Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கவிதைகள்’ Category

மறந்து போன கவிதைகள்

                                               

உன்னை பார்த்து

கொண்டிருப்பதால் தானோ

இதயம் தினமும்

துடித்துக் கொண்டிருக்கிறது

என் இதயத்திற்கு

உயிர் மட்டும் இல்லை

விழிகளும் இருக்கிறது உன்

இதயத்தை பார்த்துக்

கொண்டே இருக்க

கவிதைகள் எழுதிடத்தான்

கைகள் துடிக்கின்றன

எழுதிட நினைத்தவுடன்

கவிதைகள் மறந்து போகின்றன

நினைத்த கவிதைகள்

மறந்து போனாலும்

கனவில் தோன்றிய

உன் கவிதை கொண்ட

கண்களை மறக்கவும் முடியவில்லை

மறைக்கவும் முடியவில்லை

 

Advertisements

Read Full Post »

பழைய நினைவுகள்!!!

                                     

தொலைத்தூர புதுப்புது கிரகங்கள் தேடுகின்றான்

      வானத்திலும் கூடுகட்டி குடியேறிட நினைக்கிறான்

தொலைந்துவிட்ட பழைய வாழ்க்கையை திருப்பித்தர

      முடிந்திடுமா காலந்தோறும் ஆராய்ச்சிகள் நடத்தியே

 

ஓடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழ்ந்திட்ட காலமொன்று

      கண்ணிவைத்து காட்டிற்குள் வேட்டைக்கும் சென்றதுண்டு

தேடித்திரிந்து கூட்டாஞ்சோறு ஆக்கித்தின்ற காலமுண்டு

      நினைக்கையில் மனத்திரையில் விழியோரம் நனைந்திடவே

 

 

 

 

 

 

பல்லாங்குழி டுக்குபறி குண்டித்தல் கபடியாட்டம்

      கண்ணாமூச்சி என்று பல விளையாட்டு கும்மாளம்

தொல்லையிலா இளமழலைப் பருவக்கால குதூகலம்

      நீங்கவொனா ஏக்கங்களாய் இனியநல் நினைவுகளில்

 

காய்ச்சலுக்கு பலியானால் வளர்த்தகோழி குழம்பாகும்

      இன்றுபோல அன்றில்லை விதவிதமாய் கேளிக்கை

மேய்ச்சலுக்கு ஆடுகட்டி புல்லறுத்த காலம்போய்

      ஓய்ச்சலின்றி உழைக்கின்ற உலகம்மாறி போனதன்றோ!

Read Full Post »

கிராமத்து மழை- கவிதை

4552ae897a1fb.jpg                                                                                                       

சர சர வென சத்தம்-

சலங்கையும் தோற்றதடா!

பட பட வென விழுதே-

என் வீட்டுத் தகரம் மெத்தளமோ!

தள தள வென வளர்ந்தது-

தோட்டத்துப் பயிர்களுமே!

சிலு சிலு வென என் தேகம்-

நான் நனைகயிலே!

அனுதினமும் நான் எதிர்பார்க்கிறேன்-

அந்தக் கிராமத்து மழையை!

நித்தம் பார்க்கையில் வெறுக்கிறேன்-

இந்த நகரத்து மழையை!

-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

மனமும்-குணமும்- கவிதை

the_three_tenors__parrots_among_orchids.jpg

(இந்தக் கிளிகள் கூட வர்ண்ணம் காணமல் தான் நட்புக் கொள்கின்றன) 

பூமித்தாயின் கற்பமாய் சில மலைகள்!

அதில் நாட்டியமாடிக் கொண்டிருக்கும் மரக் கிளைகள்!

காய்த்துக் கவரும் பழக் கனிகள்!

அதை பகிர்ந்துத் தின்னும் பாசக் கிளிகள்!

நாளை வெறும் மாயை என்பது கிளியின் குணம்.

நாளை வேண்டும் பணம் என்றது மனிதனின் மனம்.

-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

மாணவன் – கவிதை

logo_pelajar.gif

நீ ஓடும் நதி!

அதில் தெளிந்த நீர்!

உனக்குள் ஓடி

உன் இதயத்தை நாடி

காலத்தோடு கண் விழித்து

கூர்மையோடு நீ படித்து

தேர்வுகளில் நீ வென்று

உன் திறமையை காட்டு வெளி உலகிற்கு!

தாய் தந்தயரின் அரும் புதல்வனாய்!

ராமர் போல் வாழ்வுதனில் தவப் புதல்வனாய்!

தூரநோக்கு சிந்தனைகள் பல வளர்த்தவனாய்!

சமுதாயத்தில் நீ உதித்திட வேண்டும் முதல்வனாய்!

-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »