Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குட்டிக் கதைகள்’ Category

விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது,

மன்னர், “என்ன லஞ்சம்  கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்”, எனக் கேட்டதற்கு,

“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.

ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். “மன்னா! அப்படி என்ன சொக்கு பொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே”.

“எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத்தனுப்பினேன், அவன் நமக்கு நண்பனாகி விட்டான்”, எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கெட்டு விட்டான்.

அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது.

Advertisements

Read Full Post »

100 வருட சாபம்- குட்டிக் கதை

putritidur3.gif 

முன் காலத்தில், திறமை வாய்ந்த அரசனொருவன் தன் நாட்டை நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்ததே அந்த குறையாகும். அரசனும், அரசியும் கடவுளிடம் வேண்டாத நாளில்லை. சில காலங்களுகு பிறகு கடவுளின் கிருபையால் அரசியாரும் கருவுற்றார். 9 மாதங்களுக்கு பிறகு ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றார் அரசி. மனம் குளிர்ந்த அரசர் நாட்டில் மாபேரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். யாகங்கள் செய்வதற்கு 6 முனிவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

யாகம் முடிந்து முனிவர்கள் குழந்தையை ஆசிர்வதித்தனர். முதல் முனிவர், “நீ நல் உள்ளம் கொண்டவளாய் இருப்பாயாக”. இரண்டாம் முனிவர், ” நீ நேர்வழியிலும், தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பாயாக”. மூன்றாம் முனிவர், ” நீ சிறந்த நாட்டிய அரசியாக இருப்பாய்”. நான்காம் முனிவர், ” நீ திறமையாக பாடுவாய்”. ஐந்தாம் முனிவர், “நீ அழகியாக விளங்குவாய்”. ஆறாம் முனிவர் ஆசிர்வதிக்கும் சமயம் அரண்மனை கதவு வேகமாக திறகக்ப்பட்டது.

“ஏன் என்னை இந்த விருந்திற்கு அழைக்கவில்லை? என்னை அழைக்காததால் நான் உன் மகளுக்கு சாபமிடுகிறேன். உன் மகள் ஊசியால் காயம் ஏற்பட்டு இறப்பாள்”, என சாபமிட்டான் அந்த மந்திரவாதி. அவன் அங்கிருந்து கிளம்பினான். விருந்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆறாம் முனிவர் கூறினார், “யாரும் கவலை கொள்ள வேண்டாம், நான் இவளது சாபம் குறையும் படியாக செய்கிறேன். இளவரசி இறக்க மாட்டார். இவரது உடலில் ஊசியால் பாதிப்பு ஏற்பட்டால் 100 வருடங்கள் உறக்கத்தில் மட்டுமே இருப்பார். அரச குலத்தைச் சேர்த ஒருவர் இவரை நேருக்கும் பொழுது உயிர் பேற்று எழுவார்”. இச்சம்பவத்திற்கு பிறகு அரசன் ஒரு கட்டளையை பிறப்பித்தான். நாட்டில் உள்ள அனைத்து ஊசிகளையும் ஒன்று சேர்த்து புதைத்து விட்டார்கள்.  

16 வருடங்களுக்கு பிறகு இளவரசி அழகு பதுமையாக வளர்ந்திருந்தாள். ஒரு பொழுது அரசனும் அரசியும் வெளியூர் பயணம் மேற்கொண்டனர். இளவரசி அரண்மனையில் இருந்தாள். அரண்மனையைவிட்டு வெளியே வந்த இளவரசி நடை பாதை அருகில் ஒரு குகையை கண்டாள். குகையின் உற்பகுதியில் அவள் அதுவரை காணாத அழகிய அறை இருந்தது. அறைக் கதவை திறந்தாள். அங்கே ஒரு கிழவி நூல் நைந்துக் கொண்டிருந்தாள். கிழவியின் அருகே சென்று பேசிக் கொண்டிருந்தாள் இளவரசி. கிழவியிடம் இருந்த ஊசியை வாங்கி நூல் நைந்து பழகலானாள். திடீரேனெ ஊசி அவளது கையை தைத்த்து.

வலியால் துடித்த இளவரசி தரையில் சாய்ந்தாள். ஹி…….. ஹி… ஹி….. முடிந்தது உன் கதை என சிரித்தான் கிழவி உறுவில் இருந்த மந்திரவாதி. சில நாட்களுக்கு பிறகு இளவரசியை கண்டு பிடித்தார்கள். அரண்மனைக்கு வந்த முனிவர் கூறினார். “இளவரசியுடன் நான் உங்களை வாழச் செய்கிறேன். நீங்கள் அனைவரும் உறக்கத்தில் இருங்கள் 100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் உங்களை காப்பாற்றுவார்”. எனக் கூறி அனைவரையும் ஊறக்கத்தில் ஆழ்த்தினார். அரண்மனையின் உள்ளே யாரும் போகமல் இருக்க முற்புதரால் மறைத்தார்.

100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் அவ்வழியில் வந்தான். ஊர் மக்கள் முற்புதராய் இருந்த அரண்மனை பகுதியில் நாகம் இருப்பதாக கூறினார்கள். அந்நாகத்தை அழித்து அனைவரையும் காப்பாற்றுவதாக இளவரசன் கூறினான். தனது வாளை எடுத்து முற்புதரை வெட்டினான். ஆனால் புதல் வளர்ந்து ஆரம்ப நிலைக்கு வந்தது. அங்கு தோன்ரிய முனிவர் புதிய வாளை கொடுத்து புதரை வெட்ட சொன்னார்.

அரண்மனைக்குள் வந்தான் இளவரசன். இவை அனைத்தையும் தனது கிரிஸ்டல் பந்தின் வழி கவனித்துக் கொண்டிருந்த மந்திரவாதி அவ்விடத்தில் தோன்றினான். “உன்னையும் என் சாபம் பாதிக்கும், நீ  தொடர்ந்து நூலைவதென்றால் என்னுடன் போர் செய்”, என்றான் மந்திரவாதி. நொடிப் பொழுதில் தன்னை பெரிய நாகமாக உருமாற்றிக் கொண்டான். இளவரசனை நோக்கி வாயிலிருந்து நெருப்பை கக்கினான்.

இளவரசன் தன் வாளால் நெருப்பை தடுக்கினான். வாளில் பட்ட நெருப்பு நாகத்தின் கண்களில் பட்டது. இளவரசன் ஒரே வெட்டாக நாகத்தை வெட்டிக் கொன்றான். மந்திரவாதி இறந்தவுடன் அரண்மனை ஆரம்ப நிலைக்கு திரும்பி அழகாக காட்சியளித்தது. அங்கே உறக்கிக் கொண்டிருந்த இளவரசியை நெருங்கினான். இளவரசி உயிர் பெற்று எழுந்தாள்.

“என்ன நடந்தது? யார் நீ?” என வினாவினாள் இளவரசி. மறுபடியும் அங்கு தோன்றிய முனிவர் அனைத்து விபரங்களையும் கூறினார். இளவரசனுக்கு நன்றி கூறினாள் இளவரசி. அரண்மனையில் உள்ள மற்றவர்களும் தூக்கம் கலைந்து எழுந்தார்கள். இளவரசன் இளவரசியை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

தீமையை நினைப்பவர்களுக்கு, தீமையே நடக்கும்.

 putritidur2.gif      putritidur4.gif

நன்றி,

அன்புடன்,

விக்னேஷ்

Read Full Post »

hiperaktif2.jpg

(தந்தயின் பாசம்) 

தமிழ் பள்ளி ஒன்றில், அசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி விவாதித்த சமயத்தில், வகுபிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை எழுப்பினான்.

மாணவன்: ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாலம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாரு அவர்களின் பாசம் நீடிக்கும் படி செய்வது?

ஆசிரியர்: உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா? சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்வாய்.

மாணவன்: சொல்லுங்கள் ஐயா செய்கிறேன்.

ஆசிரியர்: நம் பள்ளி திடலுக்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ் நோக்கி பார்த்தவாரே நட. அதில் மிக அழகாக காட்சியலிக்கும் ஒரு புல்லை தேர்வு செய்து கொண்டுவா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்.

மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அம்மாணவனின் கையில் எந்த ஒரு புல்லும் காணவில்லை.

ஆசிரியர்: நான் கொண்டு வரச் சொன்ன புல் எங்கே?

மாணவன்: நான் புற்களை பார்த்தவரு நடந்துக் கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான புற்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான புல். ஆகயால் நான் தொடர்ந்து நடந்தேன். பின் இருந்த புற்கள் சில அழகாக இருந்தது ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது. இறுதியில் என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமற் போனது.

ஆசிரியர்: அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நன் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது. அவர்களின் பாசத்தை மாரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேருபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுக துற்கங்களை  பகிர்துக் கொண்டு நம் மீது பாசம் காட்டுபவரிக்கு, நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.

நன்றி

-விக்னேஷ்-

Read Full Post »

ஒரு பிடி மண்- குட்டிக் கதை

food.jpg

(ஜப்பானியர்களின் உணவு வகை)

ஒர் ஊரில், ஏழை இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டியவன், தானும் பணக்கரனாக வேண்டும், பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து, பல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான்.ஒரு நாள் அவன், பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப் படாமல் கிடந்ததை பார்த்தான். அவ்வூர் தலைவருக்கு சொந்தமான அந்த நிலம் விவசாயத்திற்கு சிறந்ததெனவும், மலிவான விற்பனைக்கு உள்ளதாகவும் ஊர் மக்கள் தகவல் கொடுத்தார்கள்.ஊர் தலைவரை காணச் சென்ற அவன், நிலத்தை வாங்குவதற்கான தன் விருப்பத்தைக் கூறினான். ஊர் தலைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.“நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு துரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை நீ எடுத்துக் கொள்”, எனக் கூறினார் ஊர்த் தலைவர்.இதைக் கேட்ட இளைஞன் மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலத்தில் தான் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் பல கற்பனைகளை பறக்க விட்டான்.

மறுநாள் காலையில், இளைஞன் தனது லட்ச்சியத்தை அடைய எடுக்கப் போகும் முயற்ச்சியைக் காண ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். ஊர் தலைவர் ‘ஜூட்’ சொல்லியவுடன் தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான். பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருந்தான்.

உச்சி வெயில் சுல்லென்று அடிப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடினான். (ஓடினான் ஓடினான், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்). சூரியன் மறைவதற்குல் ஓடியவன் வந்துவிடுவானா இல்லையா என்ற சந்தேகமே எற்பட்டு விட்டது ஊர் மக்களுக்கு. மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனை கண்ட ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினர்.

அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது. மூச்சு திணரியதால் அடுத்த அடி எடுத்து வைக்கச் சிரமப் பட்டவன், திடிரென கீழே விழுந்து உயிர் துறந்தான்.

இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தவனுக்கு, கடைசியில் மிஞ்சியது அவனை புதைபதற்கான ஒரு பிடி மண் மட்டுமே.

பேராசை பெரும் நஷ்டம். ஆகவே அளவோடு ஆசைப் பட்டு ஆனந்தமாய் வாழ்வோம்.

இதைத் தான் ஒரு (ஒன்னும் தெரியாத பாப்பா) நடிகர் ‘Bill Gates’ விட ஒரு ரூபா அதிகம் சம்பாரிக்க போரேனு படம் எடுத்தார். கடைசில இதைக் (1ரூபாய்) கூட உன்னால கொண்டு போக முடியாதுனு ‘MGR the BOSS’ அறிவுரை சொல்லிட்டாரு.

img_0049.jpg

(நான் அவனில்லை)

-நன்றி-

–விக்னேஷ்–

குட்டிக் கதைகள் தொடரும்……….

Read Full Post »

நானே ராஜா! – குட்டிக் கதை

pierced_earlobe.jpg 

(இவுங்க காதுல ஏதோ ரகசியம் சொல்லனுமாம்!)        

  tonguesplitting_120.jpg                                                                                            (இந்த மனுசன நம்பாதிங்க, இரட்டை நாக்கு!)

ஒரு நாள் ஒரு மனிதனின் உடல் உறுப்புகளுக்கு மதம் பிடித்து விட்டது. நான் தான் பெரியவன், நானே உடலில் மிக முக்கியமான பாகமாக விளங்குகிறேன் என சுய தம்பட்டம் அடித்துக் கொண்டன.

“நான் தான் முதல்மை வகிக்கிறேன், என் கட்டளையை எற்று வேலை பார்க்கும் வேலையாற்கள் நீங்கள். நானின்றி உங்களால் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது”, என கர்வாத்தோடு பேசியது மூளை. முளையின் புண்படும் வார்த்தைகள் மற்ற உறுப்புகளையும் வம்பிழுக்க தூண்டிற்று.

“தவறாக சொல்கிறாய்! உன்னால் யோசிக்க மட்டுமே முடியும், என் வருகையின்றி உன்னால் எந்த காரியத்தையும் செய்ய இயலாது. என் பார்வையின்றி நம் எஜமானரால் எந்த வேலையையும் சரி வர செய்ய முடியாது” என தன் குறளை உயர்த்திக் கூறியது கண்.

கண்களின் கர்வமான வர்த்தைகளை கேட்ட காதுகள், “நானின்றி எஜமானரால் எதையும் கேக்க இயலாது, நானின்றி மற்றவர்கள் பேசுவதை உணர்ந்து அதற்கு எற்றவாரு நடந்து கொள்ள இயாலாது”, ஆகவே நானே முதன்மை வகிக்கிறேன்.

கோபமடைந்த மூக்கு, “நானின்றி நம் எஜமானரால் சுவாசிக்க முடியாது, நான் என் கடமையை செய்யத் தவரினால் அவர் இறந்து விடுவார். ஆகையால் நானே முக்கியமானவன்.

இதுவரை அமைதியாக இருந்த நாக்கு, “முட்டாள் உறுப்புகளே, என் செயல்பாடு இல்லாமல் எஜமானரால் பேச முடியுமா? நான் இல்லாமல் இவ்வுலகில் மாபெரும் தலைவர்கள் உருவாகி யிருக்க மாட்டார்கள், நானின்றி எண்ணங்களை பிரதிபளிக்க முடியாமல் மனித வளற்சி ஏற்பட்டிருக்காது, அறுசுவை உணவை ருசித்திருக்க முடியாது. ஆக நானே பெரியவன்”.

“நாந்தான் பெரியவன் என நான் சொல்லிக் கொள்ள விருப்பப்பட வில்லை. இருப்பினும் உங்களோடு ஒப்பிடுகயில் நானே முக்கியமானவன்”, என் இருதயம் கூறியது.

வாய்விட்டு சிரித்த மற்ற உறுப்புகள், “எதனால் நீ இவ்வாரு கூறுகிறாய்?”, என கேட்டன.

“அனைவரும் நான்தான் பெரியவன் என் வாதம் செய்கிறிர்கள், அப்படியானால் நாம் ஒரு சோதனை செய்வோம், அனைவரும் முரையே ஒவ்வொரு நாளும் நம் கடமையிலிருந்து பின்வாங்கிக்கொள்வோம், யாரின் செயல்பாடின்றி நன் எஜமானர் சிரமப்படுகிறார் என அறிந்து கொள்ளலாம்”, என் இருதயம் ஆளோசனை கூறிற்று.

முதலில் கண் தன் கடமையை செய்யாமல் இருந்தது. முதலில் சற்று சிரமப் பட்ட மனிதன், உலகில் கண் பார்வை இல்லாதவர்கள் பல ஆண்டுகள் சிறப்பாகவே வாழ்கிறார்கள், நான் இன்று ஒரு நாள்தானே பார்வையற்று இருக்கிறேன் என மனதைத் தேற்றிக் கொண்டன்.

காதின் செயல்பாடின்றி அம்மனிதனால் படிக்கவும், அடுத்தவருடன் பேசவும், எழுதவும் முடிந்தது, ஆக்யால் காதும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

முக்கின் செயல்பாடின்றி அம்மனிதனால் வாயால்  சுவாசிக்கவும், உயிரோடடு இருக்கவும் முடிந்தது. தோல்வியில் தலைகுனிந்த மூக்கு மீண்டும் தன் கடமையை செய்ய ஆரம்பித்தது.

நாக்கு தன் கடமையை செய்யாமல் இருந்த போது அம்மனிதனால் செய்கை மொழியால் தான் சொல்ல வந்ததை வெளிபடுத்த முடிந்தது. அறுசுவையை சுவைக்க முடியாவிட்டாலும் உயிர்வாழ உணவருந்த முடிந்தது. நாக்கும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

“இப்பொழுது உணர்கிறிர்களா நீங்கள் யாரும் பெரியவனல்ல என்று. நாந்தான் மிக முக்கியமானவன்”, என் இருதயம் கூறியது.

தொல்வியை ஒப்புக் கொண்ட மற்ற உறுப்புகள் அமைதியாக இருந்தன.

நம்பாவிட்டால் இப்பொழுது பாருங்கள் நிறுபிக்கிறேன், என தன் கடமையை நிறுத்தியது இருதயம்.

சில நொடிகளில் அம்மனிதனின் கண் பார்வை மங்கியது, உடல் முழுவதும் சில்லேன்று உறைய ஆரம்பித்தது, மூளை செயலிழந்தது, காதுகளால் ஓசையை உள் வாங்க முடியாமற் போனது. “தயவு செய்து எங்களை விட்டுவிடு”, என அனைத்து பாகங்களும் மன்றாடின. உடனடி மருத்துவம் செய்யப் பட்ட பிறகு அம்மனிதன் சகஜ நிலைக்கு திரும்பினான்.

“நண்பர்களே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நம்மில் யாரவது கடமை தவறினால் நம் எஜமானருக்குதான் சிரமம். நம் கடமையை சிறப்பாக செய்தால் அவர் ஆரோக்கியமாக, நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ்வார். நாம் அனைவருமே முக்கியமானவர்கள், இன்று முதல் நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒருமனதோடு செயல்படுவோம். நன் எஜமானரை சிறப்பாக வழச் செய்வோம்”, என கூறிய இருதயத்தின் புத்திமதியை கேட்ட உறுப்புகள் மனம் திருந்தி தன் கடமையை செய்ய ஆரம்பித்தன.

300px-3dscience_human_heart.jpg

(இருதய வரைபடம்)

  

-நன்றி-

–விக்னேஷ்–

கதைகள் தொடரும்…..

Read Full Post »

மனித நேயம்- குட்டிக் கதை!!!

cholan.jpg

(ராஜ ராஜ சோழன், நம்பி ஆண்டார் நம்பி எனும் புழவருடன் சிதம்பரத்தில் இருந்து காணாமற் போன  தேவார ஓலைச் சுவடிகளின் ரகசியத்தை விவாதிக்கிறார்) 

 மார்கழி மாத கடும் குளிர் நாட்டு மக்களை ஆழ்ந்த தூக்கத்தில் தாளாட்டிக் கொண்டிருந்தது. தம் உடலை கனத்த ஆடைகளில் புகுத்திக் கொண்டு நகர்வலத்திற்கு ஆயத்தமானார் வாமனபுரி ராஜா (சும்மா-அர்புதத் தீவு மகா ராசாவ நினைச்சுக்குங்க). அரண்மனை வாயில் தனக்கென (special-ஆக Benz) நிருத்திவைக்கப் பட்டிருந்த வண்டியில் ஏரி பயணிக்கலானார்.

வண்டிப் போகும் வழியில் பாதையோரமாக ஸ்ரீ விஜயன் என்ற துறவி கோவணம் மட்டுமே அணிந்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டார் மகாராஜா (feelings) மனதில் கருணை கசியவே வண்டியை நிறுத்தி விட்டு(parking) கிழே இறங்கினார். தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை அமைதியாக துறவியின் மீது போர்த்தினார்.

ஸ்ரீ விஜயன் யாரிடமும் எதையும் கைநீட்டிப் பெற மாட்டார் என்பது ராஜாவுக்குத் நன்றாவே தெரியும். எனவே அவர் தூக்கம் தெளிந்து எழுவதற்குள் அங்கிருந்து புரப்பட்டார்.

சற்று நேரத்தில் கண் விழித்தத் துறவி தன் மீது போர்வை போர்த்தியிருந்ததை  பார்த்துத் திடுக்கிட்டார்.

“எனக்கு இந்தக் கோவணம் போதாது என்று யாரோ போர்வையைப் போர்த்திவிட்டு போயிருக்கிறார்களே! துறவியான எனக்கு எதற்கு இந்த சுகமெல்லாம்”, என்று கூறியவாரு நாலா புறமும் பார்வையை ஓட்டினார். சற்று தூரத்தில் ஒரு நாய் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்.

“எனக்காவது கோவணம் இருக்கிறது. இதனிடம் எதுவும் இல்லை. தன் துன்பத்தை யாரிடமாவது சொல்லித் தீர்க்கலாம் என்றாலும் முடியாது. பாவம் வாயில்லா ஜீவன்”. என்று கூறியபடியே நாய் மீது அந்தப் போர்வையை போர்த்தினார் ஸ்ரீ விஜயன்.

sophiecuddle.jpg

(என்னா ஜாலியா தூங்கராரு பாருங்களேன்)

blanketrectangle.jpg

(வெட்டி முறிச்சி கலைச்சி போய்ட்டாரு)

(இது அந்த காலம். இரக்க குணம் அனைவரிடமும் மேலோங்கி இருந்தது. இக்காலத்தில் அந்த துறவி பாதையோரத்தில் தூங்கியிருந்தால் அக்கோவணமும் இருந்திருக்குமா என்பது கேள்விக் குறிதான். இரக்க குணத்தை நீர் ஊற்றி வளர்ப்போம்.)

  (ஆரம்பப் பாட சாலையில் என் ஆசான் கூறிய கதையிது. கதா பாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டும்).

 கதைகள் தொடரும்……….

-நன்றி-

அன்புடன்,

–விக்னேஷ்–

Read Full Post »

அலேக்சான்டர் ஓர் அடிமை!!!

alexander.jpg

(போர்களத்தில் தன் குதிரையுடன் அலேக்சேன்டர்) 

[மாவீரன் அலேக்சான்டரை பற்றி கேள்வி பட்டிருப்பிங்க…. அவர் எப்படி அடிமையானாருனு கேட்கரிங்களா? அதான் கேக்குரம்ல…. விஷயத்த சொல்லுனு நீங்க வடிவேலு பானியிலெ ஏசரது புரியுதுங்க… சரி தொடர்ந்து படிங்க…..]

மாவீரன் அலெக்சான்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது. ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போதுத் தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து கீழிரங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், தெய்வீக ஒளியும் நிறைந்து கணப்பட்டது. (இதத்தான் சந்தரமுகி படத்துளே தேஜஸ் தெரியுதுனு சொன்னாங்க போல).

” உங்களுக்கு என்ன வேண்டுமானாழும் தருகிரேன், என்னுடன் ‘Macedonia’ வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிற்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சான்டர்.

யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, என அமைதியாக கூறினார்.

தனது வேண்டுகேளை நிராகரித்ததால் கோபம் தலைக்கேரிய அலேக்சான்டர், தன் இடைவாளையுருவி யோகியை நோக்கி பேசலானார், “மடையனே!! நான் யாரென்று தெரியுமா? நான் தான் மாவீரன் அலேக்சேண்டர். என் ஆனையை மறுத்ததற்கு இப்பொழுதே என்னால் உன்னை கொல்ல முடியும், மறியாதையாக நான் சொல்வதை கேள்” என்றார்.

யோகியோ தைரியமாக, “உங்களால் மாயையான என் உயிரை கொல்ல முடியாது. என் உயிரை போர்த்திய உடலை மட்டுமே கொல்ல முடியும். இந்த உடல் என் உயிரை போர்த்திய ஆடைமட்டுமே”, என்று அமைதியாக கூறி மீண்டும் தொடர்ந்தார், “அரசே உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் என் அடிமையின் அடிமை” என்று சிறிதும் தயங்காமல் புன்னகையுடன் கூறினார்.

“ஏன் அப்படி சொல்கிறாய்”, என்று கோபத்துடன் கேட்டார் அலேக்சான்டர்.

“என்னால் என் கோபத்தை கட்டுப் படுத்த முடியும், கோபம் எனது அடிமையாகும், ஆனால் நீங்களோ எழிதாக உங்கள் கோபத்திற்கு அளாகிவிடுகிறிர்கள், நீங்கள் கோபத்தின் அடிமை, அதனால்தான் உங்களை என் அடிமையின் அடிமை என்கிறேன்”, எனக் கூறினார்.  

யோகியின் போதனை அவர் தம் தவறை உணரச் செய்தது. வாயடைத்தவனாய் அங்கிருந்துச் சென்றார் அடிமையின் அடிமையான மாவீரன் அலேக்சேன்டர்.

(கோபம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க வேண்டிய உணர்ச்சி அதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பெரியோர் வாக்கு. கோபத்தத கட்டுபடுத்தி மகிழ்ச்சியான வழ்வை பெருவோம்.)

 alexander2.jpg

 (அலேக்சான்டருக்கு பெருமை சேர்த்ததில், அவர் சிறு வயது முதல் வளர்த்த வெள்ளைக் குதிரையும் பங்கு வகிக்கும்)

alexander1.jpg                                                    (அலேக்சான்டரின் உருவச் சிலை)

 -நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »