத்தில் இந்த நோய் எந்த அளவில் மனிதனை பாதித்துள்ளது எனும் ஆராய்ச்சி பணியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்  Prof.Poncheral குழுவினர்.

நன்றி,

விக்னேஷ்

Read Full Post »

சுடச் சுட ஒரு பழைய செய்தி!!!

  ஏதோ ஒரு படத்தில் பழைய பத்திரிக்கையைப் படிக்கும் ஊர் மக்களை விவேக் கிண்டல் செய்வார். ஆனால் இதை பாருங்கள். சுட சுட ஒரு பழைய செய்தி உங்களுக்காக. 95 வருடங்களுக்கு முன் பலரது உயிரை உறிஞ்சிய டைட்டானிக் கப்பல் மூழ்கிய செய்தி.

11.jpg

2.jpg

3.jpg

அன்புடன்,

விக்னேஷ்

Read Full Post »

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது முது மொழி. இதுதான் இன்றய பெரும்பாளோரின் நிலை. வெளிநாட்டு மோகம் எதனால் ஒரு மனிதனினை பாதிக்கின்றது? ஒரே சொல் பணம். இங்கு இருப்பதை விட நான் அங்குச் சென்றால் பல மடங்கு அதிகமாக சாம்பாரிக்க முடியும். என் குடும்பம் இங்கு சந்தோஷமாக வாழும் என நினைக்கின்றான்.இது எந்த அளவிற்கு உண்மை? அங்கு உள்ள வாழ்கை முறை, மக்கள், உணவு என எவ்வளவோ விசயங்கள் தனக்கு தோதாகுமா என அவன் யோசிக்க தவறுகிறான். நோய் வாய்ப்பட்டால் கவனிக்க தாயோ, மனைவியோ இருக்க மாட்டார்கள். சொன்ற இடத்தில் நிரந்திர வேலை கிடைக்கிறதா? எவ்வளவு சன்மானம் என தெரிந்துக் கொண்டுதான் செல்கிறானா? இப்படி வெளிநாட்டிற்கு வெலைக்குச் செல்பவர்களில் குறைந்த அளவிலானவர்களே அனைத்து தகவல்களையும் அறிந்துக் கொண்டு செல்கிறார்கள். வெளி நாடுகளுக்குச் சென்று சிரமத்திற்கு ஆளாகுபவர்களில் பெரும்பாலோனோர் படிப்பறிவு குறைந்தவர்களே. அவர்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் தருனத்தில் உதவி செய்ய காத்திருக்கும் தனது தாய் நாட்டின் தூதரகத்தையே தெரியாமல் சிலர் இருக்கிறார்கள். இவர்களது கண்களில் சுலபமாக மண்னைத் தூவும் எஜண்டுகள். சரிவர ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாலி என கினற்று தவளையாக செல்பவர்கள் எப்படியெல்லாம் மிதிபடுகிறார்கள்.  நிறைய தமிழ் நாட்டு அன்பர்கள் மலேசியாவில் வேலை செய்கிறார்கள். வாழ்வில் முன்னேற நினைத்து கடல் கடந்து வந்திருக்கும் இவர்களை காண்கயில் மகிழ்ச்சியே. கடந்த எப்ரல் மாதத்தில் வெளிவந்த பத்திரிக்கை செய்தி ஒன்று என் மனதை பாதிக்கவே செய்தது. தன் தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு தமிழக ஊழியரை கொடுமை படுத்தி சாகடித்திருக்கிறார் அத்தொழிற்சாலை முதலாலி. மலேசிய தமிழர்கள் உண்மையில் வெக்கப் பட வேண்டிய விசயமிது. தமிழனே தமிழனை சாப்பிடும் நிலை என்றுதான் இந்த பூமியில் மாறுமோ?  கடந்த ஞாயிற்று கிழமை மலேசிய நண்பன் பத்திரிக்கையில் இந்த கவிதையை கண்டேன். மனம் வெந்து பாதிக்கப் பட்டவரின் வரிகளை நீங்களும் சற்று படித்துப் பாருங்கள். picture-001.jpg                     (நன்றி: மலேசிய நண்பன் பத்திரிக்கை)

அன்புடன், 

-விக்னேஷ்-

Read Full Post »

Older Posts »