Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அறிவியல்’ Category

அடைகாக்கும் ஆண்கள்

 

                   வண்ணத்துப் பூச்சி மீன்

                                                                 ( வண்ணத்துப் பூச்சி மீன்)

குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் குதூகலம் அடைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவது பாலூட்டி உயிரினங்களில் உயர்வான இடத்தில் இருக்கும் மனிதனிலிருந்து ஆரம்பித்து, ஊர்வன, நீந்துவன, பறப்பன என நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு குடும்பமாக, ஆணுக்கு பெண் துணை அவசியமாகிறது. பெண்ணின் துணையோடுதான் சந்ததி விரிவடைகிறது. இதில் குடும்பப்பாரம் எனப்படும் குழந்தை பிறப்பு, வளர்ப்பு என்ற சுகமான சுமையை சுமப்பதில் பெண்களின் பங்கு இன்றியமையாததாகிறது.

பேச்சளவிலேயே பெரும்பாலும் கூறப்படும் ஆணுக்கு பெண் சமம் எனும் நீதி, நீர்வாழ்வினங்களான மீனினங்களில் கடைபிடிக்கப்படுகிறது என்பதை அறியும்போது ஆறறிவுக்கு எட்டாத சமூகநீதி, மற்ற விலங்கினங்களில் இருப்பது குறித்து ஆனந்தமும் அளவில்லாத வியப்பும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

பெற்ற குழந்தையைப் பேணிக்காப்பதில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவது குறைந்து கொண்டே வரும் இக்காலத்தில் போட்டி போட்டுக் கொண்டு கவனிக்கும் மீனினங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஸ்டிக்கில்பேக் (Stickleback)

என்னும் மீன்வகையானது இனப்பெருக்கத்திற்கு தயாரான உடன் ஆண் மீன் அதற்கான கூட்டை ஆற்றுப்படுகையில் கட்டி, பெண் மீனை வரவேற்கிறது. பெண் கூட்டில் முட்டையிட ஆண்மீன் அதை கருவுறச்செய்ய என காதல் நடனம் களிப்புற நடக்கிறது. பின் முட்டையை பிற மீன்களிடமிருந்து பாதுகாத்து அடைகாக்கிறது ஆண்மீன். பெண்ணின் வேலை முட்டையிடுவதுடன் முடிந்துவிடுகிறது. முட்டையிலிருந்து மீன் குஞ்சு பொரிந்து வெளியே நீந்திச்செல்லும் வரையிலும் அடைகாக்கிறது இந்த ஆற்றில் வாழும் ஆண்மீன்.

போராளி மீன் (Fighter fish)

இம்மீனினத்திலும், ஆண்மீன் நுரையைக்கொண்டு கூட்டைக்கட்டுகிறது. இந்நுரைக்கூட்டில் பெண்மீன் இட்ட முட்டையை ஆண்மீன் கருவுறச்செய்து முட்டையை ஆடாது அசையாது அடைகாக்கிறது. ஏதேனும் முட்டை நுரைக்கூட்டிலிருந்து தண்ணீருக்குள் விழுந்தால் அதை எடுத்து மீண்டும் கூட்டில் விட்டு குஞ்சு பொரிந்து விடும்வரை அயராது அடைகாக்கும்.

வாயிருக்க! வயிறெதற்கு?

 

மனிதர்களுக்கு வயிற்றிலே வளரும் சிசு, ஆனால் திலேப்பியா மீனினத்தில் (Sarotherodon)

கருவுற்ற முட்டைகளை ஆண் மீன் தனது வாயிலெடுத்து வைத்துக்கொண்டு அடைகாக்கும். கடல் கெளுத்தி மீனும் இவ்வகையிலேயே முட்டையை அடைகாக்கிறது.

கடல்குதிரை காட்டும் வழி

கடல் குதிரையில் ஆணுக்கு கங்காருவின் வயிற்றுப்பகுதியில் பை இருப்பது போல, ஒரு பை அமைப்புக் காணப்படுகிறது. இப்பை அமைப்பில் பெண் கடல் குதிரை முட்டைகளை இட்டுச்சென்றுவிடும். ஆண் கடல்குதிரை முட்டைகளைக் கருவுறச்செய்து முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரும் வரை முட்டைகளைச் சுமந்து பிரசவ வேதனையைச் சுமக்கிறது. பெண் மீன் அக்கடா துக்கடா என்று வேலை முடிந்ததும் சென்றுவிடுகிறது.

நம்புங்கள் கடல்குதிரையும் மீன்தான்!

பைப்மீன் (Pipe fish)

என்ற மீன் வகையிலும் இதே நிலைதான் இவ்வகை மீன்கள் உறவில் ஈடுபடும்போது பெண்மீன் முட்டைகளை ஆண்மீனிடம் ஒப்படைத்துச் சென்றுவிடும். பின்னர் ஆண்மீனின் பாடு அதை கருத்தரித்து பிரசவிக்கும்வரை கண்ணும் கருத்துமாகப் பார்ப்பதுதான்.

கடலா! காதலா!

இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் நான் முந்தி நீ முந்தி எனக் குஞ்சுகளை பராமரிப்பதில் கடலில் வாழும் மீனினங்களை விட, தண்ணீரில் வாழும் மீனினங்கள் தான் பாசக்கார பயலுகளாகத் திகழ்கின்றன.
                                                                                                                                                          

                                                        (தேவதை மீன்)

Advertisements

Read Full Post »

இனம் காணும் வியாதிகள்

                          

    (மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுக்கும் மருந்துகளும் வியாதியை உண்டாக்கும்)

              பரம்பரை நோய்களை பற்றி நாம் அதிக அளவில் கேள்விபட்டிருக்களாம். தற்காலத்தில் மனிதனின் ஆயுள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகளில் கண்டரிந்துள்ளது. முற்காலத்தில் 65 வயதை தண்டுவதே அபூர்வமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனல் இப்பொழுதோ சர்வ சாதாரனமாக 80, 90 வயதை தாண்டியவர்களை நம்மால் காண முடிகிறது. புதிய வியாதிகள் பஞ்சமின்றி அதிகரித்து வருகின்றன. இதுவே மருத்துவ துறையின் மவுசை அதிகரித்துள்ளது. மனிதனுக்கு நோய் ஏற்பட மனிதனே காரணமாக இருக்கிறான் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. கண் கொட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல வியாதிக்கு அடிமையான பின்னரே சுய கட்டோழுங்கிற்கு வருகிறான் மனிதன்.

               கொழுப்பு நிறைந்த தின் பண்டங்களை சாப்பிடாதிர்கள் மாரடைப்பு வரும் எனக் கூரினால். அட போட இந்த வயசுல வாய்க்கு ருசியா சாப்டாம சாவுரப்ப சாப்ட சொல்லுரியா என்பார்கள். வியாதியின் வாயில் அகப்பட்ட பின் அடடா முன்கூட்டியே உடல் நலனில் அக்கரை செலுத்தி இருந்தால் நான் சம்பாரித்த பணத்தை மருத்துவத்திற்காக இப்படி வாரி இரைக்க தேவை இல்லையே என வருந்துகிறான். என்ன செய்ய முடியும் காலம் கடந்துவிட்ட்தே. கிடைத்தற்கரிய மானிட பிறவியை, குறையின்றி பிறந்தும் வீண்னாக்கிக் கொள்கிறான் மனிதன். இதைதான்,

‘ நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன்

நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக்

கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதை

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி…’

எனக் கூறினார்களோ என்னவோ. மனூட வாழ்க்கை கிடைத்தற்கரியது. நாம் வாழும் காலத்தில் பிறருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. தீமையை நினைக்காதிருப்பதே மேல்.

           சரி விசயத்திற்கு வருவோம். சில இனத்தவரிடையே சில நோய்கள் அதிகமாக இருப்பதை நாம் அறிந்திரிக்கலாம். ஏன் இப்படி? வியாதிகள் கூட ஜாதி, மதம், இனம் எனக் கண்ட்ரிந்து மனிதனை பீடிக்கிறதா? சீதோசன நிலை காரணமா? சாப்பாட்டு முறையில் கோளாரா? அல்லது பரம்பரை சாபமா?

          அன்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்தியாவில் பிறக்கும் பெண்களுக்கு, இங்கிலாந்தில் பிறக்கும் பெண்களைக் காட்டினும் 2 மடங்கு அத்கமாக மாரடைப்பு ஏற்படுவதாக கண்டரிந்துள்ளார்கள். ‘கேரிபியன்’ தீவில் வசிக்கும் கருப்பினத்தவர்களுக்கு, அங்குள்ள வெள்ளையரை காட்டினும் 2 மடங்கு அதிகமாக இனிப்பு நீர் வியாதி ஏற்படுகிறதாம்.

            அப்படியென்றால், வெள்ளையராக பிறப்பதுதான் சிறப்பா? வெள்ளையராக பிறந்தால் வியாதிகள் வராதா? அப்படியல்ல. அதே ஆராய்ச்சியின் அடிப்படையில், மற்ற இனத்தை காட்டினும் வெள்ளையர்களுக்கே 10 மடங்கு அதிகமாக தோல் புற்று நோய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

            நோய்கள் வருவதற்கு எது காரணமாக இருக்கிறது? இளம் வயதில் இராபகலாக சிரமப்பட்டு தேடும் சம்பாத்தியம், வயோதிக காலத்தில் மருத்துவருக்கு கொடுக்கவா?

தொடரும்….

அன்புடன்,

P.A.விக்னேஸ்

Read Full Post »

நீலக் கிரகம்

floating_globe.jpg 

பூமி….. மனிதனுக்கு கிடைத்த விலை மதிப்பில்லாத சொத்து. நாம் எந்த அளவிற்கு இந்த பூமியை பாதுகாக்கின்றேம். சுயநலம் பூமி பந்தை சூரையாடிக் கொண்டிருக்கிறது. பஞ்ச பூதத்தில் தப்பி உள்ளது காற்று மட்டும்தான். வானம், நிலம், நீர் என அனைத்தையும் வகுந்தெடுத்துவிட்டான் பாவி மனிதன்.

தன் கண்ணீரால் கடல் மட்டத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் பூமித் தாயை பற்றி சிலவற்றை தெரிந்துக் கொள்வோம்…. இதயத்தின் ஓரமாய் சிறு பொட்டு காதல் வளர்ப்போம்…….

1. பூமி, நீலக் கிரகமென அழைக்கப்படுகிறது. காரணம் வின்வெளியில் இருந்து பூமியை காண்கயில் விரிந்துக் கிடக்கும் கடல் பகுதி பூமியை பார்பதற்கு நீலமாய் இருக்கச் செய்கிறது.

2. பூமியில் இருக்கும் 70% நீரில் 97% உப்பு நீர், 2% நிலத்து நீர், 1% நீரை மட்டுமே மனிதன் குடி நீராக உபயோகிக்கிறான்.

esbuah.jpg

3. பூமியின் வயது 3.5 பில்லியன் வருடமென கருதப்படுகிறது.

4. பூமியின் எடை 6 585 600 000 000 000 000 000 ஆகும்.

5. பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுக்கிறது.

6. பூமி சூரியனை சுற்றிவர 365 1/4 நாள் ஆகிறது. (முன்பு ஒருமுறை 2000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதம் 30 நாட்களை கொண்டிருக்கும் என படித்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. எந்த அளவு உண்மையென தெரியவில்லை.)

7. சுமார் 11% நிலம் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

pertanian.jpg

நன்றி.

அன்புடன்,

விக்னேஷ்

Read Full Post »

தெரிந்துக் கொள்வோம் சிலவற்றை!! (4)

rey.jpg

(பகலில் நிலவை பார்த்திருப்போம்! இரவில் சூரியனைப் பாருங்கள்!)

1. ‘ Iceland’-ல் அமைந்துள்ள ‘Reykjavik’ எனும் நகரத்தில் குளிர் காலத்தில் நட்சத்திரங்களை 18 மணி நேரமும். வெயில் காலத்தில் சூரியனை 24 மணி நேரமும் காண முடியுமாம்.

funnypart-com-ants_are_strong.jpg

(ஏறும்புகளினால் அதன் எடையைவிட 10 மடங்கு அதிக எடையிலான பொருட்களைத் தூக்க முடியும்)

2.எறும்புகளால் உணவை மென்று சாப்பிட இயலாது.

3.‘Galapagos Island’ எனப் படும் தீவில் உள்ள ஆமைகளின் கழுத்துப் பகுதி கனத்த தசைகளால் காணப் படுமாம். இந்த அமைப்பு அவை சுலபமாக உணவை கௌவிக் கொள்ள உதவுமாம்.

amai.jpg

(வாங்க கீரை சாப்பிடலாம்)

4.பூனையால் 1000 விதமான ஓசைகளை எழுப்ப முடியும்மெனவும், நாய்களால் 10 விதமான ஓசைகளை எழுப்ப முடியுமெனவும் ஆய்வுகள் கூறுகிறது.-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

கண்களை பாதுகாக்கும் வழிகள்!!

images-miscellaneous-2006-eye-500x5001.jpg

(என்னைப் பார்! என் கண்னைப் பார்!)

1. குளிக்கும் சமயத்தில் கண்களில் நீர் இரங்கும் பொழுது, கண்களை இருக்க மூடுவதை தவிர்க்க வேண்டும். அச்சமயங்களில் முடிந்த அளவிற்கு வேகமாக கண்களை சிமிட்டினால் கண்களில் உள்ள அழுக்கு நீங்கி கண் குளிர்ச்சியடையும்.

2.கொழுந்து வெற்றிலையை நன்றாக கசக்கி, கொதிக்க விட்டு வடிக்கட்டிய பிறகு இதமான சூட்டில் கண்களை கழுவினால் கண் வழி நீங்கும்.

3. உடலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் அடிக்கடி பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும், நேரம் கிடைத்தால் இதோ இந்த பயிற்சிகளை கொஞ்சம் செய்து பாருங்கள்:

  •  பறந்த வெளியிலான இடத்திற்கு செல்லுங்கள். துரத்திலான பொருட்களையும், நெருங்கிய பொருட்களையும் மாறி மாறி பாருங்கள். (இப்பயிற்சியை செய்யும் பொழுது அழகான பொண்ணுங்க போனால் அவர்களையும் கொஞ்ச நேரம் பாருங்க. இதுவும் பயிற்சிதனே! அதிக நேரம் பாக்காதிங்க, கண்ணுல கள்லடி விழுந்திட போகுது)
  • கண்களை நாலா புரமும் மேல், கீழ், வலம், இடம் என சுழற்றுங்கள்.
  • அதிக நேரம் கனிணி முன் அமர்ந்திருந்தால், சற்று நேரம் அழகிய பொருட்களை பார்தால் கண்களுக்கு இதமாக இருக்கும்(மீன் தொட்டி, செடிகள்). இரவு நேரமாக இருந்தல், அழகான என் வலைப்பதிவு பக்கம் வந்துட்டு போங்க, கண்களுக்கு சிறந்த மருந்தாக அமையும்.

4. வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ நிறைந்த உணவு வகைகளை அதிகம் எடுப்பது கண்களுக்கு சிறந்தது.

5. அதிக அளவிலான வெளிச்சத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.

right.jpg

                                           (மனிதனின் வலதுக் கண்)

Read Full Post »

தெரிந்துக் கொள்வோம் சிலவற்றை!! (3)

1. மூங்கில் புல் இனத்தைச் சேர்ந்ததாகும், இது 24 மணி நேரத்தில் ஒரு மீட்டர் வரை வளரும் தன்மையைக் கொண்டது.

bamboo_1024x768.jpg

(விரைந்து வளரக்கூடிய மூங்கில் காடு)

2.மனிதனின் மூட்டுகளில் இருந்து வெளியாகும் உஷ்ணத்தால் ஒரு லீட்டர் நீரை ஒரு மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

3. ஒரு கணினியை காட்டிழும் மனிதனின் ஞபக சக்தியால், 100000 மடங்கு அதிகமான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

brain_revenge_1.jpg

(இரு பக்க மூளையும் வெவ்வேரு தன்மையை கொண்டது)

4. யானையால் பின்னோக்கி நடக்க இயலாது.

yanai.jpg

(உங்களுக்காக ஒரு சிறப்பான ‘post’ கோடுக்கின்றார் இவர்)

5. ஒட்டகச் சிவிங்கி நின்று கொண்டுதான் தூங்கும்.

otagam1.jpg

(தூக்கமா? சாப்பாட?)

-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

தெரிந்துக் கொள்வோம் சிலவற்றை (2)!!!

1. மனிதன் பேசுவதற்கு அவனது 72 எழும்புகளின் அசைவுகள் தேவைப்படுகிறது.

2. நாமக்கு தும்மல் ஏற்படும் பொழுது, இருதயம் உற்பட நமது உடலின் அனைத்து பகுதிகளும் செயலிலந்து விடுகின்றன.

3. வின் கற்களிடையே மேற்கொண்ட ஆராய்ச்சியில் அவை ஒவ்வோன்றும் 46 கோடி வருட வயதை கொண்டிருப்பது ஆச்சர்ய பட கூடிய செய்தியெ.stones1.jpg                                          (பூமியில் விழுவதற்கு முன்னமே சுக்குநூறாக சிதறியிருக்கும் வின் கற்கள்)

4. பூமியில் சுமார் 8600 பறவையினங்கள் வாழ்கின்றன. parrot_parrot.jpg                                               (பச்சைக் கிளி- முத்துச்சரம் எங்கே?)                                                                     

5. உலகிலேயே அதிக விஷம்முள்ள விளங்காக எதை கருதுகின்றீர்கள்? ராஜ நாகம்? தேல்? பூரான்? இல்லைங்க….. அது தென் அமேரிக்க காடுகலில் வாழுல் ‘poison arrow frog’ ஆகும். இந்த தவளையினத்தின் தோல்களில் உள்ள விஷம் ஒரே சமயத்தில் நூற்று கணக்கானவர்களை கொல்லும் தன்மையை கொண்டது. சிகப்பு, நீலம் மற்றும் பச்சை நிறத்திலான இத்தவளைகளின் விஷத்தை வேட்டையாடுவதற்கு ஆயுதங்களின் முனையில் தடவி உபயோகித்ததால் இப்பெயர் ஏற்பட்டதாம்…. frog.jpg

(இவருக்கு நான் கலர் அடிக்கலிங்க!!!)

15823-120.jpg

(என்னாமா zorro மாதிரி மேக்காப் போட்டுகிட்டு வந்திருக்காருனு பாருங்களேன்)

-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

Older Posts »