Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Uncategorized’ Category

வீடு மாறி போகிறேன்

என்னை இங்கே வந்து சந்திக்கவும்.

http://vaazkaipayanam.blogspot.com/

 

 

Advertisements

Read Full Post »

மாயா நாகரிகம்- சரித்திரம்

                           1.jpg

                                      (மாயா நகர பகுதி) 

கி.- 909-ஆம் ஆண்டு, தெளிவற்ற காரணத்தோடு, 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாயா இனத்தவர்கள் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறார்கள், அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணத்தை யாருக்கும் சொல்லிக் கொள்ளவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடையவ்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்தும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.

வேண்டுதள்களும், மாய மந்திர வேலைகளும் அமைதி பெற்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் புத்திசாளிதனமும், கற்பித்தலும் காற்றோடு கலந்து போகிறது. மிச்சம் மீதி இருந்த மாயா இனத்தவர்களுக்கு எழுத்தின் மீதும் படிப்பறிவின் மீதும் கண் பார்வையற்று போகிறது. அவர்களுக்கு வாழ்க்கை நேறியும் மறந்து போகிறது. அவ்வினம் மிருகத்தன்மையை அடைகிறது. மேற் கூறியவை மெக்ஸிகோ நாட்டின் காட்டுப் பகுதியில் மர்மமாய் தோன்றி மறைந்த மாயா நாகரிக அராய்ச்சியாளர்களின் அறிக்கை.

1000 வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு ஆச்சரியமும், அற்புதமும் நிறைந்த நாகரிகம் புதைந்து கிடந்த்தை யாரும் கண்டறியவில்லை. 1839-ஆம் ஆண்டு, அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John Lloyd Stephens உதவியாளர் ஒருவரின் துணையோடு இங்கே செல்கிறார். பாழடைந்த பழமைமிக்க நகர பகுதி அங்கே உதித்து மறைந்ததை அவர் கண்டுபிடிக்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் குடி புகுந்த கட்டிடங்கள் கலைதிறன் வேலைபாடுகளோடு உருதியோடு இருக்க காண்கிறார். அடுத்ததாக அவர் ஒரு விசித்திரத்தை காண்கிறார். அவ்விட்த்தில் மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை. நீண்ட காலமாக அவ்விடம் நாதியற்று கிடந்திருக்கிறது.

அன்று முதல் அவ்விடம் ஆராய்ச்சிக்குள்ளாகிறது. ஆராய்ச்சியின் மேல் ஆராய்ச்சிகள் நடந்து புதைந்து போன மாயா இனத்தவரின் வரலாற்றை தோண்டி எடுக்கிறார்கள். மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உறுவாகியுள்ளார்கள், பல பல துரைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளர்த காலத்தில் நடந்தவை.

இந்த கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியில், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விந்தையும் உதித்தது. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்து பின்னர் எதற்காக அதைவிட்டு மறைந்தார்கள் என்பதே அவர்களின் வியப்பாகும்.

மாயா இனத்தவர்கள், அவர்களின் பெற் காலத்தின் போது உலகிற்கு பயனுள்ள பல துரைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்து கலைத்திறனும் புத்தி கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்க பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதளால் இப்பகுதி அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அழிக்கப்பட்டது.

இச்செயல் உலகிற்கு மாயா இனத்தவரை பற்றிய பல உண்மைகளை உருத்த முடியாமலும் செய்துவிட்டது. அது நமக்கு பெரும் நஷ்டமும் கூட. தற்சமயம் நமக்கு வெளிபடையாக கிடைத்திருப்பது அந்நாகரித்தை பற்றிய சிறு துளி கண்டுபிடிப்புகள் மட்டுமே. இவையாவும் அவ்விடத்தில் கிடைக்கப்பட்ட சில துண்டு எழுத்துகளில் வடிவில் கிடைத்தவையாகும்.

இந்த மர்ம நகரில் பெரும் கற்களை கொண்ட கட்டிட வேலைபாடுகள் உள்ளன, பெரிய அளவிளான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றதக்க கலைத்திறன்களாகும். இவை தற்போதய தொழில்நுட்பத்தைவிடவும் மேலானவையாகவே கருதப்படுகிறது.

எகிப்திய பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை குறிக்கிறது. இதை தவிர்த்து கட்டிடங்களின் உட்புரமும் வெளிபுரமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விசயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.  

                                                         2.jpg

                                             (கட்டிடத்தில் இருக்கும் வரைபடம்)

மாய உலகம் தொடரும்…

நன்றி.

விக்னேஸ்வரன்.

Read Full Post »