Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சரித்திரம்’ Category

மர்ம மாயா நகரம்… (2)

                         

                                                1.jpg

                                                           (விளையாட்டு தளம்)

           மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்த்து? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தினில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.
            அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு 2000 ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சி காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்ட பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.
900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு காரணம் மாயா நகர பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்று கிடந்தது தான். இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்த்தாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
                மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கிய காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலை திறன் மிகவும் நுட்பமானது, சிற்ப கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan, Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மைகள்.
Bonampak என்ற இடத்தில் அமைந்த மாயாக்களின் சிற்ப கலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாக தங்களது ஆய்விற்கு பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் நாகரிக வளர்ச்சியை சிறப்பாக எடுத்து காட்டுகின்றன. மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில், இச்சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது ஒரு இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் மாயாக்களின் காலத்தில் பேற்றதக்கவர்களாக  மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. சிற்பகலை வருங்கால சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் தெரிந்திருக்கிறார்கள்.
           மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன. பிரமிடு, வழிப்பாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள் இந்நாகரிக வளர்ச்சிக்கு பெரிதும் துனை புரிந்துள்ளன. இவையே ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து கொள்ள துருப்பு சீட்டாய் அமைந்தது.
மாயாக்கள் பிரமீடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். மாயக்களின் நம்பிக்கைபடி, உயரமான இடத்தில் அமைந்துள்ள பிரமீடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவழிபாட்டிற்கு சொர்க வாசலை அவர்கள் நெருங்க முடிகிறது என கண்டறிந்துள்ளனர்.
              ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதான்ங்கள் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்த்து. 1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்த்து. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.
             இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதி பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாழும் வான் ஆராய்ச்சிக்கு பாயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துள்ளியமாக கணிக்கப்பட்டுள்ளன.

                                                           maya.png

                                                     (மாயாக்களின் எண் முறைகள்)
     

Advertisements

Read Full Post »

சூரியவர்மன் கண்ட ‘Angkor Wat’

mjk072.jpg

(காண்பவரை கவர்ந்து நிற்கும் ‘Angkor Wat’) 

‘அங்கோர் வாட்’ சூரியவர்மன் அரசனால் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதன் கட்டுமான பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்றிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அங்கோர் வட்டாரத்தில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு அருகே மேலும் பல அழகிய கோவில்கள் காணப்படுகின்றன.

சரி எந்த நாட்டில் உள்ளது இந்த அங்கோர் வாட்?

ஆம், இந்த ரம்மியமான தளம் கம்போடியாவில் அமைந்துள்ளது. அதன் அருகில் பல கோவில்கள் அமைந்து இருந்தாலும் அங்கோர் வாட் கோவிலே இந்நாள் வரையில் பிரசித்தியோடு இருக்கிறது. சூரியவர்ம அரசர் இந்த கோவிலை இந்து மத அடிப்படையில் கட்டியுள்ளார். ஒரு காலத்தில் அங்கோர் வாட் உயரமான கோவிலேனவும் கருதப்பட்டது. இதன் மையப்பகுதி மிக உயரமாக இருக்கும். இந்த மைய பகுதியையும் மேரு மலையையும் வைத்து பல கதைகள் கூறப் படுகிறது.

எதனால் இந்த கோவில் உறுவாகியது?

சூரியவர்மனின் ஆட்சி, சோழ அரசர்களிடம் நல்லுறவுடன் இருந்ததால். மலாயாவின் முன்னேற்றம் அதி விரைவாக வளர்ந்தது. வியாபாரம், அரசியல், மதம் என அனைத்தும் மேலோங்க ஆரம்பித்தது. அக்காலத்தில் பெரிய கோவில்களை கட்டும் அரசனே தன் நாட்டில் சொல்வச் செருக்குடன், விளக்குகிறான் என்று நம்பிக்கை இருந்தது. சோழ அரசின் கீழ் இருந்த சூரிய வர்மனையும் இந்த நம்பிக்கை விட்டு வைக்கவில்லை. இதுதான் இந்த கோவில் உறுவாகுவதற்கு முக்கிய காரணம்.

இந்த கோவிலைச் சுற்றி நதிகளும் தடுப்பு சுவர்களும் காணப் படுகிறன. இது பூமியை சூழ்த்துள்ள கடலையும், மலைகளையும் குறிப்பிடுவதாகும். இந்த கோவிலை அடையும் நுலைவாய் சுமார் 1/2KM தூரம் உள்ளது. வழி நெடிகிலும் ‘Barays’ எனப்படும் மனிதனினால் உறுவாக்கப் பட்ட குட்டை கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

இக்கோவிலின் நுலைவாய், வானவில் பாலம் எனும் மனிதனையும், இறைவனையும் இணைக்கும் பகுதியாக கருதப்படுகிறது. பௌத்த மத சாம்ராஜியத்தின் பொழுது இக்கோவில் பௌத்த வழிப்பாட்டு தளமாகவும் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. 1430-ஆம் ஆண்டுகளில், இந்த பகுதி ‘சியாம்’ தாய்லாந்து அரசாங்கத்தின் ஆட்சியில் இருந்ததாக சான்றுகள் இருக்கின்றன.

என் மனதின் குழப்பம்: இந்தக் கோவில் சோழரின் படையெடுப்பிற்கு முன் கட்டப்பட்டதாகும். இது இன்றளவில் சிறந்த முறையில் பாராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்க, இதற்கு பின்னால் சோழ அரசரால் உறுவாக்கப்பட்ட கடாரத்தின் கோவில்கள் அழிந்து போக காரணம் என்ன? வருத்தம் தான்.

mjk075.jpg

(கட்டிடத்தின் பழமை)

angkor_wat_rear.jpg

(கண்களுக்கு இதமான நீல நிற குட்டைப் பகுதியை காணலாம். முழு படம்)

ganesha.jpg

(கணபதியாரின் அற்புத சிலை- வயது சுமார் 1500 வருடங்கள்)

நன்றி

அன்புடன்,

விக்னேஷ்

Read Full Post »

ஆசியாவை ஆண்ட இந்தியர்கள்-‘Langkasuka’

temple.jpg

(தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் பழங்கால இந்து ஆலயம்)

‘Langkasuka’ மலாய் மொழியில் இப்படி அழைக்கிறார்கள். தற்பொழுது இந்த இடம் இருந்த தளத்தை ‘பத்தானி’ என அழைக்கிறார்கள். ‘பத்தானி’, தாய்லாந்து மட்டும் மலேசிய இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஊர். ‘Langkasuka’ 2-14-நூற்றாண்டு வரையில் மலாயா மண்ணில் புகழ் பெற்ற அரசாங்கமாகும்.

முக்கியமாக இது ஒரு இந்து ஆரசாங்கம் என்பது யாராலும் மறுக்கப்படாத ஒன்றாகும். இதை ‘இலங்கா அசோக்கா’ என குறிப்பிட்டுள்ளார்கள். ‘Langkasuka’ மலாயா மண்ணில் ஆரம்ப காலங்களில் தோன்றிய முழுமை பெற்ற அரசாங்கமாகவே கருதுகிறார்கள். ‘Gangga Negara’-வை அடுத்து உதித்த இந்த அரசாங்கம், அதன் ஆட்சி தளதை அடிக்கடி மாற்றாமள் ஒரே இடமாக அமைத்திருக்கிறது. அனால் இந்த அரசாங்கத்தைப் பற்றிய அராய்ச்சிகள் ‘Lembah Bujang’-கை போல் இன்றளவும் நடக்கின்றதா என்பதை பற்றிய தகவல்களை திரட்டுவது சிரமமாகவெ உள்ளது. இதற்கான தகவல்கள் அதிகபடியாக தாய்லாந்து மொழியில் வெளியாவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ‘Langkasuka’ தற்பொழுது ‘Pattani’-யில் பழமை வாய்ந்த பௌத்த கோவில்கள் உள்ளதாக என்னுடன் பல்கலைகளகத்தில் படித்த தாய்லாந்து நண்பரொருவர் கூறினார்.

ஆரம்ப காலங்களில் ‘Langkasuka’ இந்தோனேசியாவின் சிரிவிஜயா அரசாங்கத்தின் முக்கிய வியாபார மையமாகவும் விளங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். 1963-ஆம் ஆண்டு Stewart Wavell என்பவர் இவ்விடத்தைதில் செய்த ஆராய்ச்சியை தனது ‘the naga kings daughter’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற்காலங்களில் இராஜேந்திரச் சோழனின் ஆட்ச்சியின் போது ‘Langkasuka’ கடாரத்தின் ஆட்சியின் கீழ் இருந்ததாக கூறப்படுகிரது. பிற்காலங்களில் அது மலாயவை விட்டு பிறிந்து விட்டலும் கோவில், வயற்காடு என இந்தியர்களின் பாரம்பரியத்தை இன்றளவும் கான முடிகிறது.

map.jpg

(‘Langkasuka’ சாம்ராஜியத்தின் வரைபடம்)

நன்றி

-விக்னேஷ்-

Read Full Post »

இராஜேந்திரச் சோழன் கண்ட ‘Lembah Bujang’ 5

14.jpg

(பொருட்காட்சி சாலையில் இருக்கும் பொருட்கள்) 

‘Lembah Bujang’கில் இருக்கும் கட்டிட சுவடுகளின் வயது 1500க்கும் மேல் இருக்கலாம் என தற்போதய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த இடம் அக்காலத்தில் மேன்பாடடைய முக்கிய காரணம், நான் முன்பு குறிப்பிட்ட 3 நதிகளும், கடல் வழி வியாபரத்திற்கு ஏதுவாக இருக்கும் அமைப்பும் தான். இங்கு 50க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளன. இதுவரையில் விரல் விட்டு என்னக் கூடிய அளவிளான சிலைகளே கிடைத்திருக்கின்றன. இந்தக் கோவில்களில் சில, இந்த இடம் கடாரம் என பெயர் பெருவதற்கு முன்பாகவே, குறிப்பாகச் சொல்லப் போனால் நாகரிகம் அடைந்து வந்த கால கட்டத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

‘Lembah Bujang’-கில் நாம் அணைவரையும் அதிகமாக கவரக் கூடிய இடமாக அமைவது ‘Pengkalan Bayang Merbok’. இந்த இடத்தில்தான் ‘Lembah Bujang’ தொள் பொருட்காட்சி சாலை அமைந்துள்ளது. நாம் இங்கு இருக்கும் சமயம் ஒரு வித்தியாசமான உணர்வை அறிய முடியும். மனம் சாந்தம் பெற்ரு, ஒரு அமைதியான சூழ்நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு வேலை ஆட்கள் இல்லாத சமயத்தில் நான் சென்றதனாலா என்று தெரியவில்லை.

ஆய்வுகள் ஹிந்து-பௌத்த ஆட்சிகள் 2-ஆம் நூற்றாண்டில் தொன்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளன. இதற்கான விளக்கத்தை ‘Gangga Negara’ எனும் பதிவில் நான் தந்துள்ளேன். சரி தொள் பொருட்காச்சி சாலையில் என்ன இருக்கிறது?

கற்களால் செய்யப்பட்ட பெட்டிகள், கற்களால் செய்யப்பட்ட மேஜைகள், இரும்பால் செய்யப்பட்ட பொருட்கள், இராஜேந்திரக் சோழரின் ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட இந்திய நாணயங்கள், படங்கள் மற்றும் குடங்கள் போன்ற கை வேலைப்பாட்டால் செய்யப்பட்ட பொருட்களும் அடங்கும். இருந்தாலும் அப்பொருட்கள் முழுமை இல்லாமல், ஒன்றும் பாதியுமாக இருப்பது மனதிற்கு முழு திருப்தியை தர மறுக்கிறது.     

‘Lembah Bujang’கில் பெருவாரியான இடங்கள் இன்னமும் கண்டுபிடிக்கப் படாமல் மறைந்துக் கிடக்கின்றன. அதற்கு எற்றவாரு மக்கள் அணைத்து இடங்களுக்கும் செல்ல முடியாதபடி இங்குள்ள சட்டத்திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் ‘Lembah Bujang’ மற்றும் கெடா மாநிலத்தின் உண்மையான வரலாற்றை தெரிந்துக் கொள்வதிலிருந்து தடுப்பதற்காகத்தான் என்பது என் கருத்து. சில தகவல்கள் இங்கு உள்ள கட்டிடத் தளங்கள் அணைத்தும் இஸ்லாமிய மதம் வருவதற்கு முன் இங்குள்ள ஊர் மக்களால் கட்டப் பட்டது என்வும் குறிப்பிட்டுருக்கின்றன.

இராஜேந்திரச் சோழரின் ஆட்ச்சியின் போது விலைமதிகத்தக்க பொருட்கள் எதோ ஒரு இடத்தில் மிக பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் உள்ளன. பெரும் காடாக இருக்கும் இந்த இடத்திற்கு சென்ற சிலர் திரும்பாமலும் இருந்திருக்கிறார்கள் எனவும் தகவல்கள் கூறுகிறன. எந்த அளவிற்கு உண்மை என்பது யாரிக்குத் தெரியும்.

அதுமட்டுமின்றி மாபெரும் கோவில், பாதைகள், குகை வாசல் என பல முக்கிய தளங்களை மனிதனுக்கும் அற்பாற்பட்ட சக்திகளால் காக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 bujang2_g.jpg   solarisedwomen.jpg

(கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிலையுருவங்கள்)

bujang2.jpg

(பொருட்காட்சி சாலையினுள்)

 -நன்றி-

–விக்னேஷ்–

பயணம் தொடரும்…………………..

Read Full Post »

இராஜேந்திரச் சோழன் கண்ட ‘Lembah Bujang’ 4

vatteluttu.png

(தஞ்சாவூர் கோவிலில் இருக்கும் வெட்டெலுத்து- இது கடரத்தின் பயணாத்தை குறிப்பிட்டிரிக்கும் பகுதியாகும்)

நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் இந்த தொடரை எழுதுகிறேன். இதற்கான தகவல்களை திரட்டும் பொருட்டு மேலும் பல விசயங்களை நான் அறிந்துக் கொள்ள முடிந்தது. இதற்கு நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

முதலாவதாக ‘Lembang Bujang’-கின் பூகோல அமைப்பை நாம் காணலாம். ‘Lembah Bujang’ எனப்படும் கடாரம் இராஜேந்திரச் சோழரின் மலாயாவின் ஆட்ச்சி இடமாக விளங்கியதாக கூறப் படுகிறது என்பது நாம் அறிந்த விசயம். இதன் அமைப்பு மூன்று நதிகளுக்கு அருகில் இருப்பது அக்காலத்தில் இதன் பெரும் வளர்ச்சிக்கு உதவியதாக கூறப்படுகிறது. அந்த மூன்று நதிகளும் இன்று ‘சுங்ஙய் பூஜாங்’, ‘சுங்ஙய் மெர்போக்’, மற்றும் ‘சுங்ஙய் மூடா’ என அழைக்கப் படுகிறது.

இராஜேந்திரச் சோழர் கடாரத்தில் கால் பதித்த பொழுது இதன் அருகில் இருந்த அனைத்து இடங்களையும் கைபற்றி இருக்கிறார். அதில் Langkasuka, Srivijaya, Gangga Negara போன்ற அரசங்களும் அடங்கும். இதற்கான சான்றுகள் ‘Lembah Bujang’ மற்றும் Indonesia-வில் இருக்கும் பாலித்திவிகளில் மட்டுமே காணப் படுகிறது. இதற்கு காரணம் கடராம் இராஜெந்திரச் சோழரால் அழப்பட்ட சமயத்தில், இந்தோனேசியாவை சூரியவர்மன் ஆட்சி செய்திருக்கிறார். இந்த இரு அரசாங்கத்திற்கும் நல்லுரவு இருந்த போதிலும், இராஜேந்திரச் சோழரின் கப்பல்களுக்கு அதிகமான வரி விதிக்கப் பட்டதால் இவ்விரு அரசாங்கத்தினருக்கும் போர் நடந்ததாகவும் குறிப்பிட பட்டுள்ளது. இதன் பிறகு Sirivijaya அரசாங்கமும் இராஜெந்திரச் சோழரின் கீழ் அடிபணிந்திருக்கிறது.

‘Lembah Bujang’-கில் வினாயகர் மற்றும் அம்மன், இந்த இரு கோவில்களை இன்றளவும் காணலாம். இதன் சிறப்பு அம்சம் என்ன? சூரியன் உதிக்கும் சமயத்தில் சூரியக் கதிர்கள் வினாயகர் கோவிலிழும் மரையும் சமயத்தில் அம்மன் கோவிலிலும் பட்டு மறையும். இதை தவிர்து இன்றய கெடா(கடாரம்) மநிலத்தில் அதிகமான நெல் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இது இன்றைக்கு நேற்று நடந்த மாற்றமல்ல, தொன்று தொட்டு மக்களால் அமல் படுத்தப் பட்டுவரும் தொழிலாகும். கெடா மட்டுமின்றி தாய்லாந்திலும் அதிகமான நெல் வயல்களை காணலாம். இவையணைத்தும் இந்தியர்களால் விட்டுச் செல்லப்பட்ட பாரம்பரியமே என்பது என் கருத்து.

150px-bujanggod.jpg

(‘Lembah Bujang’ பொருட்காட்ச்சி சாலையில் இருக்கும் வினாயகர் சிலை- பழங்கால சிற்பத்தின் அழகைக் காணலாம்)

-நன்றி-

–விக்னேஷ்–

இராஜெந்திரச் சோழரின் பயணம் தொடரும்………..

Read Full Post »

ஆசியாவை ஆண்ட இந்தியர்கள்- ‘Gangga Negara’

180px-gangganegarastatue002.jpg

(6-ஆம் நூற்றாண்டில் Jalong, Perak எனும் இடத்தில் இருந்து எடுக்கப் பட்ட பௌத்த சிலைகள்)

இராஜேந்திரச் சோழரின் கடந்த பதிவுகளுக்கு சிறந்த வரவேற்பை கொடுத்த அன்பர்களுக்கு மிக்க நன்றி. நான் எழுதிய இராஜேந்திரச் சோழன் கண்ட ‘Lembah Bujang’ என்ற பதிவு இன்று வரையில் நண்பர்களால் பர்வையிடப் பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சோழரைப் பற்றிய தகவல்களை திரட்டுவது மிகவும் அரிதான காரியமாகவே இருக்க்கிறது. என்க்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

நான் இந்த தகவல்களை திரட்டும் பொழுது இந்தியாவில் தஞ்சாவுரில் உள்ள கோவிலில் இராஜேந்திரச் சோழரின் பயண வரலாரு செதுக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் காடாரத்திற்கு வந்ததை பர்றியும் தகவல்கள் உள்ளதாக படித்தேன், ஆனால் அந்த புத்தகத்தில் முழு விவரமும் இல்லை. இந்திய அன்பர்கள் தெரிந்திருந்தால் நம்மோடு பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.

மலாயா தொடங்கி இன்று மலேசிய வரை நாட்டின் வரலாற்ரை நாம் பதிநெட்டு பகுதிகலாக பிரிக்கலாம். முதலில் கற்காலம். இதையடுத்து இரண்டு முதல் ஏழாம் பகுதிவரை இந்து-பௌத்த மத ஆட்சியே நடந்திருக்கிறது. இதற்கு சான்றுகள் இன்றளவும் உள்ளன.

இரண்டாம் பகுதி எனப்படுவது ‘Gangga Negara’. இதை படித்தவுடன் உங்களுக்கு புரிந்திருக்கும் அதில் தமிழ் வாசனை உள்ளதென்று. கங்கை நகரம் கி .பி இரண்டாம் நூற்ராண்டில் உருவானதாகவும் மலாயா மண்ணில் உறுவாகிய முதல் ஆட்சியென கூறப் பட்டிகிறது. தமிழ் தாயின் புகழ் அப்பொழுதே கடல் கடந்து ஆட்சி செய்திருபது பெருமைக்குறிய விசயமே.

இதன் ஆட்சியாளர்களை ‘Kambujans’ என குறிப்பிட்டுள்ளார்கள். தற்போதய குஜராத் பகுதியில் வாழ்ந்த இந்து வியாபார வர்கத்தை செர்ந்த இவர்கள் 2000 வருடங்களுக்கு முன் தனது சாம்ராஜியத்தை ஆசியாவெங்கும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். அதில் ஒன்றாக விளங்கியதுதான் கங்கை நகரம் என குறிப்பிடப் படுகிறது.

1849-ஆம் ஆண்டில் Kolonel James Low எனும் ஆராய்சியாளரின் ஆய்வின்படி, கங்கை நகரத்தின் ஆட்சியிடம் பல இடங்களுக்கு மாறி இருக்கிறதென குறிப்பிட்டுள்ளார். காரணம் இதில் கிடைக்கப் பட்டிருக்கும் தொள் பொருட்கள் யாவும் ‘பேரக்’  ஆற்ரின் நெடுக்கிலும் பல இடங்களில் கிடைத்திருக்கின்றன.

பின்பு 1030-ஆம் ஆண்டுகளில் இராஜேந்திர சோழனின் படையெடுப்பின் பொழுது இந்த இடங்கள் தகர்தெரிய பட்டிருக்கிப்பது மட்டுமள்ளாமல், கடாரத்தின் ஆட்சிக்கு கீழ் கொண்டு செல்லபட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இஸ்லாமியரின் மத விரிவாக்கத்திற்கு பிறகு கங்கை நகரம் ‘Bruas’ என அழைக்க படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரய்ச்சியின் போது இங்கு கிடைத்த தொள் பொருட்கள், இந்து-பௌத்த சிலைகள்  யாவும் ‘Bruas’ பொருட்காட்சிசாலையில் இன்றளவும் காட்சிக்கு உள்ளது.

கங்கை நகரத்தின் அரசாங்கத்தை தொற்றுவித்தவர் யாரென்று ஆரய்ந்ததில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஒரு தகவலில் மட்டும் ‘Raja Ganjil Sarjuna’ என குறிப்பிடப் பட்டுள்ளது. இத்தகவலில் எனக்கு கடுகளவும் உடன்பாடு இல்லை, காரணம் பிற மொழிகள் அச்சமயத்தில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

01.jpg

(8-9ஆம் நூற்றாண்டுகளில் உறுவாக்கப் பட்டதாக கூறப்படும் 79cm கொண்ட இந்த ‘Avalok Itesvara’ பௌத்தர் சிலை Bidor, Perak ஈய லம்பத்தில் 1936-ல் கிடைத்ததாக கூறப்படுகிறது) 

-நன்றி-

–விக்னேஷ்–

Read Full Post »

இராஜேந்திர சோழன் கண்ட ‘Lembah Bujang’ 3

rajendra_territories_cl.png

(தனது சாம்ராஜியத்தை விரிவு படுத்த படையெடுப்பின்போது மாமன்னர் இராஜேந்திர சொழன் மேற்கொண்ட கடல்வழி பயண வரைபடம்)

இராஜேந்திர சோழன் கண்ட “Lembah Bujang’ 2-ஆம் பகுதிக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்தது. வருகை தந்தவர்களுக்கும், புதிதாக வருகை புரிந்திருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

மாமன்னர் இராஜேந்திர சோழன் ஏறத்தாள தனது 50-வது வயதின் போது அரியனை ஏரியதாகக் கூறப்படுகிறடுது. பல வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவங்கள் அவர் ஆட்சி ஏற்ற சில வருடங்களுக்குப் பிறகே நிகழ்ந்துள்ளது. அவர் 1030களில் கடாரத்தில் தன் சாம்ராஜியத்தை பதித்துள்ளார். அவர் விட்டு சென்ற தகவல்களை காண்போம்……..

sejarah1.jpg

(‘Lembah Bujang’ செல்லும் வழியில்) 

1864-ஆம் ஆண்டு ‘Colonel James Low’ எனும் இராணுவ அதிகாரி மேற்கொண்ட ஆரய்சியில் ‘Lembah Bujang’-கில் இருந்த பல கட்டிட சுவடுகள் கண்டு பிடிக்க விட்டதாக கூறப் படுகிறது.

தொடர்ந்து 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு நில ஆய்வளர்களின் ஆராய்ச்சியின் பொழுது ‘Gunung Jerai’ எனும் மலை உச்சியில் பல இந்து வழிபாட்டு இடங்களையும், கற்சிலைகளையும் கண்டதாக குறிப்பிட பட்டுள்ளது.

1920-1930களில் Evans என்பவர் ‘Lembah Bujang’கில் முழு மூச்சுடன் இரங்கிய ஆரய்சியில் பல தகவல்களை திரட்டியுள்ளார். 1921-ஆம் ஆண்டு ‘Sungai Batu’ எனும் இடத்தில் மஹிசாசுரர் மற்றும் துர்கை அம்மன் சிலைகளை கண்டு பிடித்துள்ளார். இதனை அடுத்து 1923-ல் வினாயகர் சிலை மற்றும் விலை மதிபற்ற பல பழங்கால ஆபரண பொருட்களையும் திரட்டியுள்ளதாக 1927-ஆம் ஆண்டு அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

கண்டு பிடிக்கப் பட்ட சிலைகள் எங்கு உள்ளது?, அவை இன்னமும் ஆரய்ச்சி செய்ய பட்ட இடங்களிளேயே இருக்கிறதா? என்ற தகவல்கள் தெரியவில்லை. சிலைகள் இருந்ததாகக் கூறப்படும் மலை பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப் பட்டு விட்டதால் பொது மக்களும் அங்கு அனுமதிக்கப் படுவதில்லை.

images.jpg   1.jpg  4.jpg  3.jpg

(‘Lembah Bujang’-கில் பார்க்க வேண்டிய சில இடங்கள்)

மாமன்னர் இராஜேந்திர சோழனின் படையெடுப்பின் போது, அவர் மாலாயாவை, சுவர்ண பூமி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அக்காலகட்டத்தில் மலாயவனது= தற்போதய தாய்லாந்து, பிலிபீன்ஸ், இந்தோனேசிய, மலேசியா, ப்ருனாய் மற்றும் சிங்கபூர் என அனைத்து இடங்களையும் சார்ந்ததாகும்.

இந்த சுவர்ண பூமி என்ற சொல் இன்னமும் தாய்லாந்தில்(Thailand) வழக்கில் உள்ளது. Suwarnabumi Airlines தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற விமானதளமாகும். சமஸ்கிருதமும் அங்கு வழ்க்கில் உள்ளது.

அப்படியிருக்க கடாரமும் அதன் புகழும் வழக்குடைந்து போனது வியக்கத் தக்கதாக உள்ளது!!??

101_1d.jpg    101_1e.jpg

(‘Lembah Bujang’-கில் அமைந்திருக்கும் கட்டிட சுவடுகள்)

உலகேங்கும் தன் புகழை பரப்பிய மாமன்னர் இராஜேந்திர சோழன், சீன தேசத்தின் மீது படையெடுக்க வில்லை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? இது தொடர்பாக ஒரு கதையை படித்திருக்கிறேன். இதற்கான தகவல்களை திரட்டிய பின் குட்டிக் கதைகள் பதிவில் எழுதுகிறேன்.

இராஜேந்திர சோழன் கண்ட ‘Lembah Bujang’ எனும் தொடரை இப்பதிவுடன் முடிக்கிறேன்.

-நன்றி-

அன்புடன்,

–அ.விக்னேஷ்-

‘Lembah Bujang’ பயணம் முற்றும்

Read Full Post »

Older Posts »