(அரசரின் கல்லறையின் உற்பகுதி)
தளபதி ‘Horemheb’ ஆரம்ப காலத்தில் ‘Akhenaten’-னிடம் உதவியாளாராக பணிபுரிந்து வந்தார். Akhenaten யார்? இவர் ‘Tut’ அரசர் அரியனை எறுவதற்கு முன் அரசராக இருந்தவர். ‘தூத்’ அரசரின் ஆட்சியின் போது இவர் படைத் தளபதியாகவும், முக்கிய அமைச்சு பதவிகளையும் வகித்து வந்திறுக்கிறார். ‘தூத்’ மற்றும் ‘ஆய்’ அரசரின் மறைவிற்கு பின்னர் ‘Horemheb’ தன்னை அரசராக நியமித்துக் கொண்டார்.
சில தகவல்கள் Horemheb-கும் தூத் அரசரின் இளய மனைவியான ‘Queen Ankhesenamun’-கும் இடையிலான தகாத உறவினால் இந்த தொடர் கொலைகள் நடந்திருகலாம் என கூறுகின்றன. Horemheb அரசர் ப்திவியை ஏற்ற பிறகு ‘ஆய்’ சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் சரித்திரத்தில் இடம் பெற முடியாமற் போகும் அளவிற்கு அழித்திருக்கிறார். இதற்கு இவர்களுக்கிடைய இருந்த கருத்து வேறுபாடுகளும் காரணமாக இருக்கலாம்.
(தூத் அரசரின் முக வடிவமைப்பு)
இதற்கிடையில் 3 மென்பொருள் வடிவமைப்பாலர்கள் தூத் அரசரின் முகவடிவம் எப்படி இருந்திருக்கும் என செய்த ஆராய்ச்சியில் அவரது இயல்பான முகம் இப்படி இருந்துருக்கலாம் என கூறியுள்ளார்கள். இதில் ஏற்பட்ட ஆச்சர்யம் என்னவென்றால், எகிப்து, பிரான்ஸ், மற்றும் அமேரிக்கா என மூன்று மென்பொருள் குழுக்களும் தனித்தனியே இயங்கி இந்த வடிவமைபை செய்திருக்கிறார்கள். முடிவில் மூவறின் வடிவமைப்பும் ஒரே மதிரியான முக அமைப்பைக் கொண்ட உறுவத்தை கொடுத்திருக்கிறது. இந்த முக அமைப்பு தூத் அரசரின் முகமுடிக்கு பொருந்தியதாகவும், ஆராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற தகவல்களோடு ஒத்துப் போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புதிய ஆராய்ச்சிகள், இவரின் மூட்டுகள் பதிக்கப் பட்டதால் இவர் இறந்திருக்கக் கூடும் எனவும் கொலை அல்ல என குறிப்பிடுகிறார்கள். இவர் தொடைபகுதி எழும்புகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். இதுவே இவரின் இறப்பிற்கு காரணம் எனவும் கூறுகிறார்கள்.
இதையடுத்து 1968-ஆம் ஆண்டின் ஆராய்ச்சி அவர் மண்டையிளுள்ள எழும்பு துகள்கள் இவரைத்தாக்கியதால் கிழே விழுந்து கால் முறிந்திருக்கக் கூடும் என கூறியுள்ளார்கள். மற்றோறு தகவல் இவை அனைத்தும் 1922-ஆம் ஆண்டு இவரை கல்லறையிலிருந்து எடுக்கும் போது பாதுகாப்பாக கையாழப்படாத்தால் ஏற்பட்ட பாதிப்பு என கூறுகிறார்கள்.
இன்றளவும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இவரது மறைவிற்கும், கல்லறையின் மர்மத்திற்கும் இன்னமும் திருப்தியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
(தூத் அரசர் மம்மியின் X-Ray செய்யப்பட்ட மண்டை பகுதி)
(கல்லறையில் இருக்கும் சிலைகள்)
இதுவரை இப்பகுதிக்கு பேராதரவை தந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
-விக்னேஷ்-
‘Tutankhamun’ அரசரின் பயணம் முற்றும்.
மிகவும் அருமையான பகுதி. எழுத்து மற்றும் கருத்து சேகரிப்பிற்கு வாழ்த்துக்கள்!! மேலும் இது போல நல்ல படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்.
அடுத்து எந்த அரசரைப் பற்றி சொல்ல போறீங்க
விக்னேஷ்.
அரிய தகவல்களையும் படங்களையும் திரட்டி நல்ல பதிவுகளை தந்திருக்கிறீர்கள் நன்றி
அடுதத தொடரை எதிர்பார்க்கிறோம்.
//மிகவும் அருமையான பகுதி. எழுத்து மற்றும் கருத்து சேகரிப்பிற்கு வாழ்த்துக்கள்!! மேலும் இது போல நல்ல படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செந்தில். உங்கள் வலைபதிவினை நோட்டமிட்டேன் பின்னூட்டம் எழுத வசதியில்லாமல் இருந்தது. தொடர்ந்து படித்து வாருங்கள். எனக்கு தெரிந்தவற்ரை வழங்குகிறேன்.
//அடுத்து எந்த அரசரைப் பற்றி சொல்ல போறீங்க
விக்னேஷ்.
அரிய தகவல்களையும் படங்களையும் திரட்டி நல்ல பதிவுகளை தந்திருக்கிறீர்கள் நன்றி
அடுதத தொடரை எதிர்பார்க்கிறோம்//
நன்றி தோழரே…. யோசித்துவிட்டு எழுதுகிறேன். உங்களிடம் கூற வேண்டம் நான் எழுதாவிட்டாலும் தினமும் ஒரு visit ஆவது அடிச்சிட்டு போய்டுவிங்க… ஆதரவிற்கு மீண்டும் நன்றி.
//உங்கள் வலைபதிவினை நோட்டமிட்டேன் பின்னூட்டம் எழுத வசதியில்லாமல் இருந்தது.//
செய்தியின் கீழே உள்ள “comment ” எனும் வார்த்தையின் மேல் தங்கள் சுட்டெலியை வைத்து அழுத்தவும். ஒரு புதிய விண்டேவில் தங்கள் பின்னூட்டம் எழுதும் வசதி உண்டாகும். வருகைக்கு நன்றி!!
பிரியமுடன்,
செந்தில் அழகு .பெ.