Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நீடிக்கும் மர்மம்’ Category

abydos1.jpg 

(Abydos கோவிலில் இருக்கும் வரைபடம்)

வானவெளி உயிரினங்களை பற்றிய குறிப்புகள் கி.மு 15-ஆம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காண சான்றுகள் Thutmosis 3 எனப்படும் எகிப்திய அரசரின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. Thutmosis 3 எனும் அரசர் எகிப்திய நாட்டில் கி.மு 1504-1450களில் ஆட்சி புரிந்தவர்.

இவரது நாட்குறிப்பு பைப்ரஸ் இலைகளில் வரையப்பட்டிருக்கிறது. Alberto Siliotti-யால் கண்டெடுக்கப்பட்ட இந்த நாட்குறிப்பில் இவ்வாரு கூறப்படுகிறது:

” 22-ஆம் வருடம், மூன்றாம் மாதம், குளிர் காலத்தில், ஆறு மணிக்கு, எழுத்தாளர்கள் வான்வெளியில் ஒரு நெருப்புத் தட்டு பறந்து வருவதை கண்டார்கள். அதில் இருந்ததிற்கு தலை இல்லை, துர்நாற்றம் வீசும் சுவாசம் அதற்கு. 1ரோட்(5 மீட்டர்) உயரம், 1 ரோட் அகளம் கொண்டது. அது பேச இயலாதது. இதை கண்ட எழுத்தாலர்கள் அரசரிடம் முறையிட சென்றார்கள். அரசருக்கும் அது என்னவேன விளங்கவில்லை.

சில நாட்களுக்கு பிறகு, ஓர் இரவில் வான்வெளியில் அந்த நெருப்பு தட்டுகள் அதிகரித்தன. போர் வீரர்கள் தயாரக இருந்தார்கள். அதிக மேல் உழும்பிய அந்த தட்டுகளில் இருந்து மீன்களும், வாத்துகளும் உதிர்ந்தன. அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து நாட்டு மக்களின் நலனுக்காக சாம்பிரானியில் எரிக்கச் சொன்னார் அரசர்”. இதுவே அந்த குறிப்பாகும்.

Thutmose 3 ‘Abydos’ என்ற கோவிலையும் கட்டினார். இந்த கோவிலில் சில வரைபடங்கள் பறக்கும் தட்டின் சாயலில் இருப்பதுவும் குறிப்பிட தக்கது.

நன்றி,

அன்புடன்,

விக்னேஷ்

Advertisements

Read Full Post »

  mummy.jpg

(நோயினால் பாதிக்கப்பட்ட மம்மி)

‘Manama’ எனப்படும் பண்டய கால நகரம் ‘Bahrin’ நாட்டில் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட 4000 வயதைக் கொண்ட மம்மிக்கு ஏய்ட்ஸ் அறிகுறிகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

      பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கொடூர நோய் பரவி வந்தற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இவர்களால் ஏய்ட்ஸ் நோய் பல இடங்களில் பரவி இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த மம்மி எச்.ஐ.வீ கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

      பராமரிக்கபடாமல் புதைந்து போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் ஓரின உறவினை அமல் படுத்தியதால் கடவுளால் தண்டிக்க பட்டுவிட்டார்கள் என சரித்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு காரணம் கொடுர நோய் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

      ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான Prof.Claude Poncheral கூறுகயில் இது ஒரு ஆச்சர்ய பட வைக்கும் அதிசய கண்டுபிடிப்பு என்கிறார். இங்கு உள்ள மக்கள் போரினால் அழிந்து போகவில்லை, மாறாக இயற்கயிலேயே மறணமுற்று காலப் போக்கில் மக்கள் குடி போக பயந்து தானாகவே இந்நகரம் அழிந்துவிட்டது.

      1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘மனமா’ நாகரம் இருந்த தளத்தின் சவக் குழிகளை தோண்டியிருக்கிறார்கள் ஆராய்ச்சிக் குழுவினர். அங்கு பழுதுபடாத ஒரு மண்டபம் இருப்பதை கண்டுபிடித்தார்கள். மண்டபத்தின் நடுவில் சுண்ணாம்பு கற்களால் செய்யப் பட்ட சில சவப் பெட்டிகளை இருந்தது. அதில் ஐந்து அடி உயரம் கொண்ட மூன்று ஆண் மம்மிக்களை கண்டெடுத்துள்ளார்கள். இந்த மம்மிக்கள் இறக்கும் சமயத்தில் இருபது வயதிற்குள் இருந்திருக்க வேண்டுமென ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள். தகவல்கள் அடிப்படையில் அந்த மூவரும் வினோத நோயினால் உடல் பாதிக்கப் பட்டுள்ளார்கள். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அது ஏய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மம்மிக்கள் என்பதை அறிந்தவர்கள் ஆதிர்ச்சிக்குள்ளாகினர்.

      Bahrin-னில் இருக்கும் மற்ற பண்டய குடியிருப்பு பகுதிகளிழும் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டிருக்கிறது. அங்கு உள்ள தகவல்களை திரட்டி அக்காலத்தில் இந்த நோய் எந்த அளவில் மனிதனை பாதித்துள்ளது எனும் ஆராய்ச்சி பணியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்  Prof.Poncheral குழுவினர்.

நன்றி,

விக்னேஷ்

Read Full Post »

tut1.jpgfull_tut2.jpg

பகுதி1

பகுதி2

பகுதி3

பகுதி4

பகுதி5

பகுதி6

இப்பகுதிக்கு அதரவு கொடுத்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி

அன்புடன்.

-விக்னேஷ்-

Read Full Post »

expo101.jpg

(அரசரின் கல்லறையின் உற்பகுதி)

 தளபதி ‘Horemheb’ ஆரம்ப காலத்தில் ‘Akhenaten’-னிடம் உதவியாளாராக பணிபுரிந்து வந்தார். Akhenaten யார்? இவர் ‘Tut’ அரசர் அரியனை எறுவதற்கு முன் அரசராக இருந்தவர். ‘தூத்’ அரசரின் ஆட்சியின் போது இவர் படைத் தளபதியாகவும், முக்கிய அமைச்சு பதவிகளையும் வகித்து வந்திறுக்கிறார். ‘தூத்’ மற்றும் ‘ஆய்’ அரசரின் மறைவிற்கு பின்னர் ‘Horemheb’ தன்னை அரசராக நியமித்துக் கொண்டார்.

சில தகவல்கள் Horemheb-கும் தூத் அரசரின் இளய மனைவியான ‘Queen Ankhesenamun’-கும் இடையிலான தகாத உறவினால் இந்த தொடர் கொலைகள் நடந்திருகலாம் என கூறுகின்றன. Horemheb அரசர் ப்திவியை ஏற்ற பிறகு ‘ஆய்’ சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் சரித்திரத்தில் இடம் பெற முடியாமற் போகும் அளவிற்கு அழித்திருக்கிறார். இதற்கு இவர்களுக்கிடைய இருந்த கருத்து வேறுபாடுகளும் காரணமாக இருக்கலாம்.

010351.jpg

(தூத் அரசரின் முக வடிவமைப்பு) 

இதற்கிடையில் 3 மென்பொருள் வடிவமைப்பாலர்கள் தூத் அரசரின் முகவடிவம் எப்படி இருந்திருக்கும் என செய்த ஆராய்ச்சியில் அவரது இயல்பான முகம் இப்படி இருந்துருக்கலாம் என கூறியுள்ளார்கள். இதில் ஏற்பட்ட ஆச்சர்யம் என்னவென்றால், எகிப்து, பிரான்ஸ், மற்றும் அமேரிக்கா என மூன்று மென்பொருள் குழுக்களும் தனித்தனியே இயங்கி இந்த வடிவமைபை செய்திருக்கிறார்கள். முடிவில் மூவறின் வடிவமைப்பும் ஒரே மதிரியான முக அமைப்பைக் கொண்ட உறுவத்தை கொடுத்திருக்கிறது. இந்த முக அமைப்பு தூத் அரசரின் முகமுடிக்கு பொருந்தியதாகவும், ஆராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற தகவல்களோடு ஒத்துப் போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.    

 புதிய ஆராய்ச்சிகள், இவரின் மூட்டுகள் பதிக்கப் பட்டதால் இவர் இறந்திருக்கக் கூடும் எனவும் கொலை அல்ல என குறிப்பிடுகிறார்கள். இவர் தொடைபகுதி எழும்புகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். இதுவே இவரின் இறப்பிற்கு காரணம் எனவும் கூறுகிறார்கள்.

இதையடுத்து 1968-ஆம் ஆண்டின் ஆராய்ச்சி அவர் மண்டையிளுள்ள எழும்பு துகள்கள் இவரைத்தாக்கியதால் கிழே விழுந்து கால் முறிந்திருக்கக் கூடும் என கூறியுள்ளார்கள். மற்றோறு தகவல் இவை அனைத்தும் 1922-ஆம் ஆண்டு இவரை கல்லறையிலிருந்து எடுக்கும் போது பாதுகாப்பாக கையாழப்படாத்தால் ஏற்பட்ட பாதிப்பு என கூறுகிறார்கள்.

இன்றளவும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இவரது மறைவிற்கும், கல்லறையின் மர்மத்திற்கும் இன்னமும் திருப்தியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.

1.jpg

(தூத் அரசர் மம்மியின் X-Ray செய்யப்பட்ட மண்டை பகுதி)

tut19b.jpg

(கல்லறையில் இருக்கும் சிலைகள்)

 இதுவரை இப்பகுதிக்கு பேராதரவை தந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்,

-விக்னேஷ்-

‘Tutankhamun’ அரசரின் பயணம் முற்றும்.

Read Full Post »

tut43b.jpg

(கல்லறையில் இருக்கும் படகு,  அரசரின் மம்மியுடன் நைல் நதியை கடக்க பயன்படுத்தப் பட்டதாகக் கருதப்படுகிறது)

விஞானிகள் இன்றளவில் ‘Tut’ அரசரின் மரணத்திற்கான காரணத்தை கண்டரிந்து வருகிறார்கள் என்பது நாம் அறிந்த விசயமே. இவரின் மரணத்திற்கு பல மாதிரியான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை மட்டுமள்ளாமல் இவரை பற்றிய குறிப்புக்களை படிக்கும் அனைவரையும்   இப்படி நடந்திருக்குமோ, இல்லை அப்படி நடந்திருக்குமோ என இன்றளவும் குழப்பத்திலேயே இருக்கச் செய்கிறது.

‘Long Island University’-யை சேர்ந்த ‘Bob Brier’ மம்மிகள் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவராவார். ‘Tut’ அரசரின் மரணத்தை பற்றி இவர் கூறுகையில் அது ஒரு கொலையாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.’Thutankhamun’-னின் ஆளோசகரும் மற்றும் உதவியாளருமான ‘Ay’ என்பவரால் கொளை செய்யப்பட்டிருக்களாம் என கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘Tut’ அரசரின் மம்மியை ‘X-Ray’ செய்யப் பட்டதில் அவரது பின் மண்டையில் பெரிய அளவிலான இரத்தக் கசிவு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அவரை தாக்கியதால் எற்பட்டதாக இருக்கக்கூடும் எனவும், அத்தாக்குதளே அவரது மரணத்திற்கு காரணமாக இருக்களாம் எனவும் கூறப்படுகிறது.

life28b.jpg

(‘Tut’ மற்றும் ‘Ay’-இது ‘Tut’ அரசரின் மம்மி வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த படம்) 

மேற்காணும் படம் ‘Tut’ அரசரின் மம்மி வைக்கப்பட்டிருந்த பெட்டியினுள் இருந்த வரைபடமாகும். இதில் உதவியாளரான ‘Ay’, ‘Tut’ அரசரின் மம்மியாக்கப்பட்ட உடலுக்கு “வாய் திறப்பு” சடங்கில் உயிரும் உற்சாகமும் தருகிறாரென ‘Bob Brier’ அதற்காண விளக்கத்தை குறிப்பிட்டுள்ளார். ‘வாய் திறப்பு’ என்பது இறந்தவர்கள் அடுத்த பிறப்பில் சிறப்பாக வாழ வேண்டுமேன்று செய்யப்படும் ஒரு சடங்காகும். எகிப்தியர்களின் நம்பிக்கைபடி இறப்பு என்பது தற்காளிகமாக மனிதனை பிடித்திருக்கும் மாயை என்பதாகும். ‘’இதில் ‘Ay’ அரசர்களுக்குறியதென சொல்லப்படும் சிறுத்தைத் தோல் பதித்து நெய்யப் பட்டிருக்கும் ஆடையையும், நாகத்தின் சின்னம் உள்ள ‘Tut’ அரசரின் மகுடத்தையும் சூடியுள்ளதை காணலாம். ‘Tut’ அரசருக்கு அவரின் பதவியை வகிக்க வாரிசு இல்லாத காரணத்தால், ‘Ay’ தன்னை எகிப்திய மன்னராக முடிசூடிக் கொண்டார் என இந்தப் படம் விவரிக்கிறது.

‘Tutankhamun’ மறைவைத் தொடர்ந்து அவரது இளைய மனைவியான ‘Ankhesenamum’, புதிய அரசராகியிருக்கும் ‘Ay’யை மணந்துக் கொள்ளா விருப்பமில்லாததால், தனது மகனை எகிப்தின் மன்னராக்குவதற்கு அனுப்பி வைத்திருக்கிறாள். ஆனால் அவளது மகன் எகிப்தை வந்தடைவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டுள்ளார்.       

அப்படியானால் ‘Ankhesenamum’ யாரை மணம் முடித்துக் கொண்டாள்? தற்போதய ஆராய்ச்சிகள் அவள் ‘Ay’-யை மணந்து கொண்டாள் என சொல்கின்றன. இது வற்புருத்தியதால் செய்துக் கொண்ட திருமணமா, அல்லது சிம்மாசணத்தையும், ராஜ சொத்துக்களுக்கு எஜமானராக ‘Ay’ கட்டாயப்படுத்தி செய்துக் கொண்டத என்பதும் தெரியவில்லை.

அரியனை ஏறிய ‘Ay’ சில வருடத்தில் மரணமடைந்திருக்கிறார், இதைத் தொடர்ந்து மூன்று வருடங்களில் ‘Ankhesenamum’-மும் எகிப்திய சரித்திரத்திலிருந்து காணாமற் போயிருக்கிறாள். அவளைப் பற்றிய தடயங்களும் எதுவும் இல்லாமற் போய்யிருக்கிறது. அவளும் இந்த தொடர் கொளைகளுக்கு ஆளாகியிருப்பாளா? அல்லது இது தற் செயலான சம்பவமா என்பதும் கொள்விக்குறியே.

எகிப்தியர் கோவிலில் இருந்த ‘Ay’-யின் வரைபடங்கள் அழிக்கப் பட்டதுமட்டுமள்ளாமல் அவரது பெயர் எகித்திய அரசர் பட்டியலில் இருந்து வெளியாக்கப் பட்டிருக்கிறது. இவரது கல்லறை திருடப்பட்டும், முரட்டுத்தனமான முறையில் நாசப்படுத்தப்பட்டு இருக்கிறது. ‘Ay’யின் மம்மியும் கல்லறையிலிருந்து காணமற் போயிருக்கிறது. எதனால் இது எற்பட்டிருக்கும்? உங்கள் கருத்து என்ன?

இவரையடுத்து அரசரானவர் ‘Horemheb’. இவரப் பற்றிய தகவல்களுடன் நன் மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திக்கின்றேன்.

tut25b.jpg

(தங்கத்தால் செய்யப் பட்ட ‘Tut’ அரசரின் வாகனம்)

-நன்றி-

–விக்னேஷ்–

‘Tutankhamun’ அரசரின் பயணம் தொடரும்………..    

Read Full Post »

expo10.jpg

(‘Tutankhamun’ அரசரின் கல்லறையின் ஒரு பகுதி)

ஜூன் போனால் ஜூலை காற்ரே…… ‘Sorry’ங்க ஜுலை பிறந்த சந்தோஷ்த்துல பாடிட்கிட்டு நீங்க வந்ததை பார்க்கல…….வணக்கம் தொழர்களே….. நாம் இப்பொழுது ‘Tut’ அரசரின் நான்காவது பயணத்தில் இருக்கின்ரோம். பழைய புதிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். நான் ஆர்வமூட்டும் வகையில் எழுதுகிறேனா என்று தெரியலிங்க….. எனக்கு தெரிஞ்ச விசயத்தை உங்க கூட பகிர்ந்துக் கொள்வது மகிழ்ச்சியா இருக்கு. சரி கதைக்கு வருவோமே……..

சிலருக்கு சாபம் போன்றவற்ரில் நம்பிக்கை இருக்காது, 3300 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர்கள் சாபத்தை எப்படி அறிவியல் யுக்திகளால் அமல்படுத்தியுள்ளார்கள் என்பதை சற்று கவனியுங்கள். தொடர்ந்து படித்துப் பாருங்கள் அதற்கான விளக்கம் புரியும்.

கடந்த பதிவில் ‘Tut’ அரசரின் கல்லறைக்குச் சென்ற ஆரய்ச்சிக் குழுவினர் எப்படியெல்லாம் இறந்தார்கள், என்பதையும் ‘Tut’ அரசரின் சாபம் என்னவென்றும் நான் கூறியிருந்தேன். மேலும் ‘சிம்பிலாக’ சிலவற்றை ஆராய்ந்துப் பார்ப்போம்…….

‘Tut’ அரசரின் மம்மி கண்டுபிடிக்கப் பட்டது 1922-ஆம் ஆண்டு. 50 வருடம் கழித்து 1972-ல் Dr.Gamal ‘Tut’அரசரின் கல்லறையில் இருந்த விலை மதிக்க தக்க பொருட்களை ‘England’-க்கு ஆராய்ச்சிக்காக எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்த சமயத்தில் இறந்திருக்கிறார். பல கோடி செலவு செய்து கல்லறையை கண்டுபிடித்தவர்களுக்கு எகிப்திலேயே அந்த ஆராய்ச்சியை மெற்கொள்வது பெரிதல்ல. ஆராய்ச்சியை எகிப்திலேயே செய்திருக்கலாம் என்பதே என் கருத்து.

இது ‘Tut’ அரசரின் சாபம் என்பதில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களில் ‘Adamson’ என்ற கல்லறைக் காவலரும் ஒருவர். இவருக்கு நேர்ந்த ஒரு கோர விபத்தில் தன் மனைவியை இழந்தார். மகனின் முதுகொழும்பு உடைந்தது மற்றும் துரத்திற்கு தூக்கி வீசப் பட்ட இவர், காரின் சக்கரம் தன் தலையில்  ஏருவதிலிருந்து உயிர் தப்பினார். இதுவும் அனைவருக்கும் நேர்ந்தது போன்ற தற்செயலாக நடந்த சம்பவமே என்ரே எண்ணினார்.

இவையணைத்தும் எப்படி சம்மந்தப் பட்ட நபர்களையே பதித்திருக்கும்?

இது தொடர்பாக France நாட்டைச் சேர்ந்த Sylvian Gandon எனும் ஆராய்ச்சியாலர், தொடர்ந்து இறக்கும் ‘Howard Carter’ ஆராய்ச்சி குழுவினரின் மர்ம மரணத்திற்கு தனது ஆய்வின் கூற்ரை ‘Proceedings of The Royal Society’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘Micro Spora’ மற்றும் 3300 வருடங்களாக ‘Tut’ அரசின் கல்லறையில் அடைந்து கிடக்கும் பல செயற்கை உயிர் கொல்லி கிருமிகளே இந்த மரணங்களுக்கு காரணம் என விளக்கம் கூறியுள்ளார் Sylvian Gandon.

மந்திரம் கால் மதி முக்கால், இது எவ்வளவு உண்மை பார்த்திர்களா! எது எப்படியாகினும், ‘Tut’ அரசர் இந்த சாபத்தை விட்டுச் செல்ல காரணம் என்ன? நீடிக்கும் மர்மமே!

மேலும் சில தகவல்கள் உள்ளன. அடுத்த பதிவில் தொடர்கிறேன் நண்பர்களே!

qtvr01.gif    qtvr09.gif    tut15b.jpg

(கல்லறையில் இருக்கும் பொருட்கள்)

பதிவு 1

பதிவு 2

பதிவு 3

 கருத்துக்களை Comment செய்துச் செல்லுங்கள்…….

-நன்றி-

–விக்னேஷ்—

‘Tutankhamun’ அரசரின் பயணம் தொடரும்………….

Read Full Post »

tut42b.jpg

(‘Tut’ அரசரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் அவரது மனைவி மற்றும் உறவினர்கள்- ‘Mysteries of Egypt’ திரைப்படத்தின் காட்சி)

“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக”- ‘Tutankhamun’ அரசர்.

இதற்கு முந்தய பதிவுகளுக்கு சிறப்பான வரவேற்பை தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இப்பதிவினை படிக்கும் அன்பர்கள் அவர்களது கருத்துக்களையோ, கேள்விகளையோ பின்னூட்டம் இட்டால் நாம் இன்னும் அதிகமான தகவல்களை திரட்டவும், பகிர்ந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.

மேல் காணப்படும் வாசகம், ‘Tut’ அரசரின் நுழைவாயில் பொறிக்கப் பட்டிருக்கும் பழங்கால எழுத்துக்களின் பொருளாக இதுவரைக் கருதப் படுகிறது. இதற்கு பின் ஆராய்ச்சியின் மேம்பாட்டால் செதுக்கப் பட்டிருக்கும் அந்த சொற்களுக்கு அர்த்தம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

‘Howard Carnorvon’னின் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ‘Tut’ அரசரின் கல்லறையை கண்டு பிடித்த பிறகு இந்த வாசகத்தை படிக்காமலா நூழைந்திருப்பார்கள்? இதைப் படித்த பிறகே அவர்கள் சென்றிருக்கிறார்கள். ஏன் சென்றார்கள்? இதற்கான பதிளை நண்பர் ராகவன் இதற்கு முந்தய பதிவின் பின்னூட்டரதில் எழுதியிருக்கிறார்.

பொதுவாகவே நமக்குக் கிடைத்த பரிசை நாம்தானே முதலில் திறக்க நினைப்போம். ஆனால் ‘Tutankhamun’ அரசரின் கல்லறையை பல வருடங்களாக தேடிய இந்த ஆராய்ச்சிக் குழுவினர் சற்று வித்தியாசமானவர்கள். அங்கு கால் இடரி விழுந்த ஒரு எகிப்திய சிறுவனை உள்ளே நூழைந்து பார்த்து வரும்படி கூறியிருக்கிறார்கள். (இதை படிக்கும் பொழுது சற்று வேதனையாகதான் இருந்தது. மருத்துவர் குரங்கிற்கு முதலில் மருந்தை கொடுத்து சோதிப்பதை போல இருக்கிரதல்லவா?) அந்தச் சிறுவன் எவ்வித பாதிப்பும் இன்றி வெளியில் வந்தவுடன் அவர்கள் நிம்மதி பெருமுச்சு விட்டிருக்கிறார்கள்.

பின்பு ‘Howard Carnorvon’ குழுவினர் இந்த வாசகத்திற்கு பல மதிரியான ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். தன் உயிராயிற்ரே! எதனால் ஆய்வு? பழங்காலத்து எழுத்துக்கள் பல விதமான அர்த்தங்களை தந்துவிடும். உதாரணத்திற்கு ‘Da Vinci Code’ படத்தை போல, கின்னத்திற்கும், பெண்களுக்கும் ஒரே குறி எழுத்து ‘V’. அதனால் நுழைவாயில் இருக்கும் அந்த எழுத்துக்களுக்கு மறைமுக அர்த்தங்கள் இருக்கின்றதா, என்பதைக் காண்டு பிடிக்க இந்த ஆய்வு நடத்தப் பட்டது.

‘Tut’ அரசரின் நூழைவாயில் உள்ள எழுத்துக்களின் ஆய்வின் குறிப்புகள் எதுவும் கிடைக்க வில்லை. படித்தவர்கள் இருப்பின் பகிர்ந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். 

இறுதியாக ஆராய்ச்சிக் குழுவினர், இதை மக்களின் கவனத்தை திருப்ப நினைக்கும் வாசகமாக கருதினர். இவர்கள் கணிப்பின் படி உள்ளே விலை மதிக்க தக்க புதையல் இருக்கலாம் எனவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் இதில் முக்கிய தடயங்கள் இருக்கலாம் எனவும் கருதினர்.

இவர்களது கணிப்பு 100% சரியே! உண்மையாகவே உள்ளே சென்றவர்கள் யாரும் முதலை, சிங்கம் மற்றும் குதிரைக்கு உணவாகவில்லை. ‘Tutankhamun’ அரசரின் கல்லறை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்ததாகவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் முழுமையடைந்ததாகவும் குறிப்பிட பட்டுள்ளது. முக்கியமாக விலைமதிக்க தக்க புதையலும் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்படியானால் ‘Tut’ அரசரின் சாபம் எனக் கருதப் படும் அந்த வாசகங்கள் எவ்வாரு அவர்களை துரத்தியது?

நண்பர் ராகவன், 3300 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் படி செய்துவிட்டு சென்றிருப்பது முறையா என கேட்டிருந்தார்.

என்னை பெருத்த வரையில் இது தவறாக இருந்தாலும், இதில் ஒரு நன்மையும் இருக்கவே செய்கிறது. மனிதனின் சுயநலத்தால் உலகத்தில் இருக்க வேண்டிய பல முக்கியமான விசயங்களை நாம் இழந்துவிட்டோம்.

உதாரணத்திற்கு துர்க்கி நாட்டில் இருந்த ‘TEMPLE OF ARTEMIS’. உலக அதிசயத்தில் ஒன்றான இந்தக் கோவில் இப்பொழுது இல்லை. இதன் உண்மை வடிவம் நமக்கு தெரியாது. வரைபடத்தில் மட்டுமே காண்கிறோம். இதற்கு காரணம் என்ன? மனிதனிடத்தில் உள்ள தீய குணங்கள்தானே.

‘Tut’ அரசரின் சாபத்தால் அந்த கல்லறைக்குள் சென்ற அனைவரும் இறந்துவிட இல்லை. உதாரணம் முதலில் நுழைந்த அந்தச் சிறுவன். இறந்தவர்கள் மனதில் எதோ ஒரு தவறான எண்ணம் இருந்துருக்களாம். தவறான எண்ணத்தால் பாதிப்படைந்திருக்கலாம் அல்லவா?

இதனால் அராய்ச்சியும் தவறு என்று நான் சொல்லவில்லை. அடுத்தவருக்கு பதிப்பை எற்படுத்தாத வரையில் அது சிறந்ததே.

வீன் அரட்டையால் போதுமான அளவிற்கு நான் தகவல்களை கொடுக்க தவறியிருந்தால் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அடுத்த பதிவில் மேலும் பல விசயங்களை பார்க்கலாம்.

tut44b.jpg

(‘Tut’ அரசர் கல்லறையினுள் எடுத்துச் செல்லப் படுகிறார்- ‘Mysteries of Egypt’ திரைப்பட காட்சி)

tut02b.jpg

(கல்லறையில் இருக்கும் விலைமதிபற்ற பொருட்கள்- உண்மைக் காட்சி- ஆரம்பத்தில் இவற்றை ‘England’துக்கு ஆராய்ச்சியின் பெயரில் எடுத்துச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள்- அவரும் இறந்து விட்டார்)

-நன்றி-

–விக்னேஷ்–

மீண்டும் அடுத்தப் பயணத்தில் நாம் இணைவோம் தோழர்களே!

‘Tutankhamun’ அரசரின் பயணம் தொடரும்………….

Read Full Post »

Older Posts »